15) சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் : இன்றைய சத்தீஸ்கர் "தக்ஷின் கோசாலை" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கி.பி.1795ல் தான் சத்தீஸ்கர் என்ற பெயர் வந்தது. இந்த பகுதிகள் 36 கோட்டைகள் இருந்ததால் சத்தீஸ்கர் என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் கோட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னரும் அதே பெயரில் தான் அழைக்கப்பட்டது. காலச்சூரிகளின் காலத்தில் இந்த பகுதி 36 கர்களாக (பகுதிகள்) பிரிக்கப்பட்டதால் இந்த பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்திய சுதந்திரம் பெற்ற போது சத்தீஸ்கர் மத்திய பிரதேசம் மற்றும் பேராரின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் கி.பி.1956ல் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது இந்த பகுதிகள் மத்திய பிரதேசத்துடன் இணைந்தது. பின்னர் கி.பி.2000ல் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து சத்தீஸ்கர் என்ற இந்தியாவின் 26வது புதிய மாநிலமாக உருவானது. ராய்ப்பூர்: கல்சூரி வம்சத்து மன்னரான இராமச்சந்திரா இந்த நகரை நிர்மாணித்து ராய்ப்பூர் என்று பெயரிட்டார். சிலர் இராமச்சந்திராவின் மகனான பிரம்மதேவ் ராய் இந்த நகரை நிர்மாணித்து தனது பெயரில் ராய்ச்சூர் என்று பெயரிட்டார் என்றும் கூறுவர். கல்லாரி : இந்த கிராமத்தின் மலை உச...