Posts

Showing posts from January, 2024

36) கோவா

Image
  கோவா (Goa) : பழைய இந்து புராணங்களின் படி இந்த பகுதி கோவே, கோவாபுரி மற்றும் கோமண்ட் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அரேபிய பூகோள ஆய்வாளர்கள் இந்த நகரை சிந்தாபூர் அல்லது சண்டாபூர் என்று அழைத்தனர். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் இதை வெல்கா கோவா என்று அழைத்தனர். போர்த்துகீசிய காலனி ஆதிக்கத்தில் இருந்தது இந்திய சுதந்திரம் பெற்றும் இந்தியாவுடன் இணைக்க போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் மறுத்தனர். பல போராட்டங்கள் இராணுவ நடவடிக்கையின் மூலம் இந்த பகுதி கி.பி.1961ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனாலும் போர்த்துகல் சர்வதேச நீதிமன்றத்தை நாடியும் இந்தியாவிற்கு சாதகமாகவே நீதி கிடைத்தது.  பனாஜி (Panaji) :  பனாஜி என்ற வார்த்தை பஞ்சனி மற்றும் காளி என்ற வார்த்தைகளில் இருந்து வந்தது. கி.பி.11ம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்து மன்னனான முதலாம் ஜெயகேசியின் கல்வெட்டில் பஞ்சனகனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கன்னடத்தில் மேற்கு கடலின் அதிபதி என்று பொருள். இந்த பெயர் மருவி போர்த்துகீசியர்கள் காலத்தில் பஞ்சிம் என்று அழைக்கப்பட்டது தற்போது பனாஜி என்று அழைக்கப்படுகிறது ...

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

Image
  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (Andaman & Nicobar Islands)  அந்தமானின் வரலாறு இராமாயண காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்பொழுது ஹண்டுமான் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் மருவி அந்தமான் என்று ஆனது. கி.பி.1ம் நூற்றாண்டில் தாலமி இந்த தீவை அகடேமன் அங்கதேமன் என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி.13ம் நூற்றாண்டில் இங்கே வந்த மார்க்கோபோலா இதை அங்கமேனியன் என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி.17ம் நூற்றாண்டில் இந்த தீவுகளுக்கு வந்த சர் ஆர்க்கிபோல்ட் பிளேயர் அந்தமானை ஒட்டியுள்ள தீவில் காடுகளை அழித்து பளத்தோட்டங்கள் காய்கறி தோட்டங்கள் அமைத்து மெல்ல ஒரு கடற்படை தளத்தை உருவாக்கினார். அந்தமானில் "காலாபானி" என்ற சிறைச்சாலை பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை அடைத்து வைப்பதற்காக நிறுவப்பட்ட சிறையாகும். காலா பானி என்பதற்கு கறுப்பு தண்ணீர் என்று பெயர். இந்த பெயர் இங்குள்ள சிறைவாசிகள் சூட்டிய பெயராகும். கருப்பு என்பது மரணத்தை குறிக்கும் குறியீடாகும் என்பதால் இங்குள்ள அடைக்கப்பட்டவர்கள் உயிரோடு தாய்நிலம் திரும்ப முடியாது என்ற காரணத்தால் "காலாபானி" எ...

34) லட்சத்தீவுகள்

Image
லட்சத்தீவுகள் (Lakshadeep) :  லட்சத்தீவுகள் என்பது மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்று. 36 தீவுக்கூட்டங்களுள் ஒரு தீவான பராலி தீவு மணல் அரிப்பின் காரணமாக நீரில் மூழ்கிவிட்டது. மொத்தம் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மொத்தம் 32 சதுர கீ மிட்டர் பரப்பளவு கொண்டது. இந்த தீவுகள் எல்லாம் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 220-440 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ளது. இந்த பிரதேசத்திற்கு கவரெட்டி தலைநகரமாக உள்ளது. கேரள மாநிலம் உயர்நீதி மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டது. லட்சத்தீவுகள் என்ற சொல்லுக்கு ஒரு லட்சம் தீவுகள் என்று சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றில் பொருள்படும்.  கி.மு.6ம் நூற்றாண்டில் இந்த தீவுகளை பற்றி புத்த மத இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளது.‌ இத்தீவுகள் சேர அரச குலங்களால் ஆளப்பட்டது. பின்னர் கி.பி.7ம் நூற்றாண்டில் வந்த அரேபியர்களால் இஸ்லாம் பரவியது. இந்த பகுதி சேரர்கள் பிறகு சோழர்கள் கடைசியில் கண்ணணூர் அரச வம்சத்தால் ஆளப்பட்டது. கத்தோலிக்க போர்த்துகீசியர்கள் கி.பி.1498ல் இங்கு வந்தனர். பின்னர் கி.பி.1545ல்...

33) மணிப்பூர்

Image
மணிப்பூர்‌ (Manipur) : இந்த நகரம் சமஸ்கிருதத்தில் மாணிபுரா (நகைகளின் நகரம்) என்றும் மணலூரா என்றும் அழைக்கப்படுகிறது. மாணி என்ற சொல்லுக்கு நகை என்றும் புரே என்ற சொல்லுக்கு தங்குமிடம்/நிலம் என்றும் பொருள். இதன்படி மணிப்பூர் என்பதற்கு "நகைகள் நிறைந்த நிலம்" என்று மொழிபெயர்க்கலாம். மணிப்பூர் பழைய நூல்களில் "கங்லிபக் " என்றும் "மிடீலிபக்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஒப்பந்தத்தில் "மெக்லி " என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றாகும். வடக்கே நாகாலாந்து தெற்கில் மிசோராம் மற்றும் மேற்கில் அசாம் என்று இந்திய மாநிலங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. இது தவிர கிழக்கே மியான்மரையும் எல்லையாக கொண்டுள்ளது. மாநிலத்தில் பரவலாக பேசப்படும் மொழியாக மெய்டே மொழி (இது மணிப்பூரி மொழி என்று கூறப்படுகிறது) உள்ளது. இங்கு இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் சம அளவில் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு மெய்டேய் மக்கள் 53% பல்வேறு நாகா மக்கள் 24% மற்றும் குகி/சோ பழங்குடியினர் 16% பேரும் மற்றவர்கள் மீதம் உள்ள 7%...

32) அருணாசல பிரதேசம்

Image
அருணாச்சல பிரதேசம் (Arunachal pradesh) அருணாச்சல பிரதேசம் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் "விடியற்காலையில் ஒளிரும் மலைகளின் நிலம்" என்று பொருள். இந்தியாவில் காட்டுமிராண்டிதனமான மாநிலம் என்று மக்களால் தவறாக மதிப்பிடப்பட்ட மாநிலமாகவும் குறைவாக அறியப்பட்ட மாநிலமாகவும் உள்ளது. அஸ்ஸாம் சமவெளியில் இருந்து அடர்த்தியான காடுகளையும் மலை ஏறுவதற்கு சாத்தியமில்லாத செங்குத்தான மலைகளையும் அதன் திபெத்திய எல்லையாக பனி மூடிய சிகரங்களாகவும் அசாத்திய இயற்கையாக இந்த மாநிலம் அமைந்துள்ளது. இந்தியா கி.பி.1987 பிப்ரவரி 20ல் தனது மாநிலங்களுள் ஒன்றாக அறிவித்தது. மேற்கில் பூட்டான் கிழக்கில் மியான்மர் (பர்மா) மற்றும் மக்மோகன் கோட்டில் வடக்கே சீனாவால் ஆக்ரமிக்கப்பட்ட திபெத்தின் பிராந்தியத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. சீனாவால் இது திபெத்தின் ஒரு பகுதி என்றும் தனது நாட்டிற்குரிய பகுதி என்றும் சர்ச்சைகளுடன் உள்ள மாநிலம் என்றாலும் சர்வதேசம் அதை அங்கீகரிக்கவில்லை. கி.பி.1962 இந்தோ-சீனா போரின் போது சீனா சில பகுதிகளை ஆக்ரமித்தாலும் பின்னர் அந்த பகுதியிலிருந்து படைகளை திரும்ப பெற்றது. பண்டைய திபெத்திய உ...

31) நாகாலாந்து

Image
  ஊரும் பேரும் காரணமும் : 31 நாகாலாந்து (Nagaland) : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. "வடகிழக்கின் ஏழு சகோதரிகளின் மாநிலம்" என்று அழைக்கப்படுவதில் ஒன்று. இந்தியாவில் மிகச்சிறிய மாநிலங்களுள் ஒன்று. இங்கு 17 பழங்குடி இனத்தவரும் பிற துணை பழங்குடி இனத்தவர்களும் உள்ளனர். ஒவ்வொரு இனத்தவர்களும் மாறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்டவர்களாக உள்ளனர். கி.பி.13ம் நூற்றாண்டிலிருந்து தான் பழங்குடி மக்களின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.பி.19ம் நூற்றாண்டிலிருந்து பிரிட்டிஷ் படைகள் தங்களது செல்வாக்கை இங்கு நிலைநிறுத்த முயன்று வந்தது. மெல்ல மெல்ல 19ம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு வந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மெல்ல மெல்ல கிறிஸ்தவம் மிஷனரிகளின் மூலம் பரவி இன்று 87% க்கும் மேலாக கிறிஸ்தவர்களாக உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நாகாலாந்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி.1957 வரை அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. மீதியுள்ள பகுதிகள் நாகா மலைகள் என்று அழைக்கப்பட்டது. சுதந்திர நாகா இராச்சியத்திற்காக நாகா தேசிய கவுன்சில் ஆரம்பிக்கப்பட...

30) திரிபுரா

Image
  திரிபுரா  இந்தியாவின் வடகிழக்கின் ஏழ சகோதரிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று . நாட்டின் 3வது சிறிய மாநிலமாகும். திரிபுராவில் 19 பழங்குடி இனங்களும் வங்காள மக்களும் உள்ளனர். ஆங்கிலம், பெங்காலி மற்றும் கோக்போரோக் ஆகியவை அதிகாரபூர்வமாக பேசப்படும் மொழிகள் ஆகும். திரிபுராவின் பழங்கால பெயர் கிராதா தேஷ் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது முழு திரிபுராவிற்குமா எந்தளவு என்று சரியாக குறிப்பிடப்படவில்லை. கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகரின் ஆட்சி கல்வெட்டிலும் இந்த பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதி பல நூற்றாண்டுகளாக த்விப்ரா இராச்சியத்தின் கீழ் இருந்தது. பின்னர் இது மாணிக்ய வம்சத்தால் ஆளப்பட்டது. திரிபுரி இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது ஹில் டிப்போரா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. மாணிக்ய வம்சத்தின் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு சமஸ்தானமாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின் இந்தியாவுடன் இணைந்தது. கி.பி.1949ல் யூனியன் பிரதேசமாக இருந்தது. கி.பி.1972ல் இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாக ஆனது. 88% கல்வியறிவு பெற்ற மாநிலம். வங்க தேசத்தின் (ம...

29) மிசோராம்

Image
  மிசோராம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. ஏழ சகோதரிகளின் மாநிலங்கள் என்று அழைக்கப்படுவதில் மிசோராமும் ஒன்றாகும். மிசோ என்பது மிசோ மொழியில் இருந்து மிசோ மக்கள் என்றும் ராம் என்றால் நிலம் என்ற பொருளில் "மிசோ மக்களின் நிலம்" என்பதாக மிசோராம் என்ற பெயர் வந்தது.‌ இன்னொரு கருத்தாக ஸோ என்பது குளிர் மண்டலம் என்றும் பொருள்படும் என்பதால் மிஸோ குளிர்மண்டல மக்களின் நிலம் என்றும் பொருள் கொள்ளலாம் என்பதாகவும் உள்ளது. நாட்டிலையே சிக்கிமிற்கு பிறகு 2வது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் இது. இதன் பரப்பளவில் 85% காடுகள் என்பதிலிருந்து இதன் இயற்கையை புரிந்து கொள்ளலாம். இதன் மக்கள் தொகையில் 95% பழங்குடி இனத்தவர்கள் தான். கி.பி.16ம் நூற்றாண்டில் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து குடியேற துவங்கியவர்கள் 18ம் நூற்றாண்டுகள் வரை தொடர்ந்து குடியேறினர். கடந்த காலங்களில் மிசோக்கள் ஆன்மிஸ்ட்கள் மற்றும் இயற்கையை வணங்கினார்கள். ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்னர் 87% பேர் தற்போது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இது நீல மலைகளின் நிலம் மற்றும் லுஷாய் ஹைலேண்டர்களின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது. பெர...

28) மேகாலயா

Image
மேகாலயா : மேகாலயா என்ற சொல்லுக்கு மேகங்களின் உறைவிடம் என்று பொருள். சமஸ்கிருத வார்த்தையான மேகா (மேகம்) ஆலயா (இருப்பிடம்) என்பதே பெயரின் விளக்கம். இந்த மாநிலம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது "கிழக்கு ஸ்காட்லாந்து" என்று பெருமையுடன் அழைக்கப்பட்டது. வடகிழக்கின் ஏழ சகோதரிகள் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. சிறந்த நீர்வளமும் மழை வளமும் விவசாயமும் கொண்ட மாநிலம். நாட்டிலையே அதிகமாக மழை பெய்யும் இடங்கள் உள்ளதும் இந்த மாநிலம் தான். இங்கு ஆங்கிலம் தான் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. இந்தியாவில் தாய்வழி பராம்பரியத்தை பின்பற்றும் மாநிலம் இது. இளைய மகளே சொத்துக்கு அதிபதியாக உள்ளார். பெற்றோரை காக்கும் பொறுப்பும் அவளுக்கே உள்ளது. காசி, காரோ மற்றும் ஜெயந்தியா ஆட்சியாளர்கள் தங்களது பகுதிகளை ஆண்டு வந்தனர். பிரிட்டிஷ் அரசு கி.பி.1835ல் அசாமுடன் மேகாலயாவை இணைந்தனர். கி.பி.1905 வங்க பிரிவினையின் போது கிழக்கு வங்காளம், அஸ்ஸாம் மாகாணத்தின் பகுதியாக மாறியது. பின்னர் கி.பி.1912ல் வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டபோது மேகாலயா அஸ்ஸாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. கி.பி.1947ல் இந்திய சுதந்திரத்தின் போது மேகா...

27) சிக்கிம்

Image
சிக்கிம் (Sikkim) : சிக்கிம் என்பதற்கு லிம்பு மொழியில் சு என்பதற்கு புதிய என்றும் கைம் என்பதற்கு அரண்மணை அல்லது வீடு என்று பொருளில் புதிய அரண்மணை (வீடு) என்று பொருள்படும். சிக்கிமின் திபெத்திய பெயர் ட்ரென்ஜோங் என்பதாகும். இதற்கு அரிசி பள்ளத்தாக்கு என்று பொருள். இந்திய இலக்கியங்களில் இந்திரகில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது போர் கடவுளான இந்திரனின் தோட்டம் என்று பொருள். சிக்கிமின் பூர்வகுடிகளான லெப்சா மக்கள் இதை நெய்-மே-எல் என்று அழைத்தனர். அதற்கு சொர்க்கம் என்று பொருள். உண்மையிலேயே இயற்கை அழகும் நீர்வளமும் வன விலங்குகளும் விதவிதமான பறவையினங்களும் கண்கவர் சூழலும் நிறைந்த இந்த மாநிலம் உண்மையிலையே சொர்க்கம் தான். மாநிலத்தின் அதிகாரபூர்வமாக மொழிகளாக ஆங்கிலம்,நேபாளி, சிக்கிமீஸ் மற்றும் லெப்சா ஆகியவைகளாக உள்ளது. இந்து மதமும் புத்த மதமும் பெரும்பான்மையாக உள்ளது. கி.பி. 17ம் நூற்றாண்டில் நாம்க்யால் ராச்சியத்தால் ஆளப்பட்டது. ஃபன்ட்சோக் நாம்க்யால் கி.பி.1642ல் முதல் முடியாட்சியை துவக்கினார். திபெத்தில் இருந்து வந்த மூன்று துறவிகள் அவரை ஆசீர்வதித்தனர். அவருக்கு பின்னர் அவரது மகன் டென்சுங் ந...