24) பீஹார்
பீஹார் பண்டைய காலத்தில் மகத நாடு என்று அழைக்கப்பட்டது. மெளரிய பேரரசும் குப்த பேரரசும் இன்று தோன்றிய முக்கியமான பேரரசுகள். புத்த மதத்தை தோற்றுவித்த கெளதம புத்தரும் மகாவீரரும் பிறந்தது இங்கே தான். கணித மேதை ஆர்யபட்டா, சாணக்கியர், முதல் குடியரசு தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத், மெளரிய பேரரசர் அசோகர், புத்தர், மகாவீரர், ஜனகரின் மகளான சீதா தேவி, குரு கோவிந்த் சிங் பிறந்ததும் இங்கே தான். புத்தரால் புத்த மதமும் சமண மதமும் தோன்றிய இடமும் இது தான். புகழ்பெற்ற பழைய பல்கலைகழகங்கள் நாளந்தா மற்றும் விக்ரமசீலா பல்கலைகழகங்கள் இருந்ததும் இங்கே தான். மெளரிய பேரரசு பின்னர் குப்த பேரரசு காலங்களில் கல்வி இலக்கியங்களில் செழுமையாக இருந்தது பின்னர் அன்னிய படையெடுப்புகளால் அதன் தரம் தாழ்ந்து போனது. குப்தர்களின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியதால் அந்த காலம் "இந்தியாவின் பொற்காலம்" என்று போற்றப்பட்டது. பின்னர் இடைக்காலத்தில் ஷெர்ஷா சூரியின் காலத்தில் திரும்ப ஆரம்பித்தது அப்படியே அடங்கி போனது. பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் பீஹார் போர்களின் இருப்பிடமாகவும் இருந்தது மெல்ல மெல்ல அதன் ...