13) ஓடிசா
பண்டைய காலத்தில் கலிங்கநாடு என்று அழைக்கப்பட்டது. அசோகர் கலிங்கத்து போருக்கு பின்னரே மனம் மாறி போரை வெறுத்தார் என்று நாம் பாடப்புத்தகங்களில் படித்த பகுதி இது தான். குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்ட போரை பற்றி பாடப்பட்ட கலிங்கத்துப்பரணி நூலில் குறிப்பிட்ட பகுதி தான் இன்றைய ஒடிசா. சுதந்திரத்திற்கு பின்பு ஒரிஸ்ஸா என்று அழைக்கப்பட்ட மாநிலம் தற்போது 2011 முதல் ஒடிசா என்று அறியப்படுகிறது. இங்கு பேசப்படும் மொழி ஓடியா.
ஒடிசா, ஒரிசா என்ற வார்த்தைகள் பண்டைய பிராகிருத வார்த்தையான "ஒட்ட விசயா" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஒட்ட ராஷ்டிரா என்றும் ஒடிசா பகுதியை முன்பு அழைத்தனர். இங்குள்ள மக்கள் ஓட்ட நாட்டார், ஒட்டர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பூரி கோயிலின் கல்வெட்டுகளில் இப்பகுதி ஒடிசா இராஜ்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புவனேஷ்வர் (புவனேஷ்வர்) :
புவனேஷ்வரா என்ற சொல்லுக்கு பூமியின் இறைவன் என்ற பொருள். இந்த ஊரிலுள்ள லிங்கராஜா கோயிலில் உள்ள இறைவனின் பெயரைக் கொண்டு ஊருக்கும் பெயர் வந்தது. இந்த ஊரில் ஒரு காலத்தில் 700 கோயில்கள் இருந்ததால் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்பட்டது.
கட்டாக் (கட்டாக்) :
சமஸ்கிருத பெயரான கட்டகாவில் இருந்து கட்டாக் என்று பெயர் வந்தது. இதன் பொருள் கோட்டை என்பதாகும். இங்குள்ள பண்டைய பாராபதி கோட்டையை வைத்து வந்த பெயர்.
கோனார்க் (கோனார்க்) :
கோனார்க்கா என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான கோனா மற்றும் அர்கா என்பதிலிருந்து வந்தது. கோனா என்றால் கோணம் என்றும் அர்கா என்றால் சூரியன் என்றும் பொருள். இது சூரியக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலின் பெயரிலிருந்து வந்தது.
பூரி (பூரி) :
இந்த நகரம் ஸ்ரீஷேத்திரம் என்று அறியப்படுகிறது. ரிக் வேதத்தில் புருஷமண்டமா கிராமம் என்று குறிப்பிடப்பட்ட இந்த நகரம் காலப்போக்கில் புருஷோத்தம புரி என்று அழைக்கப்பட்டு பின்னர் பூரி என்று சுருங்கியது.
பிரம்மபூர் (பிரம்மபூர்) :
இந்த ஊரிலுள்ள கோயிலில் வழிபடப்படும் தெய்வமான பிரம்மாவின் பெயரிலிருந்து ஊருக்குப் பெயர் வந்தது
தியோகர் (தியோகர்) :
தியோகர் என்பதற்கு தெய்வீகத்தின் உறைவிடம் என்ற பெயர்.
சம்பல்பூர் (சம்பால்பூர்) :
ஆரம்பத்தில் இந்த ஊர் ஹிரகண்டா என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் உள்ள பெண் தெய்வமான சமலே தேவியின் பெயரிலிருந்து ஊருக்கு பெயர் வந்தது. இந்த ஊரை சம்பலகா என்றும் சம்பலக் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ரூர்கேலா (ரூர்கேலா) :
சத்ரியின் உள்ளூர் மொழியில் இருந்து உருவானது. ரூர் என்பதற்கு உங்கள் என்றும் கேலா என்பதற்கு கிராமம் என்றும் பொருளில் உங்கள் கிராமம் என்ற அர்த்தத்தில் ரூர்கேலா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிபாட (Paripada) :
இந்த பகுதியில் வாழ்ந்த பெளரி பழங்குடி மக்களிடம் இருந்து இந்த ஊருக்கு பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
குகூர்தசரா :
பாகேல் சிங் என்ற மன்னன் இங்கு வேட்டையாட வந்த போது ஒரு முயல் நாயை கீழே அழுத்தும் நிகழ்வை கண்டதால் இங்கு நகரை நிர்மாணித்து குகூர்தசரா என்று பெயரிட்டார். குகூர் என்றால் நாய் என்றும் தசரா என்றால் பெரிய கல் துண்டு. முயல் இங்கு நாயை அழுத்தியதால் இந்த பெயர் வந்தது.
பத்ரக் (பத்ரக்) :
இந்த நகரத்தின் அமைந்துள்ள சலந்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பத்ரகாளி தேவியின் பெயரால் நகருக்கு பத்ரக் என்ற பெயர் வந்தது.
மல்கங்கிரி (Malkangiri) :
ஒரிசாவின் நந்தபூர் -ஜெய்பூர் இராஜ்ஜியத்தின் ஆட்சியாளரான சிம்ஹாத்ரி விவேக் என்பவரால் அவரது ராணிக்காக நிறுவப்பட்ட நகரம் இது. அவர் பிரெஞ்சு மற்றும் கோல்கொண்டா கூட்டுப் படைகளை வென்று மாலிக் முகமது என்ற கோல்கொண்டா தளபதியையும் போரில் கொன்றார். எனவே மாலிக் -மர்தன் (மாலிக்கை அழிப்பவர்) என்று அழைக்கப்பட்ட காரணத்தால் அவர் வலுவான கோட்டை ஒன்றை கட்டி அதற்கு மாலிகாமர்தங்கதா என்று பெயரிட்டார். அதனால் இந்த பகுதி மாலிகாமர்தங்கிரி என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இதை அவர்கள் மல்கங்கிரி என்ற பெயரில் அழைத்தனர். கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மல்யபந்தா மலையின் பெயரால் இவ்வாறு என்றும் கூறுபவர்.
கேந்திரபாரா (Kendrapara) :
பலராமர் கந்த்ராசுரனை இங்கே கொன்று அவர் மகள் துளசியை மணந்து இங்கே குடியேறினார் என்பதால் கேந்திரபாரா என்று அழைக்கப்பட்டார்.
பாணாபூர் (பானாபூர்) :
இந்த ஊரை ஆண்ட கிருஷ்ணரால் கொல்லப்பட்ட அசுர இன அரசனான பாணாசுராவின் பெயரால் பாணாபூர் என்ற பெயர் வந்தது.
ஜகத்சிங்பூர் (ஜகத்சிங்பூர்) :
கட்டாக் -பூரி சர்க்காரின் ஹமில்தாரான பகத் சிங்கின் மகனான ஜகத் சிங்கின் பெயரை தாங்கி ஜகத்சிங்பூர் என்ற பெயரை இந்த நகரம் பெற்றது.
பாலாங்கிர் (Balangir) :
இந்த பகுதியின் ராஜாவான சம்பல்பூர் பேரரசை நிறுவிய பலராம் தியோவால் கட்டப்பட்ட பலராம்கர் என்ற கோட்டையின் நகருக்கு பாலங்கிர் என்ற பெயர் வந்தது.
பரலேக்முண்டி (Parlakhemundi) :
இந்தப் பெயர் பரபலக்கண்டா என்ற சொல்லில் இருந்து வந்தது. அதற்கு அர்த்தம் சிறு துண்டு பவளம் என்பதாகும்.
டேரிங்பாடி (டோரிங்பாடி) :
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த இடத்திற்குப் பொறுப்பாக இருந்த டேரிங் சாஹேப் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் பெயரை தாங்கி கிராமம் என்ற பெயருடன் டேரிங்பாடி என்று அழைக்கப்பட்டார்.
கோரா-புட் (கோராபுட்) :
இது ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் இருந்த மரங்களின் பெயரால் தாங்கி நக்ஸ் -வோமிகாவின் குக்கிராமம் என்ற அர்த்தத்தில் ஏற்றப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
சிலர் கோராபுட் என்பது கரகா பெண்தோ என்பதன் சிதைந்த வடிவம் என்றும் ஆலங்கட்டி கல் என்றும் அதற்குப் பொருள் என்றும் அவ்வாறே பெயர் வந்தது என்றும் கூறுவர். நந்தபூர் மன்னர்களின் கீழ் பணியாற்றிய ஒரு கோரா நைகோவால் இந்த கிராமத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறுவர்.
பாலாசோர் (பாலசோர்) :
மணல் நகரம் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இந்நகரம் அரக்க அரசன் பானேஸ்வரின் தலைநகரம் என்பதால் பலேஷ்வர் என்றும் பாலாசோர் என்றும் பெயர் வந்தது.
கடலில் உள்ள நகர் என்று பொருள்படும் பாலா-இ-ஷோர் என்ற பாரசீக வார்த்தையில் இருந்து பாலாசோருக்கு அந்தப் பெயர் வந்ததாகக் கூறுவர்.
சிவபெருமானின் வடிவமான பானேஷ்வரின் பெயரால் பானேஷ்வர் என்று அழைக்கப்பட்ட பின்னர் பலேஷ்வர் என்று மாறி பாலாசோர் என்று மருவியது என்றும் கூறுவர்.
தேன்கணல் (தென்கனல்) :
இந்த பகுதியை முன்பு ஆட்சி செய்த தேங்கா என்ற சவார இன தலைவரின் பெயரை தாங்கி தேன்கனல் என்றானது.
கியோஞ்சர் (கியோஞ்சர்) :
இந்த பெயர் கெண்டு என்பதிலிருந்து வந்தது. இங்கு காணப்படும் கருங்காலி மரத்தின் பெயரும் ஜார் என்றால் நீரூற்று என்றும் இணைந்து கெண்டுஜார் என்ற பெயர் வந்தது. இந்நகரம் கியோஞ்சர்/கெண்டுஜர் என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் கெஞ்சர் என்று பெயரை உச்சரிக்கின்றனர்.
அங்குள் (அங்குல்) :
இந்த ஊர் அனுகுல் என்றும். இந்த ஊரில் இருந்த கோண்டு பழங்குடியின தலைவரான அனுகோல் என்பவரை ஒரிசாவின் ராஜா தோற்கடித்து இவ்விடத்தை கைப்பற்றினார். வீரமாக போரிட்ட கோண்டு இன தளபதி அனுகோலின் பெயரையே இந்த நகருக்கும் வைத்தார்.
ஆத்தமல்லிக் (ஆத்தமாலிக்) :
இந்த பகுதி 8 கிராமங்களை உள்ளடக்கியது. இங்குள்ள பழங்குடியினரை அடக்குவதற்காக மல்லிக் என்ற தலைவருக்கு வந்ததால் ஆத்தமல்லிக் (8 தலைவர்களின் நிலம்) என்ற பெயர் வந்தது. இதன் பழைய பெயர் ஹோண்டபா என்பதாகும்
தால்சேர் (தல்சர்) :
இந்த நகரம் இந்த பகுதியை ஆண்ட அரசரின் குடும்ப தெய்வமான தாளேஸ்வரியின் பெயரை தாங்கி தால்சேர் என்றானது.
பல்லஹாரா (Pallahara) :
இதன் பழைய பெயர் லஹடா. இந்த நகரம் சந்தோஷ் பாலால் நிறுவப்பட்டது. பூரியிலிருந்து தரிசனத்தை முடித்து வந்த இவர் சபரா, கந்தா, மல்ஹாரா மற்றும் ஜாரா மக்களால் தலைமை தாங்கப்பட்டார். இதனால் இவரின் பெயரை தாங்கி பல்லஹாரா என்ற நகரம் பெயர் பெற்றது.
ஜெய்பூர் (ஜெய்பூர்) :
இந்த நகரம் முன்பு ஜெயபுரா என்று அழைக்கப்பட்டது. அதாவது வெற்றியின் நகரம் என்ற பொருளில் சூர்யவன்ஷி அரசர்களால் ஏற்படுத்தப்பட்டது.
சந்திப்பூர் (சண்டிப்பூர்) :
இங்கு தான் பீமா மற்றும் ஜராசந்தன் போர் நிகழ்த்திய இடம் என்பதால் ஜராசந்தனின் பெயரை தாங்கி சந்திப்பூர் என்றானது.
கலஹண்டி (கலஹண்டி) :
பழங்காலத்தில் மகாகந்தாரா என்றும் கருந்த மண்டலம் என்றும் இப்பகுதி அழைக்கப்பட்டது. மகாகந்தாரா என்ற சொல்லுக்கு பெருங்குடல் என்பது அர்த்தம். கரண்டம் என்பதற்கு சொல்லுக்குக் கொருண்டம் என்பது மாணிக்கம் என்றும் கார்னெட் போன்ற விலைமதிப்பற்ற கற்களின் புதையல் என்றும் பொருள்படும்.
பெண்டிரா (பாண்டிரா) :
இந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான பெண்டிராணி பெயரை தாங்கி இந்த ஊர் வந்தது.
சோனேபூர் (சோனேபூர்) :
இங்குள்ள கோயிலில் தீவிர பக்தர் ஒருவர் மனமுருகி காரணமாக பெய்த தங்க மழையால் சுபர்னாபூர் அல்லது சோனேபூர் என்ற பெயரை இந்த ஊர் பெற்றது.
கஞ்சம் (கஞ்சம்) :
பாரசீக வார்த்தையான கஞ்ச்-ஐ-ஆம் என்ற வார்த்தையில் இருந்து வந்ததாகக் கூறுவர். உலகின் தானியக் களஞ்சியம் என்பது இதற்குப் பொருள். ஆரம்பத்தில் இந்த ஊர் கங்கோடா என்றும் கொங்கோடா என்றும் அழைக்கப்பட்டது.
கோபால்பூர் (கோபால்பூர்) :
சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த இந்த ஊர் கி.பி.18 ஆம் ஆண்டு இங்கு கட்டப்பட்ட கிருஷ்ணன் கோயிலின் காரணமாக ஊருக்கு கோபால்பூர் என்று பெயர் வைக்கப்பட்டது.
கோர்தா:
இந்த ஊர் ஆரம்பத்தில் ஜாஜர்சிங் அல்லது குராடா என்று அழைக்கப்பட்டது. குராடா என்றால் கெட்ட வாய் என்ற பொருள். பின்னர் அதை குர்தா என்று பெயர் மாற்றினர். குர்தா என்ற சொல் குரா மற்றும் தாரா என்பதிலிருந்து வந்தது. அதாவது ரேஸர் விளிம்பு என்று அர்த்தம். குர்தாவின் வீரர்கள் கூர்மையாகவும் பயங்கரமானவர்கள் ஆகவும் இருந்ததால் இவ்வாறு வந்திருக்கலாம்.
ஜார்சுகுடா:
கி.பி.12 ஆம் ஆண்டு இங்கு வாழ்ந்த ஜார் இன் தலைவரான ஜார்கிஷன் பெயரில் ஜர்குடா என்று அழைக்கப்பட்டது.
சுந்தர்கர்:
சுந்தர் என்றால் அழகான என்றும் கர் என்றால் பகுதி என்றும் பொருள். அதற்கேற்ப இந்த பகுதி அழகான இயற்கை வளம் மிகுந்த காடுகள், ஆறுகள், நீரோடைகள் மற்றும் மலைப் பகுதிகள் நிறைந்த இடமாக காணப்படுகிறது.
சத்ரபூர்:
இந்த பெயர் சத்ரா மற்றும் பூர் என்ற இரு சொற்களில் இருந்து பெறப்பட்டது. அதாவது நிவாரணம் அளிக்கும் இடம் என்ற பொருள். சத்ராபூர் என்பதற்கு காளியின் வீடு என்று பொருள்படும்.
பௌத்:
இது கெளதம புத்தரின் பெயரை தாங்கி பெளத் என்ற பெயரை பெற்றது.

Comments
Post a Comment