24) பீஹார்
பீஹார்
பண்டைய காலத்தில் மகத நாடு என்று அழைக்கப்பட்டது. மெளரிய பேரரசும் குப்த பேரரசும் இன்று தோன்றிய முக்கியமான பேரரசுகள். புத்த மதத்தை தோற்றுவித்த கெளதம புத்தரும் மகாவீரரும் பிறந்தது இங்கே தான். கணித மேதை ஆர்யபட்டா, சாணக்கியர், முதல் குடியரசு தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத், மெளரிய பேரரசர் அசோகர், புத்தர், மகாவீரர், ஜனகரின் மகளான சீதா தேவி, குரு கோவிந்த் சிங் பிறந்ததும் இங்கே தான். புத்தரால் புத்த மதமும் சமண மதமும் தோன்றிய இடமும் இது தான். புகழ்பெற்ற பழைய பல்கலைகழகங்கள் நாளந்தா மற்றும் விக்ரமசீலா பல்கலைகழகங்கள் இருந்ததும் இங்கே தான். மெளரிய பேரரசு பின்னர் குப்த பேரரசு காலங்களில் கல்வி இலக்கியங்களில் செழுமையாக இருந்தது பின்னர் அன்னிய படையெடுப்புகளால் அதன் தரம் தாழ்ந்து போனது. குப்தர்களின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியதால் அந்த காலம் "இந்தியாவின் பொற்காலம்" என்று போற்றப்பட்டது. பின்னர் இடைக்காலத்தில் ஷெர்ஷா சூரியின் காலத்தில் திரும்ப ஆரம்பித்தது அப்படியே அடங்கி போனது. பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் பீஹார் போர்களின் இருப்பிடமாகவும் இருந்தது மெல்ல மெல்ல அதன் வளர்ச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தது. பீஹார் என்ற சொல் விஹாரா என்பதிலிருந்து மருவியது. இங்கு எண்ணற்ற புத்த சமண விஹாரைகள் இருந்த காரணத்தால் இந்த பெயர் வந்தது. சுதந்திரத்திற்கு முன்னர் வங்காளத்தின் பிரிவாக இருந்தது பீஹார் மற்றும் ஒரிசா என்று பிரிக்கப்பட்டது. பீகாரின் பழங்குடி மக்கள் இருந்த பகுதி கி.பி.2000ல் தனியாக பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலமாக மாறியது.
பாடலிபுத்திரம் (பாடலிபுத்திரம்) :
பாட்னா (பாட்னா) :
பாடலி என்பது சமஸ்கிருதத்தில் பாதலி செடியை குறிக்கும். அதாவது பாதலி செடியின் விதைகள் உடையும் என்ற பொருள். பாடலிபுத்திரா என்பதற்கு ராஜா சுதர்சனின் மகளான பாதலியின் மகன் என்று பொருள் கூறுவர். இந்நகரம் குசுமபுரா (பூக்களின் நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
பாட்னா அருகிலுள்ள படன் தேவி மந்திரியின் தெய்வமான படன் தேவியின் பெயரிலிருந்து பாட்னா உருவானது என்பர். புராண அரசர் புத்ரகா தனது ராணி பாடலிக்காக மந்திரத்தால் பாட்னா நகரை உருவாக்கினார் என்றும் ராணியின் முதல் மகனின் நினைவாக நகருக்கு பாடலிபுத்திரா என்று பெயரிட்டனர் என்றும் கூறுவர்
பூர்னியா (Purnia) :. சமஸ்கிருத வார்த்தையான பூர்ணா -ஆரண்யா என்பதிலிருந்து தோற்றுயிருக்கலாம் என்றும் அதற்கு முழுமையான காடு என்றும் பொருள். இது புராணம் என்பதன் மாற்றப்பட்ட வடிவமாக கூட இருக்கலாம்.
கோசி மற்றும் மகாநந்தா நதிகளில் வளர்ந்த புரைன் (லோட்டஸ்) என்பதிலிருந்து கூட பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
தர்பங்கா (தர்பங்கா) : இந்த நகரம் தர்பங்கி கான் என்பவரால் நிறுவப்பட்டதால் தர்பங்கா என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
சிலர் தர்பங்கா என்ற பெயர் துவார பங்க அல்லது டார் -இ-பங்கா என்பதிலிருந்து உருவானதாகும் கூறுவர். அதற்கு வங்காளத்தின் கதவு என்று அர்த்தம். வங்காளத்தின் கலாச்சாரம் இங்கே காணப்படுவதால் கூட இருக்கலாம்.
பீகார் ஷரீஃப் (பீகார் ஷரீஃப்) : பீகார் என்பது விஹாரா என்பதிலிருந்து பெறப்பட்டது. ஷரீஃப் என்பதற்கு உன்னதமானவர் என்று அர்த்தம். சூபி துறவி ஷேக் மக்தூம் ஷர்புதீன் அஹ்மத் யஹ்யா மனேரியின் இருப்பிடம் இருந்ததால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
பாலிராஜ்கத் (பாலிராஜ்கத்) : இந்த நகரம் அசுர இனத்தைச் சேர்ந்த பாலி மன்னனின் இருப்பிடமாக இருந்ததால் இந்தப் பெயர் வந்தது. பகரஹலாதனின் பேரான இவர் அறிஞர்கள் ஏழைகள் பிராமணர்களுக்கு நிதியுதவி அளித்து பிரபலமானவர். இராமாயணத்தில் மிதிலா ராஜ்ஜியத்தின் தலைநகரான மிதிலாபுரி என்று அழைக்கப்பட்ட நகரமும் இதுவே என்றும் கூறுவர்.
ஆர்ரா (அர்ரா) : சமணர்கள் கல்வெட்டின் படி அரம்நகர் (அரமாஸ்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புராணங்களின் படி அர்ரா (அரா) என்ற வார்த்தை சமஸ்கிருத ஆரண்யாவிலிருந்து வந்தது. இந்த பகுதி முன்பு அடர்ந்த காடாக இருந்த காரணத்தால் இந்த பெயர் வந்தது. இங்கு தான் விஸ்வாமித்திரரின் ஆசிரமமும் அவரின் தவத்திற்கு இடையூறாக இருந்த தாரகன் என்ற அரக்கனை ராம லட்சுமணர்களை கொன்ற இடமும் ஆகும்.
ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் வெற்றி பெற்றபோது இந்த இடத்தில் முகாமிட்டதால் இதற்கு ஷஹாபாத் (வெற்றியின் நகரம்) என்றும் பெயரிட்டார்.
முஸாஃபர்பூர் (முசாஃபர்பூர்) : கி.பி.18 ஆம் ஆண்டு இந்த நகரை நிர்மாணித்த ஃமுசாபர் கானின் பெயரால் நகருக்கு முஸாஃபர்பூர் என்ற பெயர் வந்தது.
கயா (கயா) : திரேத யுகத்தின் போது இப்பகுதியில் வாழ்ந்த கயா என்ற அசுரனின் பெயரால் கயா என்ற பெயர் வந்தது.
போத் கயா (போத் கயா) : புத்தர் இங்குள்ள போதி மரத்தடியில் தவம் செய்து ஞானம் பெற்றார். இதனால் சித்தார்த்தர் என்ற பெயர் புத்தர் என்றானது. பின்னர் சாரநாத் சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கினார். புத்தரின் சீடர்கள் வைஷாக மாத பெளர்ணமி நாளில் புத்தர் ஞானம் பெற்ற இடத்திற்கு வந்து தவம் செய்யவே மெல்ல இந்த இடத்திற்கு போதகயா என்ற பெயர் வந்தது.
பாகல்பூர் (பகல்பூர்) : பகல்பூர் என்ற பெயர் "பக்தத்புரம்" என்பதிலிருந்து உருவானது. அதற்கு அதிஷ்ட நகரம் என்று பொருள்படும். முன்பு ஒரு காலத்தில் செல்வ செழிப்பாக இருந்த காரணத்தால் இந்த பெயரில் அழைக்கப்பட்டது.
பஹவல்பூர் (பஹவல்பூர்) : சிந்து பகுதியிலிருந்து இங்கு குடியேறிய தவுத்போத்ரா பழங்குடியைச் சேர்ந்த பஹவல் கான் என்பவரால் நிறுவப்பட்டதால் நகருக்கு அவர் பெயரைக் கொண்டு பஹவல்பூர் என்ற பெயர் வந்தது.
ஷாஸராம் (சசரம்) : நகரத்தின் பெயர் சஹஸ்த்ரராமத்திலிருந்து உருவானது. அதாவது ஆயிரம் தோப்புகள் என்ற பொருள். பின்னர் இது ஷா செராய் (ராஜாவின் இடம்) என்றும் அழைக்கப்பட்டது. இந்த ஊர் ஹூமாயூனை விரட்டி சூரி வம்சத்தை தோற்றுவித்த ஷெர்ஷா சூரியின் பிறந்த ஊர்.
கைத்தார் (கைத்தார்) : இந்த இடத்தின் பழைய பெயர் சைஃப்கஞ்ச் என்பதாகும்.
பக்ஸர் (பக்ஸர்) : நகரத்தில் உள்ள அக்சர் (பாவத்தை போக்குபவர்) ஏரியின் பெயரிலிருந்து பாக்சார் என்று அழைக்கப்பட்டது மருவி பக்ஸர்.
பேசிரா என்ற முனிவர் துர்வாச ரிஷியை மிரட்டி புலி உருவம் எடுத்தவர் திரும்ப தன்னுருவுக்கு திரும்ப முடியாமல் தவித்து பெத்சிரா அக்சர் என்ற புனித குளத்தில் நீராடி மீண்டும் தன்னுருவை அடைந்தார். இதனால் இந்த இடம் வியாகராசர் என்று அழைக்கப்பட்டு பாக்சர் (புலிகளின் குளம்) என்றானது
சமஸ்திபூர் (சமஸ்திபூர்) : இந்த நகரை நிறுவிய மேற்கு வங்காளத்தின் ஹாஜி சம்சுதீன் இலியாஸ் பெயரால் சம்சுதீன்பூர் என்று அழைக்கப்பட்டது.
சரண் (சரண்) : இந்த இடத்தின் பழைய பெயர் சரங்கரண்யா (மான்களின் காடு) என்பதாகும். முன்பு இந்த இடம் முன்பு அடர்ந்த காடாகவும் மானின் இருப்பிடமாகவும் சாரங்கி ரிஷியின் இருப்பிடமாகவும் இருந்த காரணத்தால் இந்த பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.
சாப்ரா (சாப்ரா) : ராமரின் தந்தையான தசரதர் ராமரின் திருமண விழாவுக்கு வருகை தந்த நேரத்தில் இந்த நகரின் அழகால் ஈர்க்கப்பட்டு இங்கு ஆறு நாட்கள் முகாம் இட்டார். அதனால் "சே தின் கா பராவ்" என்பதன் காரணமாக சாப்ரா என்று காரணம்.
பெட்டியா (பெட்டியா) : இந்த நகரத்தில் பைண்ட் தாவரங்கள் (கரும்பு) அதிகமாக விளைவிப்பதன் காரணமாக பெட்டியா காட் என்ற பெயரால் அழைக்கப்பட்டது மருவி பெட்டியா என்றானது.
மெஹ்ஸி (மெஹ்ஸி) : கி.பி.13 ஆம் ஆண்டு டெல்லி சுல்தானகத்தில் இருந்த சன்னி முஸ்ஸீமான மிர்ஸா ஹலீம் தனது விருப்பமான மலரான மகேஷ் ரேவின் பெயரால் நகருக்கு மெஹ்ஸி என்று பெயரிட்டார்.
டானாபூர் (டானாபூர்) : இந்த நகரம் முன்பு தினாபூர் என்று அழைக்கப்பட்டது. தினாபூர் என்றால் கச்சி சமவெளியில் அமைந்துள்ள தானியங்களின் நகரம் என்று பொருள். பின்பு தினாபூர் மருவி டானாபூர் என்றானது.
நாளந்தா ( நாளந்தா) : நாளந்தா என்ற பெயர் நாகா (பாம்பு தெய்வம்) என்பதிலிருந்து வந்தது என்று யுவான்சுவாங் கூறுகிறார்.
ந ஆலம் டா என்பதற்கு உள்ளூர் மொழியில் இடையில்லா தொண்டு என்று அர்த்தம். கல்வி பணியினால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்றும் சிலர் கூறுவர்.
இந்த பகுதியில் நாலாக்கள் (தாமரை தண்டுகள்) மிகுந்து காணப்பட்டதால் அதன் காரணமாக நாளந்தா என்ற பெயர் ஏற்றப்பட்டது என்றும் கூறுவர்.
சிவன் (சிவான்) : நகரின் பெயர் இந்த பகுதியை ஆண்ட மன்னரான சிவன் நாயகன் என்பவரிடம் இருந்து வந்தது.
போஜ்புரி மொழியில் சிவன் என்பதற்கு ஒரு இடத்தின் எல்லை என்ற பொருள். இந்த நகரம் நேபாளத்தின் தெற்கு எல்லையில் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
வைஷாலி (வைஷாலி) : நகரத்தின் பெயர் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வைஷாலிக் மன்னரின் பெயரிலிருந்து நகருக்கு வைஷாலி என்ற பெயர் வந்தது.
மோதாரி (மோதாரி) : நகரின் பழைய பெயர் சம்பாரண். இது சம்பா மற்றும் ஆரண்யா என்ற இரண்டு வார்த்தைகளில் இருந்து வந்தது. சம்பக் என்ற மஞ்சள் நிறமுடைய மலரிலிருந்து சம்பா என்று சொல்லும் ஆரண்யா என்றால் காடு என்ற சொல்லில் இருந்து சம்பா மரங்கள் நிறைந்த காடு என்ற பொருள். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியர்களின் வருகையுடன் தனது சத்தியகிரகத்தை துவக்கிய இடம் இது. பின்னர் நகரின் பெயர் மாற்றம் பெற்றது. நகரின் பெயர் இரண்டு பழங்கால மன்னர்களான மோதி சிங் மற்றும் ஹரி சிங் ஆகியோரின் பெயர்களில் இருந்து மோதிஹாரி என்று கூறுகின்றனர்.
ஹாஜிபூர் (ஹாஜிபூர்) : பழங்காலத்தில் உக்காசாலா என்று அழைக்கப்பட்டது. இந்த நகரை நிறுவிய ஹாஜி ஷம்சுதீன் இல்யாஸ் ஷாவின் நினைவாக நகருக்கு ஹாஜிபூர் என்ற பெயர் வந்தது.
பெகுசராய் (பெகுசராய்) : துர்கா தேவியின் பக்தராகவும் பழைய சந்தையான சாராய் பராமரிப்பாளராகவும் இருந்த பெகு என்பவரின் பெயரால் பெகுசராய் என்ற நகருக்கு பெயர் வந்தது.
முங்கர் (முங்கர்) : புத்தரின் சீடரான மெளத்கல்யா இந்த இடத்தின் பணக்கார நடிகரை புத்த மதத்திற்கு மாற்றியதால் மெளடல் என்று அழைக்கப்பட்டது.
முங்கர் மோதகிரி என்று அழைக்கப்பட்டுள்ளது. சந்திரகுப்தர் காலத்தில் குப்தாகர்ஸ் என்று அழைக்கப்பட்டது.
இங்கு முத்கல் ரிஷி வாழ்ந்த காரணத்தால் இந்தப் பெயரைப் பெற்றதாகக் கூறுவர்.
ஆரியர்களின் வருகைக்கு முன்னர் இந்த பகுதியை ஆக்கிரமித்த முண்டாஸ் இனத்தவர் காரணமாக நகருக்கு பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
முஸ்ஸீம் துறவியான ஷா முஷ்க் நஃபாவின் கல்லறை காரணமாக நகருக்கு பெயர் வந்ததாகவும் கூறுபவர்.
சஹர்சா (Saharsa) : சஹர்சஆ என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு மகிழ்ச்சியால் நிறைந்தது என்ற அர்த்தம்.
ஜமால்பூர் (ஜமால்பூர்) : கி.பி.16ம் ஆண்டு வாழ்ந்த சூஃபி துறவியான ஜமால் பாபாவின் பெயரால் நகருக்கு ஜமால்பூர் என்ற பெயர் வந்தது.
டெஹ்ரி (Dehri) : இந்த நகரம் அங்கு ஓடும் சோன் நதியினால் டெஹ்ரி ஆன் சோன் என்ற பெயரால்.
ஜஹானாபாத் (ஜெஹனாபாத்) : மொகலாய பேரரசர் ஷாஜஹானின் மூத்த மகளான ஜஹனாரா பேகத்தின் பொறுப்பில் உள்ள நகரத்தின் நிர்வாகத்தை ஒளரங்கசீப் ஒப்படைத்த காரணத்தால் "ஜெஹனாராபாத்" என்று பெயரிடப்பட்டது மருவி ஜஹானாபாத்.
நவாடா ( நவாடா) : இந்த பெயர் நவா அவத் என்பதிலிருந்து வந்தது. அதற்கு புதிய நகரம் என்று பொருள்.
சித்தமர்ஹி (சீதாமர்ஹி) : ஜனகர் வயலில் உழுதுகொண்டிருந்த போது இந்த இடத்தில் மண் பானையில் குழந்தையான சீதா தேவி அவருக்கு கிடைத்த காரணத்தால் சீதை அவதரித்த இடத்தில் ஜனகர் ஒரு தொட்டியை தோண்டியதாகவும் அது தற்போது ஜானகி குந்த் என்றும் தெரிகிறது. சீதா தேவி பிறந்த இடமாததால் சீத்தமர்ஹி என்ற பெயர் வந்தது.
ராஜ்கிர் (ராஜ்கிர்) : இந்த நகர வரலாற்றில் கிரிவ்ராஜா, குசக்ரபுரா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிவ்ராஜா என்பதற்கு மலைகளின் அடைப்பு என்ற பொருள். சமஸ்கிருதத்தில் அரச மலை என்பதற்கான சொல்லான ராஜாக்ரிஹா என்பதிலிருந்து ராஜ்கிர் என்ற பெயர் வந்தது.
சையத்புரா (சைத்புரா) : இந்த நகரம் கி.பி.1530ல் மிர்ஸா ஃபதே அலி என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் பானிபட் யுத்தத்தில் தனக்கு உதவியாக இருந்த சையத் கான் காகர் என்பவருக்கு பரிசாக அக்பர் கொடுத்தார். அதனால் அவர் பெயரிலேயே சையத்பூர் என்ற பெயர் வந்தது.
மதுபானி (Madhubani) : மது என்பதற்கு தேன் என்றும் பானி என்பதற்கு காடு என்றும் பொருள். பக்கத்திலுள்ள காட்டிலனுள் கிடைத்த தேன் பொருட்கள் காரணமாக நகருக்கு இந்தப் பெயர் வந்தது.
லக்கிசராய் (லக்கிசராய்) : இந்த இடம் முன்பு அங்குத்திரி என்ற பெயரால் புத்த மத இலக்கியங்களில் இருந்து அறியப்படுகிறது.
ஜமுய் (ஜமுய்) : வர்தமான மகாவீரரின் சர்வ அறிவை அடையும் இடமான "ஜம்பியாகிராம்" அல்லது "ஜ்ரிபிக்கிராம்" என்பதிலிருந்து ஜமுய் என்ற பெயர் உருவானது. இன்னொரு காரணமாக ஜம்புவானியிலிருந்து உருவானதாகவும் கருதுகின்றனர்.
அராரியா (அராரியா) : பிரிட்டிஷ் ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனியின் நகராட்சி ஆணையரான அலெக்சாண்டர் ஜான் ஃபோர்ப்ஸின் பங்களா இருந்த காரணத்தால் குடியிருப்பு பகுதி என்ற பெயரில் ஆர்-ஏரியா என்று அழைக்கப்பட்டது சுருக்கமாக அராரியா என்று மாறியது.
ஃபோர்ப்ஸ்கஞ்ச் (Forbesganj) : இந்த பகுதி ஆரியாவின் துணைப் பிரிவு. நகராட்சி ஆணையரான அலெக்சாண்டர் ஜான் ஃபோர்ப்ஸின் பெயரால் ஃபோர்ப்ஸ்கஞ்ச் என்ற பெயர் வந்தது.
ஷேக்புரா (ஷீக்புரா) : 600 வருடங்களுக்கு முன்பு அடர்ந்த காடுகளாக இருந்த இந்த இடத்தை சூஃபி ஞானி ஹஸ்ரத் மக்தம் ஷா சோயப் ரஹ்மத்துல்லா அலி என்பவர் சுத்தப்படுத்தி தனது இருப்பிடமாக ஆக்கினார். அவர் பெயரிலையே நகருக்கு ஷேக்புரா என்ற பெயர் வந்தது;
ககாரியா (Khqkaria) : பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மலைபாங்கான கரடுமுரடான காடுகளால் மூடப்பட்டது. மொகலாய பேரரசர் அக்பரால் அவரது இராஜ்ஜியத்தின் வரைபடத்தை முழவதுமாக வரைய முடியவில்லை என்பதால் இந்தப் பகுதிக்கு அவர் ஃபரக்கியா என்று பெயரிட்டார். இன்றும் உள்ளூர் மக்கள் அந்த பெயரில் தான் அழைக்கின்றனர். அந்த பெயர் மருவி ககாரியா என்றானது.
கிஷன்கஞ்ச் (கிஷன்கஞ்ச்) : நவாப் முகமது ஃபக்ரூதின் காலத்தில் இந்த இடங்களை களைப்பாக ஓய்வெடுக்க வந்தவர் இந்த இடத்தின் பெயர் ஆலம்கஞ்ச் என்றும் நதியின் பெயர் ரமழான் என்றும் கேள்வி பட்டவர் இந்த இடத்திற்கு தங்க மறுக்க நவாப் இந்த இடத்தின் பகுதிகளை கிருஷ்ணா கஞ்ச் என்று பெயர் மாற்றினார். அதுவே காலப்போக்கில் கிஷன்கஞ்ச் என்று மாறியது
பவபுரி (பாவாபுரி) : நகரின் பெயர் அபாபபுரி என்றும் அறியப்படுகிறது. இதற்கு பாவமற்ற நகரம் என்ற பொருள்.

Comments
Post a Comment