26) அஸ்ஸாம்
அஸ்ஸாம் (Assam) அஸ்ஸாம் மாநிலம் பல்வேறு கலாச்சாரங்கள் சந்திக்கும் மாநிலம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றாக அதே சமயம் வடகிழக்கில் பெரிய மாநிலமாக உள்ளது. இன்றைய அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருந்தது. இங்கு இந்தோ-சீனா, இந்தோ -மங்கோலிய, இந்தோ-பர்மிய இந்தோ-ஈரானிய மற்றும் ஆரியர்கள் என அனைத்து இன குழுக்களும் கலந்த கலாச்சாரம் கொண்டது. இந்த மாநிலத்தின் பூர்வீக மக்கள் "அசோமியா (அசாமிஸ்)" என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மொழி அசாமி. இந்த மாநிலத்தில் ஏராளமான பழங்குடி இன குழக்கள் உள்ளன. போடோ, கச்சாரி, கர்பி, மிரி, மிஷிமி, ரபா போன்ற பழங்குடியினர் உள்ளனர். அசாமி மொழி முதன்மை மொழியாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு பழங்குடி இனத்தவரும் அவர்களது மொழியையும் பேசுகின்றனர். ஆண்டு முழுவதும் மழை பெய்யும் மாநிலமாகவும் இமயமலை தோன்றுவதற்கு முன்பே உதயமான பிரம்மபுத்திரா நதியையும் பிறப்பிடமாக கொண்ட மாநிலம் இது. தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலமான அஸ்ஸாம் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினஙக்ளின் சரணாலயமாகவும் உள்ளது. முன்பு சமுத்தி...