26) அஸ்ஸாம்
அஸ்ஸாம் (Assam)
அஸ்ஸாம் மாநிலம் பல்வேறு கலாச்சாரங்கள் சந்திக்கும் மாநிலம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றாக அதே சமயம் வடகிழக்கில் பெரிய மாநிலமாக உள்ளது. இன்றைய அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருந்தது. இங்கு இந்தோ-சீனா, இந்தோ -மங்கோலிய, இந்தோ-பர்மிய இந்தோ-ஈரானிய மற்றும் ஆரியர்கள் என அனைத்து இன குழுக்களும் கலந்த கலாச்சாரம் கொண்டது. இந்த மாநிலத்தின் பூர்வீக மக்கள் "அசோமியா (அசாமிஸ்)" என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மொழி அசாமி. இந்த மாநிலத்தில் ஏராளமான பழங்குடி இன குழக்கள் உள்ளன. போடோ, கச்சாரி, கர்பி, மிரி, மிஷிமி, ரபா போன்ற பழங்குடியினர் உள்ளனர். அசாமி மொழி முதன்மை மொழியாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு பழங்குடி இனத்தவரும் அவர்களது மொழியையும் பேசுகின்றனர். ஆண்டு முழுவதும் மழை பெய்யும் மாநிலமாகவும் இமயமலை தோன்றுவதற்கு முன்பே உதயமான பிரம்மபுத்திரா நதியையும் பிறப்பிடமாக கொண்ட மாநிலம் இது. தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலமான அஸ்ஸாம் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினஙக்ளின் சரணாலயமாகவும் உள்ளது. முன்பு சமுத்திர குப்தரின் கீழ் குப்த நாடாகவும் பின்னர் காமரூப பேரரசாகவும் அதன் பின்னர் அஹோம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது அவர்களின் வீழ்ச்சிக்கு பிறகு அஹோம்கள் வசம் வந்தது. மொகலாயர்களால் எவ்வளவு முறை முயன்றும் அஹோம்களை முறியடித்து அஸாமை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. 700 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட இவர்கள் கடைசியில் ஆங்கிலேயர்களிடம் கி.பி.1826ல் வீழ்ந்தனர். அஸ்ஸாம் அதன் அண்டை மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவற்றுடன் "ஏழு சகோதரிகள் மாநிலம் " என்றும் அழைக்கப்படுகிறது.பின்னர் நாடு விடுதலை அடைந்தவுடன் வடகிழக்கு மாகாணமாக இருந்தது. பின்னர் அஸ்ஸாம் மாநிலமாக பிறந்தது. ஆரம்பகாலங்களில் காமரூபம் என்ற பெயரில் பிரகியோதிசா என்றும் அழைக்கப்பட்டது. இங்குள்ள காமாக்யா கோயிலின் பெயரால் காமரூபம் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அஸ்ஸாம் என்ற பெயர் அழிந்து வரும் வார்த்தையான அஸாமா என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அஹோம்களின் பெயரிலிருந்து அசாம் என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
குவாஹாத்தி (Guwahati) : அசாமிய வார்த்தையான குவா என்பதை குவாகா என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்தது என்றும் இதன் பொருள் Arica nut மரங்கள் என்றும் ஹாட்டி என்பதற்கு வரிசைகள் என்று பொருளில் குவாஹாத்தி என்பதற்கு அரிக்கா நட் மரங்களின் வரிசைகள் என்று பொருள்.
சிவசாகர் (Sivasagar) : இந்த ஊரின் பழைய பெயர் கலஞ்சுபர். இங்குள்ள சிவன் கோயிலால் சிவ்பூர் என்று அழைக்கப்பட்டது. அஹோம்களின் அரசியான அம்பிகா தேவி இங்குள்ள ஆற்றின் கரையில் ஒரு பெரிய நீர் தேக்கத்தை (ஏரி) அமைத்தார். அதன் காரணமாக சிவ்சாகர் என்று பெயர் நகருக்கு நிலைத்தது.
தேஸ்பூர் (Tezpur) : பகவான் கிருஷ்ணர் உஷா-அனிருத்தா காதல் கதையின் நாயகனான அனிருத்தாவை மீட்க பாணாசுரன் உருவாக்கிய நகரின் மீது போர்தொடுத்தார். பாணாசுரன் சிவனின் பக்தர் என்பதால் சிவனை வேண்ட அவனின் உதவிக்கு வந்தார். இரு கடவுளுக்கும் இடையேயான போரில் இரத்தம் குளமாக தேங்கியது. அதனால் இரத்தகுளம் (Pool of blood) என்ற அர்த்தத்தில் நகருக்கு தேஸ்பூர் என்ற பெயர் வந்தது.
திப்ரூகர் (Dibrugarh) : திப்ரூகரின் பெயர் திபமுருகுவில் இருந்து வந்தது. திப்ரு என்ற பெயர் திப்ரு நதியின் பெயரிலிருந்து வந்தது என்றும் கூறுவர். போடா -கச்சாரியில் கொப்பளம் மற்றும் கோட்டை என்ற இரு வார்த்தைகளின் அர்த்தத்துடன் Di என்பதற்கு தண்ணீர் என்ற பொருளுடன் கோட்டையின் பெரிய ஆற்றை கொண்ட நகரம் என்ற பொருளில் நகருக்கு பெயர் வந்தது என்றும் கூறுவர்.
ஜோர்ஹாட் (Jorhat) : ஜோர் என்பதற்கு இரண்டு என்றும் ஹாட்(தொப்பி) என்பதற்கு சந்தை என்றும் பொருள். இங்குள்ள புக்டோய் ஆற்றின் எதிர்கரையில் மசோர்ஹாட் மற்றும் செளகிஹாட் என்ற இரு சந்தைகள் உள்ளதால் இந்த பெயர் வந்தது.
சில்சார் (Silchar) : சில் என்பதற்கு பாறை என்றும் சார் என்பதற்கு கரை என்ற பொருளில் ஷைலர் சோர் "பாறைக்கரை" என்பதை அழைத்து மருவி சில்சார் என்றானது.
நாகோன் (Naogaun) : முன்பு கர்கரிஜான் என்று அழைக்கப்பட்டது. உள்ளூரில் ககரி என்று அழைக்கப்பட்டது. ககரி என்றால் நாணல் என்றும் ஜான் என்றால் கால்வாய் என்றும் பொருள். இந்த நகரில் உள்ள கால்வாய் நாணல்களால் சூழப்பட்டதால் இந்த பெயர் வந்தது. ஆனால் கி.பி.17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கச்சாரிகள் இந்த பகுதியை தாக்கியதால் மக்கள் ஊரை விட்டு ஒடினர். கச்சாரிகளை விரட்டிய அஹோம்கள் மோமாய் தமுலி போர்பரூவா என்ற அதிகாரியை நியமித்து புதிய கிராமங்களை கட்டி மக்களை மீண்டும் குடியமர்த்தினர். அதனால் நா(புதிய) கெளன் (கிராமம்) என்ற பொருளில் நகருக்கும் நாகோன் என்ற பெயர் வந்தது.
துப்ரி (Dhubri) : இந்த பகுதி ஆறுகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் மூன்று புறமும் பிரம்மபுத்திரா மற்றும் கடாதார் ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.
கோல்பாரா (Goalpara) : உள்ளூர் மொழியில் பால் மனிதர்களின் கிராமம் என்ற பொருளில் நகருக்கு கோல்பாரா என்ற பெயர் வந்தது.
ஹைலகண்டி (Hailakandi) : இந்த பெயர் சைல்கண்டியிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹலம் என்பது சிறிய பிரதேசம் என்றும் குந்தியா என்பதற்கு தற்காலிக உழவு நிலம் என்றும் பொருள். இங்கு சாலி வகை நெல் பிரதான உணவுபயிராக பயிரிடப்படுகிறது .
லக்கிபூர் (Lakhipur) :இந்த நகரின் பெயர் இந்து கடவுளான லக்ஷ்மி பெயரால் உருவானது என்றும் இந்த நகரை திமாச கச்சாரி மன்னரான லக்ஷ்மி நாராயணின் பெயரால் வந்தது என்றும் இருவேறு கருத்துகள் உள்ளது.
டின்சுகியா (Tinsukia) : இந்த நகரம் ஆரம்பத்தில் சாங்மாய் பத்தர் என்று அழைக்கப்பட்டது. இந்த நகரை சர்பானந்த சிங் மன்னரின் காலத்தில் அவரின் மந்திரியான கோபிநாத் போர்பரூவா என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு மன்னரின் அறிவுறுத்தலின்படி முக்கோண வடிவ குளம் கட்டப்பட்டது. அதற்கு தினிகுனியா புகுரி (முக்கோண குளம்) என்று வழங்கப்பட்டது. பின்னர் திப்ரூ - சாடியா ரயில் பாதை அமைக்கப்பட்டு நகரம் விரிவடைய தொடங்கிய போது டின்சுகியா என்ற பெயர் நிலைத்தது.
திபு (Diphu) : திமாசா மொழியில் Di என்பதற்கு நீர் என்றும் phu என்பதற்கு வெள்ளை என்றும் அர்த்தம்.
கோலாகாட் (Golaghat) : கோலா என்பதற்கு சந்தை (மார்க்கெட்) என்றும் காட் என்பதற்கு நீர்வழி போக்குவரத்து துறைமுகம் என்றும் பொருள். முதன்முதலில் இங்கு நீர்வழி போக்குவரத்து மார்க்கெட்டை கி.பி.19ம் நூற்றாண்டில் மார்வாரி வியாபார மக்கள் அமைத்தனர். அதன் காரணமாகவே நகருக்கும் அந்த பெயர் வந்தது.
ஹாஃப்லாங்க் (Haflong) : உள்ளூர் மொழியான திமாசா மொழியில் இதற்கு "எறும்பு மலை" என்று அர்த்தம். இந்த பகுதியில் ஒடும் ஆறான ஹாஃப்லாங்க் ஆற்றின் பெயரால் வந்தது என்றும் கூறுவர்
கோக்ரஜர் (Kokrajhar) : கோக் என்பதற்கு கோச் என்றும் ரஜர் என்பதற்கு ராஜா என்றும் பொருள். அதாவது கோச் அரசின் ராஜா என்பது அர்த்தம்.
போங்கைகான் (Bongaigaon) : இந்த ஊரை சுற்றியுள்ள வன மற்றும் மலைபகுதியில் ஏராளமானகாட்டு பசுக்கள் இருந்ததாம். அவைகள் ஊரில் புகுந்து நாசம் செய்வதை தடுக்க சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த பகுதியில் கூடி அவைகளை விரட்டுவது பற்றி முடிவெடுப்பார்களாம். போன் என்பதற்கு காட்டுப்பகுதி என்றும் காய் என்பதற்கு பசுக்கள் என்றும் பொருளில் இந்த பகுதி போன் காய் காவ்ன் என்று அழைக்கப்பட்டு மருவி போங்ககைகான் என்றானது.
மங்கல்தோய் (Mangaltoi) : தர்ராங்கின் ராஜாவான பிரதாப் சிங்கேயின் மகளான மங்கல்தாஹியின் பெயரால் நகருக்கு பெயர் வந்தது.
நல்பாரி (Nalbari) : நல் என்பதற்கு ஒருவித புல் என்றும் பாரி என்பதற்கு தோடட்த்துடன் கூடிய பயிடப்பட்ட நிலம் என்று பொருள்.
பார்பெடட்டா (Barpeta) : இந்த நகரம் முன்பு தடிகுச்சி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. டாட்டி என்பதற்கு நெசவாளர்கள் என்றும் குச்சி என்பதற்கு அதிக எண்ணிக்கையிலான கிராமங்கள் என்ற பொருளில் தடிகுச்சி என்று அழைக்கப்பட்டது. அதாவது நெசவாளர்களின் இடம் என்ற பொருளில் அழைக்கப்பட்டது.
பார் என்பதற்கு மிகப்பெரிய என்றும் பெட்டா என்பதற்கு குளம் என்றும் அர்த்தம். இந்த நகரம் "சத்திரங்களின் நிலம்" என்று அழைக்கப்படுகிறது.
டெர்கான் (Dergaon) : இந்த நகரம் தேவர்கான் என்ற பெயரில் சிவனின் நகரம் என்ற பொருளில் அமைந்தது. தேவர்கான் என்பது டெர்கான் என்று மருவியது
ரங்கியா (Rangiya) : இது ரந்தியா என்ற வார்த்தையில் இருந்து வந்தது. ரன் என்றால் போர் என்றும் தியா என்றால் கொடுப்பது என்றும் அர்த்தம். போடோ மக்களுக்கும் பூடானிய மக்களுக்கும் போர் நடந்த இடமாக இருந்ததால் இந்த பெயர் வந்தது. ரந்தியா என்ற பெயர் மருவி ரங்கியா என்றானது
சோனாரி (Sonari) : கி.பி.13 ம் நூற்றாண்டில் அஹோம்களின் அரணமணைகளுக்கு வேண்டிய தங்க நகைகளை செய்வதற்கு பொற்கொல்லர்கள் தங்கிய இடம் என்பதால் சோனாபூர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி சோனாரி என்றானது .
நஜிரா (Nazira) : Na என்பதற்கு நிலம் என்றும் Zi என்பதற்கு சாய்ந்த என்றும் ra என்பதற்கு மிகவும் என்ற பொருளில் மிகவும் சாய்ந்த நிலம் என்பதால் நஜிரா என்று அழைக்கப்பட்டு அதுவே பெயராகியது
புராகாவ்ன் (Bhuragaon) : இந்த பெயர் பூர் மற்றும் காவ்ன் என்ற இரண்டு வார்த்தைகளின் சேர்க்கை என்றும் பூர் என்பதை இங்குள்ள மக்கள் போக்குவரத்திற்கு உபயோகப்படுத்துகின்றனர் என்பதால் புராகாவ்ன் என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
Bhur என்பதற்கு அசாமிய மொழியில் அரிசியின் உமி என்று பொருளிலும் பெயர் வந்திருக்கலாம் என்றும் தொடர்புபடுத்துகின்றனர்.
கருபேடியா (Kharupedia) : நகரத்தின் பெயர் Kharu என்பதிலிருந்து உருவானது. ஆரம்பத்தில் பிரமம்புத்திரா ஆறு இந்த பகுதியில் ஒடி தன் வண்டல் மண்ணால் இந்த பகுதியை வளமாக்கி கொண்டிருந்தது. தற்போது மேலா-காட் என்று அழைக்கப்படும் பகுதியை விவசாயிகள் தோண்டி கொண்டிருந்த போது கிடைத்த வளையலை இங்குள்ள தெய்வம் விட்டு சென்றதாக நம்பிக்கை கொண்டு கத்ரு என்று அழைக்கப்பட்டது. ஸ்டீபன் காட் நிறுவப்பட்ட பிறகு நகரம் வளர தொடங்க பெயர் கருபேடியா என்றானது.
கரீம்கஞ்ச் (Karimganj) : கி.பி. 18ம் நூற்றாண்டில் இங்குள்ள பஜார் ஒன்றை நிர்மாணித்த ஊரின் மிராசுதாரராக இருந்த முகமது கரீம் செளத்ரியின் பெயரால் நகருக்கு கரீம்கஞ்ச் என்ற பெயர் வந்தது
டோபோகா (Doboka) : இந்த நகர் குப்தர் கால கல்வெட்டுகளில் தவாகா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோஜாய் (Hojai) : திமாசா கச்சாரிகளின் ஒரு பிரிவான ஹோஜாய் என்ற இன் குழக்களின் பெயரால் வந்தது.ஏ
அம்குரி (Amguri) : ஆம் என்பதற்கு மாம்பழம் என்றும் குரி என்பதற்கு மாமரத்தின் வேர் என்று அர்த்தம்.
மைபோங் (Maibang) : திசாமா கச்சாரி இராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்த நகரம் இது. மாய் மற்றும் போங் என்ற இரு வார்த்தைகளின் கலவையாக வந்தது. மாய் என்பதற்கு அரிசி என்றும் போங் என்பதற்கு அதிகப்படியான என்றும் அர்த்தம். அதாவது நிறைய அரிசி கிடைக்கும் (பயிரிடும்) இடம் என்று பொருள்.
கச்சார் (Kachaar) : சில்ஹெட்டில் உள்ள கச்சார் மலையின் அடிவாரத்தில் அமைந்த ஊர் என்பதால் கச்சார் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்
கச்சார்கள் இந்த பகுதியை ஆண்ட போது தங்கள் இனத்தின் பெயரையே நகருக்கும் கச்சார் என்று பெயரிட்டனர் என்றும் கூறுவர்.
டூம் டோமா (Doomdooma) : இந்த நகரின் பெயர் இந்த நகரையும் சுற்றியுள்ள காட்டுபகுதியையும் வளமாக வைத்திருக்கும் டூம் டோமா நதியின் பெயரால் வந்தது.
தியோக் (Teok) : தியோக் என்ற வார்த்தை தாய் மொழியில் இருந்து வந்தது. அதற்கு பாலும் நெய்யும் மிகுந்த இடம் என்று பொருள்
பலஸ்பரி (Palasbari) : பலாஸ் மற்றும் பரி என்ற இரு வார்த்தைகளின் கலவையினால் பலஸ்பரி என்ற பெயர் வந்தது. அதற்கு பலாஸ் மரங்களின் தோட்டம் என்று பொருள்.
மார்கெரிட்டா (Margerita) : இந்த நகரம் முன்பு மா -கம் என்று அழைக்கப்பட்டது. அதாவது அனைத்து பழங்குடிகளின் நகரம் என்று பொருள். அஸ்ஸாம் ரயில்வே மற்றும் டிரேடிங் கம்பெனியின் பொறியாளரால் டெஹிங் நதிபாலம் கட்டப்பட்டது. அவரால் அவரது இத்தாலி நாட்டு பிரபலமான ராணியின் மார்கெரிட்டா நினைவாக இந்த பெயரை சூட்டினார். அதுவே நகருக்கும் பெயராக நிலைத்தது.
பிஸ்வநாத் சாரியாலி (Biswanath Chariali) : குப்த காசி என்ற பிரபலமாக அழைக்கப்படும் இந்த நகரம் பழங்கால பிஸ்வநாத் மந்திர் காரணமாக நகருக்கு பிஸ்வநாத் என்ற பெயரும் சாரியாலி என்பதற்கு நான்கு வழிப்பாதை சந்திப்பு என்று அர்த்தத்தில் பிஸ்வநாத் சாரியாலி என்று பெயர் பெற்றது
சாபுவா (Chabuva) : சா என்றால் தேயிலை என்றும் புவா என்றால் தோட்டம் என்றும் அர்த்தம். முதன்முதலில் டின்சுகியா நகருக்கு அருகில் தேயிலை தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதால் இந்த பெயர் வந்தது
பாக்மாரா (Bagmara) : பாக் என்றால் புலி என்றும் மாரா என்றால் கொன்றது என்றும் அர்த்தம். பாங் லாஸ்கர் என்பவருக்கும் காட்டு வங்க புலிக்கும் நடந்த நேரிடையான சண்டையில் அவர் புலியின் தாடைகளை உடைத்து கொன்றார். அதனால் இந்த நகருக்கு பாக்மாரா என்ற பெயர் ஏற்பட்டது
சோனாய் (Sonai) : சோனாய் ஆறு இந்த நகரத்தின் வழியாக பாய்ந்து நகரை வளமாக்குவதால் நகருக்கும் சோனாய் என்ற பெயர் நிலைத்தது
கலாமதி (Kalamati) : அசாமியில் கலா என்றால் கருப்பு நிறம் என்றும் மதி என்றால் மண் என்றும் பொருள். கருப்புநிற மண் கொண்ட ஓடையின் கரையில் அமைந்ததால் இந்த பெயர் வந்தது
சன்மகுரி (Chanmaguri) : இதன் பழைய பெயர் சோனமாகுரி என்பதாகும். சோன் என்பதற்கு தங்கம் என்றும் மாகுரி என்பதற்கு ஒருவகை அரிசி என்றும் பொருள். அதாவது ஒருவகை பொன் வகை அரிசி என்று பொருள். சோனமாகுரி என்பது சோன்மசகுரி என்று மருவி சன்மகுரி என்றானது
கல்காச்சியா (Galgotchiya) : இந்த நகரின் பழைய பெயர் கலிதபாரா என்பதாகும். கல் காச் என்பதற்கு வாழை மரங்கள் என்று அர்தத்ம். அதிகப்படியான எண்ணிக்கையிலான வாழை மரங்களின் காரணத்தால் நகருக்கும் வாழை மரங்கள் காணப்படும் இடம் என்ற பொருளில் பெயர் வந்தது.
போகோ (Boko) : இந்த பகுதியை ஆண்ட மன்னரான போகோய் என்பவரின் பெயரிலிருந்து போகோ என்ற பெயர் வந்தது.
அபயபுரி (Abhayapuri) : பிஜினியின் ஆட்சியாளராக இருந்த ராஜமாதா அபயேஸ்வரி தேவியின் குல தெய்வமான தேவி அபயோயமாதாவின் பெயரால் நகருக்கு அபயபுரி என்ற பெயர் வந்தது.
கோச் பீகார் (Cooch bihar) : கோச் வம்சத்தின் மூதாதையரான பழம்பெரும் அரசர் ஹாஜோ தி கோச் என்பவரின் பெயரிலிருந்து வந்தது.

Comments
Post a Comment