34) லட்சத்தீவுகள்


லட்சத்தீவுகள் (Lakshadeep) : 

லட்சத்தீவுகள் என்பது மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்று. 36 தீவுக்கூட்டங்களுள் ஒரு தீவான பராலி தீவு மணல் அரிப்பின் காரணமாக நீரில் மூழ்கிவிட்டது. மொத்தம் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மொத்தம் 32 சதுர கீ மிட்டர் பரப்பளவு கொண்டது. இந்த தீவுகள் எல்லாம் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 220-440 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ளது. இந்த பிரதேசத்திற்கு கவரெட்டி தலைநகரமாக உள்ளது. கேரள மாநிலம் உயர்நீதி மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டது. லட்சத்தீவுகள் என்ற சொல்லுக்கு ஒரு லட்சம் தீவுகள் என்று சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றில் பொருள்படும். 

கி.மு.6ம் நூற்றாண்டில் இந்த தீவுகளை பற்றி புத்த மத இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளது.‌ இத்தீவுகள் சேர அரச குலங்களால் ஆளப்பட்டது. பின்னர் கி.பி.7ம் நூற்றாண்டில் வந்த அரேபியர்களால் இஸ்லாம் பரவியது. இந்த பகுதி சேரர்கள் பிறகு சோழர்கள் கடைசியில் கண்ணணூர் அரச வம்சத்தால் ஆளப்பட்டது. கத்தோலிக்க போர்த்துகீசியர்கள் கி.பி.1498ல் இங்கு வந்தனர். பின்னர் கி.பி.1545ல் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் இந்த பகுதியை அரக்கால் என்ற முஸ்லீம் அரச குடும்பத்தால் ஆளப்பட்டது. ஆனால் அவர்கள் கண்ணணூர் கோலாத்திரி ராஜாக்களுக்கு கீழ் கட்டுப்பட்டு இருந்தனர். பின்னர் கி.பி.1787ல் திப்பு சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. கி.பி.1799ல் திப்புவின் மரணத்திற்கு பிறகு ஆங்கிலேயர் வசம் வந்தது. சுத்நதிரத்தின் போது மெட்ராஸ் மாகாணத்தில் மலபார் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. கி.பி.1956ல் மாநிலங்களின் மறுசீரமைப்பின் போது மலபார் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக மாறியது. லக்காடிவ், மினிக்காய் மற்றும் அமிண்டிவி தீவுகள் என்று அழைக்கப்பட்டது. யூனியன் பிரதேசத்தின் தலைமையகம் கி.பி.1964வரை கோழிக்கோட்டில் இருந்தது. பின்னர் கவரட்டிக்கு மாறியது. கி.பி.1973ல் இலட்சத்தீவுகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

ஆண்ட்ரோட் (Andrott) : இந்த தீவு முன்பு திவந்துரு என்று அழைக்கப்பட்டது. இலட்சத்தீவுகளில் இஸ்ஸாமை பரப்பிய உபைத்துல்லா இங்கு தான் இறந்தார். அவரது கல்லறை ஜூம்மா மசூதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கீல்தான் (Kiltan) : ஜெசெரி மொழியில் கீல் என்பதற்கு கிழக்கு என்றும் தான் என்பதற்கு இருப்பிடம் என்றும் பொருள் அமென்டிவி தீவுக்கூட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளதால் இந்த பெயர் வந்தது 

மினிக்காய் தீவு (Minicoy Island) : இந்த தீவு உள்ளூர் மொழியான திவேஹியில் மாலிகு என்று அழைக்கப்படுகிறது. மாலத்தீவில் மொழியும் இதே தான் என்பதால் மாலத்தீவுடன் இதை தவறாக புரிந்து கொண்டு பிரிட்டிஷார் மஹல் தீவு என்று பதிவு செய்தனர். இதன் பழங்கால பெயர் மஹிலாடு என்பதற்கு பெண்கள் தீவு என்று பொருள். ஆனாலும் மலிகு என்ற பெயர் அரபு வணிகரிடத்தில் இருந்து ராஜாவின் தீவு என்ற பொருளில் இருந்து பெறப்பட்டது என்றும் கூறுவர். அந்தோமான் நிக்கோபார் மாலத்தீவுகளில் நரமாமிசம் உண்பவர்கள் இருந்த காரணத்தால் மினிக்காய் இராஜ்ஜியம் என்று அழைத்தனர். பிரிட்டிஷார் இந்த தீவுக்கு வந்தபோது அவர்களுக்கு அருகில் மினிக்காய் இராஜ்ஜியம் இருப்பதாக கூற அவர்கள் மாலிகுவும் மினிகாவும் ஒரே இடம் என்று தவறாக புரிந்து கொண்டு இந்த தீவுக்கு மினிகா தீவு என்று பெயரிட்டனர். பின்னர் இது மினிகாய் தீவு என்று மாறியது. மினிகா என்பதற்கு நரமாமிசம் உண்பவர்கள் என்று பொருள்.

பிட்டி (Pitti) : பக்ஷிபிட்டி என்று அழைக்கப்படும் இந்த தீவு மனிதர்கள் வசிக்காத தீவு ஆகும். மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பக்ஷிபிட்டி என்றால் பறவை என்பதாகும். இங்கு பறவைகள் கூடு கட்டும் இடமாகும். இங்குள்ள காய்ந்த பவள இடிபாடுகளுள் பறவைகள் கூடு கட்டுகின்றன.

அமினி தீவு (Amini Island) : இந்த தீவு வடக்கே கத்மத் தீவுக்கும் தெற்கே கவரட்டி தீவிற்கும் நடுவே அமைந்துள்ளது. அமீன் என்ற வார்த்தைக்கு நம்பிக்கையுள்ளவர் என்று பொருள். முதன்முதலில் இங்கு தான் இஸ்ஸாம் பரப்பப்பட்டது. ஓவல் வடிவத்தில் அமைந்த தீவு இது.

பங்காரம் தீவு (Bangaram Island) : அகத்தி தீவின் வடகிழக்கில் உள்ள செவ்வக வடிவ பவளப்பாறை தீவாகும். பங்காரம் என்பதற்கு தங்கம் என்பது பொருள். இது தேயிலை வடிவத்தீவு ஆகும். இது புன்நகரா என்றும் அழைக்கப்படுகிறது. 

கட்மட் தீவு (Kadmat Island) : இந்த தீவு வெள்ளை மணலாலும் சுத்தமான நீரும் கொண்டுள்ள தீவு ஏலக்காய் தீவு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

பித்ரா (Bitra) : இந்த தீவு அமென்டிவி தீவுக்கூட்டத்தை சேர்ந்த ஒரு பவளப்பாறை தீவாகும். 

கல்பேனி (Kalpeni) : கண்ணணூர் தீவுக்கூட்டத்தில் உள்ள மூன்று தீவுக்கூட்டங்களுள் ஒன்று என்பதால் முன்பு கண்ணணூர் தீவுகள் என்று அழைக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் வடக்கு தீவு அரக்கல் ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விலகியபோது இந்த தீவு கண்ணணூர் இராஜ்ஜியத்திற்கு விசுவாசமாக இருந்ததால் இந்த பெயர் வந்தது 

அகத்தி தீவு (Agatti Island) : இந்த தீவு அகத்தி பவளப்பாறையின் மேல் அமைந்துள்ளது. 

கவரெட்டி (Kavaratti) : இந்த தீவு முன்பு லக்கத்தீவு என்று அழைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

31) நாகாலாந்து