31) நாகாலாந்து
ஊரும் பேரும் காரணமும் : 31
நாகாலாந்து (Nagaland) : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. "வடகிழக்கின் ஏழு சகோதரிகளின் மாநிலம்" என்று அழைக்கப்படுவதில் ஒன்று. இந்தியாவில் மிகச்சிறிய மாநிலங்களுள் ஒன்று. இங்கு 17 பழங்குடி இனத்தவரும் பிற துணை பழங்குடி இனத்தவர்களும் உள்ளனர். ஒவ்வொரு இனத்தவர்களும் மாறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்டவர்களாக உள்ளனர். கி.பி.13ம் நூற்றாண்டிலிருந்து தான் பழங்குடி மக்களின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.பி.19ம் நூற்றாண்டிலிருந்து பிரிட்டிஷ் படைகள் தங்களது செல்வாக்கை இங்கு நிலைநிறுத்த முயன்று வந்தது. மெல்ல மெல்ல 19ம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு வந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மெல்ல மெல்ல கிறிஸ்தவம் மிஷனரிகளின் மூலம் பரவி இன்று 87% க்கும் மேலாக கிறிஸ்தவர்களாக உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நாகாலாந்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி.1957 வரை அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. மீதியுள்ள பகுதிகள் நாகா மலைகள் என்று அழைக்கப்பட்டது. சுதந்திர நாகா இராச்சியத்திற்காக நாகா தேசிய கவுன்சில் ஆரம்பிக்கப்பட்டு ஆயுத போராட்டம் நடந்தது. பின்னர் இந்திய அரசாங்கம் நாகாலாந்து இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக என்று அறிவித்தாலும் கிளர்ச்சிகள் நடந்து வந்தது. பின்னர் கி.பி.1963 டிசம்பர் 1ல் நாகாலாந்து இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. ஜனாநாயக முறைப்படி தேர்தல் நடந்து கி.பி.1964ல் ஜனநாயக அரசு தொடங்கியது.
நாகாலாந்து (நாகர்களின் நிலம்) என்பதில் நாகா என்ற வார்த்தை அங்கு வசிக்கும் நாகர் இன மக்களின் பெயரால் வந்தது. நாகா என்பதற்கு பர்மிய மொழியில் காதணிகள் கொண்டவர்கள் என்றும் சிலர் துளையிட்ட மூக்கு என்றும் பொருள் கூறுகின்றனர். இந்த நாகா மக்களின் தோற்றம் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. வடக்கு மங்கோலியா, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனா பகுதியில் இருந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இவர்கள் அஸ்ஸாமிலுள்ள அஹோம்களுக்கு முன்பே வடகிழக்கு பகுதியில் குடியேறியவர்கள் என்று மட்டும் கூறமுடிகிறது.
கோஹிமா (Kohima) : இதன் பெயர் கெவ்ஹி ரா. அதாவது மலைகளில் காணப்படும் காட்டுப்பூக்கள் தாவரம் கெவி என்றழைக்கப்படுகிறது. அந்த பூக்கள் வளரும் நிலம் என்பதால் கெவ்ஹி ரா என்றழைக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் உச்சரிக்க முடியாமல் கோஹிமா என்று பெயர் மாறியது.
திமாபூர் (Dimapur) : தி என்பதற்கு நீர் என்றும் மா என்பதற்கு பெரிய என்றும் பூர் என்பதற்கு பொருள் கொண்ட நகரம் என்றும் பொருள். சிலர் திமாபூர் என்பது ஹிடிம்பாபூரின் சிதைவு என்று கூறுகின்றனர். மகாபாரதத்தில் பீமனை திருமணம் செய்து கொண்ட ஹிடிம்பியின் நகரம் என்பதால் ஹிடிம்பாபூர் என்பது சிதைந்து திமாபூர் என்றானது என்பர். சிலர் ஹிடிம்பாபூர் என்பது திம்பாபூர் என்று மருவி பின்னர் திமாபூர் என்றானது என்றும் கூறுகின்றனர்.
வோக்கா (Wokha) : வோக்கா என்றால் லோதா மொழியில் தலை எண்ணிக்கை அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று பொருள்.
மோகோக்சுங் (Mokokchung) : இதற்கு நேரடி மொழிபெயர்ப்பில் விருப்பமில்லாமல் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியே மக்கள் குழு என்று பொருள்.
சாங்சாங்மோங்கோ (changchangmongo) : இந்த கிராமத்தில் சாங் இன் மக்கள் குடியேறியதால் சாங்சாங்மோங்கோ என்ற பெயர் வந்தது. .
சாங்கென்யு (Changennyu) : சாங் என்ற சொல் சன்செஞ்யு என்ற வார்த்தையில் இருந்து வந்தது. சாங் என்பது பேச்சுவழக்கில் சாங்கென்யு என்று அழைக்கப்பட்டது. அதற்கு உயரமாக நிற்கும் அல்லது சுற்றுப்புறத்திற்கு மேலே உயர்ந்தது என்று பொருள்.
லாங்லெங் (Longleng) : இந்த ஊரின் பெயருக்கு மேகங்களின் நிலம் என்று பெயர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் இருப்பதால் இந்த பெயர் வந்ததாக கூறுவர்.
பூம் (Phum) : பூம்லா என்ற அழகிய பெண்ணின் பெயரிலிருந்து வந்தது. அதற்கு மேகங்களின் பெண்மணி என்று அர்த்தம். அந்த பெண்ணின் பரம்பரையினர் போம் என்று அழைக்கப்பட்டனர். மேகம் என்ற சொல்லுக்கு பூம் என்று பொருள்படும் வகையில் ஆங்கிலேயர்களால் இந்த பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர். போம் என்ற பெயர் பாம் என்ற வார்த்தையில் இருந்து வந்ததாகவும் அதற்கு ரப்பர் மரம் அல்லது ஆலமரம் என்று பொருள் என்றும் கூறுகின்றனர். அதாவது ஆங்கிலேயர்கள் வருகையின் போது இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்தின் நுழைவுவாயிலில் ஆலமரங்கள் நிறைய இருந்ததால் இந்த பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.
சுன்ஹிபோடோ (Zunhebeto) : சுன்ஹிபோ என்ற பூக்கள் புதர் தாவரம் இந்த மலைப்பகுதியில் அதிகமாக வளரும் என்பதால் இந்த பெயர் வந்தது. சுன்ஹிபோடோ என்பதற்கு சுன்ஹிபோ மலர்களின் மாலை உச்சி என்று பொருள். இந்த ஊர் வீரர்களின் பூமி என்று அழைக்கப்படுகிறது.
சங்க்டம் (Sangtam) : ஆங்கிலேயர் இந்த பகுதியின் மூதாதையர்களை பற்றி கேட்கும்போது சங்டாங் பகுதியில் (தற்போது சடாமி என்று அழைக்கப்படுகிறது) இருந்து வந்தவர்கள் என்று கூறினார்கள். சாங்டாங் என்பது உயரமான மேடை என்று பொருள். அதற்கேற்ப இவர்கள் உயரமான மேடையில் வசிக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் உச்சரிப்பில் சாங்டாங் என்பதற்கு சங்க்டம் என்றானது.
கோனோமா (Khonoma) : இந்த கிராமம் க்வுனோ-ரா என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் தாவரமான க்ளெளதெரா ஃப்ராக்ரான்டிசிமாவின் அங்கமி வார்த்தையினால் பெயரால் பெயர் வந்தது.
ஃபெக் (Phek) : ஃபெக் என்ற வார்த்தை phekrekedze என்பதிலிருந்து வந்தது. அதற்கு காவற்கோபுரம் என்று பொருள்.
மோன் (Mon) : இங்கு வாழும் மோன் பழங்குடியின மக்களால் இந்த கிராமத்திற்கும் அதே பெயர் வந்தது.
சுமுகெடிமா (Chumukedima) : இவன் பழைய பெயர் நெச்சுகார்ட் என்பதாகும். அதாவது நெச்சு காத்த இடம் என்று பொருள். பின்னர் இந்த இடம் சுமுகெடிமா என்று பெயர் மாற்றப்பட்டது.
சோன்லா : சோன் என்பதற்கு மான் என்றும் லா என்றால் எடுத்து செல்லப்பட்டது என்றும் பொருள். இந்த நதியின் நீரால் மான் எடுத்து செல்லப்பட்டு இருக்கலாம் என்பதால் அந்த பெயரே நிலைத்தது என்று கூறுவர்
ஜலுகி (Jalukie) : Jalukie என்ற வார்த்தை Jene Lulo Lenkie என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. அதற்கு ஜீனின் வயல் பகுதி என்று பொருள்.
விஸ்வேமா (Viswema) : இந்த இடம் பாரம்பரியமாக விஸ்வே -ரா என்று அழைக்கப்படுகிறது. அங்கமி மக்களின் மூதாதையரான கீஹோவால் கொடுக்கப்பட்ட பெயர் இது. இதற்கு "நல்லொழக்கமும் நேர்மையும் கொண்ட மக்களின் ஊர்" என்று பொருள்.
கிக்வேமா (Kickvema) : கி என்றால் வீடு என்றும் நாம் என்றால் பரம்பரையாக ஆக்ரமிப்பு செய்துள்ள மக்கள் என்றும் பொருள். அதன்படி பரம்பரையாக வீடுகளை ஆக்ரமித்துள்ள மக்கள் என்று பொருள்.
நாகினிமோரா (Naginimora) : நகரத்தின் பெயர் நாகினிமோரா என்பதிலிருந்து பெறப்பட்டது. அதற்கு அர்த்தம் நாகினி என்ற நாகா அரசியின் மரணம் என்று பொருள்.
பூகோபோடோ (Phukoboto) : இந்த இடம் முழுவதும் பூகோபோ (குவர்கஸ் -ஒரு வகை ஓக் மர குடும்பம்) என்ற மரங்களால் மூடப்பட்டு இருந்ததால் பூகோபோடோ என்று பெயர் வந்தது.
சாங்டோங்யா (Changdongya) : சாங்டாங் ஆர் என்ற ஒருவகை கரும்பு இந்த கிராமத்தில் தான் காணப்பட்டதால் நகருக்கு சாங்டோங்யா என்ற பெயர் வந்தது.
குடா (Kuda) : இந்த நகரம் முன்பு "நாகர்ஜன்" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பின்னர் குடா என்ற பெயர் மாற்றப்பட்டது.
பென்ரூ (Benru) : பென்ரூ என்பதற்கு வளமான என்று பொருள்.
லாங்சா (Longsa) : இந்த கிராமம் ஒரு உயரமான பாறையின் மேல் அமைந்துள்ளதால் "பாறைகளின் மேடை" என்ற பொருளில் லாங்சா என்ற பெயர் வந்தது.
கெழகெனோ (கோசாபோமி) : இங்கு வசிக்கும் கோஜா இன் மக்கள் கோசாபோமி என்று அழைக்கின்றனர். இதற்கு கோசாவின் பூர்வீக மக்கள் என்று பொருள். இவர்களின் குலத்தை நிறுவிய தலைவரான கோசா என்பவரின் பெயரிலிருந்து வந்தது.
இங்லான் (inglan) : இங்லான் என்பதற்கு சூரியனின் பாதை என்று பொருள்.
சாங்கிகோங் (Changikong) : சாங்கி என்பவர் உருவாக்கிய கிராமம் என்பதால் அந்த கிராமத்திற்கு சாங்கி என்ற பெயர் வந்தது. அதன் அருகிலுள்ள மலைதொடருக்கும் அவரது பெயரையே வைத்து சாங்கிகோங் என்றானது.
மெபெட்சுயிம் (Mopetchiyum) : இது கி.பி.1303ல் அஹோம் மன்னரால் உருவாக்கப்பட்டு "டெகாஹைமோங்" என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அந்த காலத்தில் மெபெட்சுயிம் (செழிப்பின் அடையாளமான மிஸ்டி கிராமம்) என்று பிற கிராம மக்களால் அழைக்கப்பட்டது.
புவ்கியு (Phuvkiu) : இந்த பெயர் இங்கு காணப்படும் புல்சிடியு என்று அழைக்கப்படும் பழம் தரும் மரத்தின் பெயரிலிருந்து வந்தது. ஆனால் இந்திய அரசாங்கம் கிராமத்தின் பெயரை சோமி என்று பதிவு செய்தது. பின்னர் தற்போது பழைய பெயரான புவ்கியு என்ற பெயருக்கே தற்போது மாற்றப்பட்டுள்ளது.
யிம்கியுங் அவுன் (Yimkiyung Avyun) : யிம்கியுங் என்ற சொல்லுக்கு தேடப்பட்டது,வந்தது மற்றும் கண்டுபிடிக்கப்பட்டது என்று அர்த்தம். ஆரம்ப குடியேற்றம் கொண்டவர்களின் வழிதோன்றல்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீள்குடியேற்றம் நடந்தததால் இந்த பெயர் வந்தது.
மெட்சிபெமா (Medziphema) : இந்த கிராமம் முன்பு காஸ்பானி என்று அழைக்கப்பட்டது. அதற்கு தாவரத்தில் இருந்து வரும் நீர் என்று பொருள். பின்னர் மெட்சிபெமா என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமம் அன்னாசிபழ கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இம்பூர் (Impur) : இம்பூர் மிஷன் மையம் என்ற அமைப்பு கி.பி.1894ல் உருவாக்கப்பட்டபோது எட்வர்ட் வின்டர் கிளார்க் என்பவரால் உருவாக்கப்பட்ட சொல் தான் இம்பூர் என்பதாகும். அதற்கு மண்ணின் மைந்தன் என அர்த்தம் கொடுத்தார்.

Comments
Post a Comment