Posts

Showing posts from February, 2024

37) தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் பிரதேசங்கள்

Image
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் போர்த்துகீசிய ஆதிக்கத்தில் இருந்த டையூ மற்றும் டாமன் இந்திய சுதந்திரத்திற்கு பின்பும் கி.பி.1961 வரை போர்ச்சுகல் பொறுப்பில் இருந்தது. பின்னர் இந்திய அரசு இராணுவ நடவடிக்கையின் மூலம் கோவா, டையூ, டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியை இந்தியாவுடன் இணைத்தது. பின்னர் டையூ மற்றும் டாமன் கோவாவுடன் இணைந்து யூனியன் பிரதேசமாக இருந்தது. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தனி யூனியன் பிரதேசமாக இருந்தது. கோவா தனி மாநிலமாக ஆன பின்னர் டையூ மற்றும் டாமன் தனி யூனியன் பிரதேசமாகவும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தனி யூனியன் பிரதேசமாகவும் இருந்தது. பின்னர் கி.பி.2020 ஜனவரி 26 அன்று தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பகுதிகளும் இணைந்து ஒரே யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது. டையூ 21 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. தனி கடற்படை தளமும் துறைமுகத்தையும் கொண்டுள்ளது. டையூ என்பது சமஸ்கிருத வார்த்தையான "த்வீப்" என்பதிலிருந்து வந்தது. அதற்கு தீவு என்று பொருள். பகவான் கிருஷ்ணரால் கொல்லப்பட்ட அசுர வம்ச...