35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

 


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (Andaman & Nicobar Islands) 

அந்தமானின் வரலாறு இராமாயண காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்பொழுது ஹண்டுமான் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் மருவி அந்தமான் என்று ஆனது. கி.பி.1ம் நூற்றாண்டில் தாலமி இந்த தீவை அகடேமன் அங்கதேமன் என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி.13ம் நூற்றாண்டில் இங்கே வந்த மார்க்கோபோலா இதை அங்கமேனியன் என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி.17ம் நூற்றாண்டில் இந்த தீவுகளுக்கு வந்த சர் ஆர்க்கிபோல்ட் பிளேயர் அந்தமானை ஒட்டியுள்ள தீவில் காடுகளை அழித்து பளத்தோட்டங்கள் காய்கறி தோட்டங்கள் அமைத்து மெல்ல ஒரு கடற்படை தளத்தை உருவாக்கினார். அந்தமானில் "காலாபானி" என்ற சிறைச்சாலை பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை அடைத்து வைப்பதற்காக நிறுவப்பட்ட சிறையாகும். காலா பானி என்பதற்கு கறுப்பு தண்ணீர் என்று பெயர். இந்த பெயர் இங்குள்ள சிறைவாசிகள் சூட்டிய பெயராகும். கருப்பு என்பது மரணத்தை குறிக்கும் குறியீடாகும் என்பதால் இங்குள்ள அடைக்கப்பட்டவர்கள் உயிரோடு தாய்நிலம் திரும்ப முடியாது என்ற காரணத்தால் "காலாபானி" என்ற பெயர் வந்தது.

சோழர்கள் காலத்தில் (இரண்டாம் ராஜராஜ சோழன்) இந்த நிகோபார் தீவுகள் அவர்களது கடற்படை தளமாக இருந்தது. சுமத்ரா (இன்றைய இந்தோனேஷியா) தீவுகளில் போர்தொடுக்கும்போது இந்த தீவுகளை பயன்படுத்தினார்கள். அவர்கள் இதை மா-நக்கவரம் என்று அழைத்தனர். அதற்கு பெரிய திறந்த நிர்வாண நிலம் என்று பொருள். கி.பி.13ம் நூற்றாண்டில் மார்க்கோபோலா இந்த தீவுகளை "நெகுவேரன்" என்று குறிப்பிட்டுள்ளார். மா-நக்கவரம் என்ற பெயரே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது நிகோபார் என்று ஆகியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

போர்ட் ஃபிளேயர் (Port Blair) : இது கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியான கேப்டன் ஆர்க்கிபோல்ட் பிளேயரின் நினைவாக இந்த நகரத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது

காரன்வாலீஸ் துறைமுகம் (Port Cornwallis) : இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த காரன்வாலீஸ் பிரபுவின் நினைவாக இந்த பெயர் வந்தது.

ராஸ் தீவு (Ross Island) : இந்த தீவுக்கு கடற்சார் ஆய்வாளர் டேனியல் ராஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் கி.பி.2018ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வைப்பர் தீவு (Viper Island) : முதன்முதல் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சர் ஆர்க்கிபோல்ட் ப்ளேயர் வந்த கப்பலின் பெயர் HMS viper என்பதிலிருந்து இந்த தீவு வைப்பர் தீவு என்ற பெயர் பெற்றது

திக்லிபூர் (Diglipur) : பெங்காலியில் திகா என்ற சொல்லுக்கு தீவு என்று பொருள். அதிலிருந்து திக்லிபூர் என்ற பெயர் வந்தது

ஸ்மித் தீவு (Smith island) : கடற்சார் ஆய்வாளரான ராஸ் (இவரின் பெயரிலிருந்து தான் ராஸ் தீவு பெயர் வந்தது) என்பவருடன் வந்த இன்னொரு ஆய்வாளரான ஸ்மித் என்பவரின் பெயரிலிருந்து ஸ்மித் தீவு என்று பெயர் வந்தது.

ரங்கத் (Rangat) : போர்ட் பிளேயரில் இருந்து ரங்கத்திற்கு செல்லும் வழியில் கடலின் நிறம் ப்ரவுன் நிறத்திலிருந்து டர்கைஸ் கலருக்கு (அதாவது பச்சைநீலம் கலந்த நிறம்) மாறுவதை காணலாம். ரங்கத் என்ற சொல்லுக்கு நிறம் என்பது பொருள்

வெபி கிராமம் (Webi Village) : இந்த கிராமம் கரென் இன மக்களால் நிறுவப்பட்டது. வெபி என்பதற்கு மறைக்கப்பட்டது என்று பொருள்

இந்திரா பாயிண்ட் (Indira point) : இந்த கிராமத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாக இந்திரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது முன்பு பிக்மேலியன் பாயிண்ட் மற்றும் பார்சன்ஸ் பாயிண்ட் என்று அழைக்கப்பட்டது. 

நர்கொண்டம் தீவு (Narcondam island) : இது தமிழ் வார்த்தையான நரசு-குன்றம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு நரகத்தின் குழி என்று பொருள். 

நிலச்சரிவு தீவு (Landfall island) : இந்த தீவை கடலிலிருந்து பார்த்தால் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை உணர முடியும். இதை முதலில் புயலின் போது கண்ட கப்பல் மாலுமி இவ்வாறு நிலச்சரிவு ஏற்பட்டது போல கண்டதால் ஏற்பட்ட பெயர் தான் நிலச்சரிவு தீவு.

வடக்கு சென்டினெல் தீவு (North Sentinel island) : இந்த தீவிற்கு பராம்பரிய பெயர் "சியா டாக்வேக்வே" என்பதாகும். இங்கு நரமாமிசம் உண்ணும் சென்டினெல் பழங்குடியின மக்கள் இருப்பதால் இதற்கு வடக்கு சென்டினெல் தீவு என்ற பெயர் வந்தது. இந்த தீவின் அருகில் சென்றவர்களை இங்குள்ள பழங்குடியின மக்கள் கொல்வதால் அரசு இந்த தீவிற்கு செல்ல தடை விதித்துள்ளது

குதிரைராம்பூர் (kuthirairampur) : இந்த கிராமத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் குதிராம் போஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு அவருக்கு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

நீல் தீவு (Shaheed Dweep) : கி.பி.1857ல் சிப்பாய் கலகத்தில் போது கிழக்கிந்திய கம்பெனி சார்பாக போராடிய பிரிகேடியர் ஜெனரல் ஜேம்ஸ் நீலின் நினைவாக இதற்கு நீல் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அந்தமானை கைப்பற்றியபோது இதற்கு கி.பி.1943ல் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஷஹீத் பிக்ரம் சிங் நினைவாக ஷஹீத் என்று பெயர் சூட்டினார். பின்னர் ஆங்கிலேயர் இதை மீண்டும் கைப்பற்றினர். கி.பி.2018ல் நேதாஜியை போற்றும் விதமாக இதற்கு ஷஹீத் த்வீப் என்று பெயர் சூட்டப்பட்டது.

ஹேவ்லாக் (Swaraj island) : இந்த தீவிற்கு இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ் ஜெனரல் சர் ஹென்றி ஹேவ்லேக் நினைவாக ஹேவ்லேக் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் கி.பி.2018ல் இதற்கு ஸ்வராஜ் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது.

கார் நிகோபார் (Car Nicobar) : இந்த தீவை கடற்பயணம் செய்பவர்கள் "நிர்வாணத்தின் வடக்கு நிலம்" என்று குறிப்பிடுகின்றனர். கார் நக்கவர் என்ற பெயரே இதற்கு முன்பு இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நான்கெளரி தீவு (Nancowry island) : இந்த தீவின் வாழும் மக்கள் பேசும் மொழியான நான்கெளரி என்பதிலிருந்து தீவிற்கும் அதே பெயர் வந்தது

சிவப்பு தோல் தீவு (Red skin island) : இந்த தீவின் கடற்கரை பிரதேசத்தில் காணப்படும் சிவப்பு நிற பவளப்பாறைகளின் காரணத்தால் தண்ணீரின் தோற்றம் அவ்விதமே காணப்படும் என்பதால் தீவிற்கு சிவப்பு தோல் தீவு என்ற பெயர் வந்தது

கிளித்தீவு (Parrot island) : இந்த தீவிற்கு இங்குள்ள மாங்ரோவ் மரத்தின் இலைகளை உண்ண வரும் நூற்றுக்கணக்கான கிளிகளின் காரணத்தால் இதற்கு கிளித்தீவு என்ற பெயர் வந்தது

ஸ்டீவர்ட் தீவு (Stewart island) : இந்த தீவு ஸ்டீவர்ட் சவுண்ட் கம்பெனிக்கு சொந்தமான தீவு என்பதால் இந்த பெயர் வந்தது

கோல்ப்ரூக் தீவு (Colebrooke island) : இந்த தீவை ஆர்க்கிபால்ட் பிளேயருடன் ஆய்வு செய்த ராபர்ட் ஹைட் கோல்ப்ரூக் நினைவாக கோல்ப்ரூக் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது.

சாதம் தீவு (Chatham island) : இந்த தீவில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட சாதம் மர அரவை கம்பெனியின் பெயரால் தீவிற்கும் பெயர் வந்தது

லாரன்ஸ் தீவு (Lawrence island) : கி.பி.‌1864-69 வரை இந்தியாவின் வைஸ்ராயாக பணியாறறிய சர் ஜான் லாரென்ஸின் நினைவாக தீவிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது

அவுட்ராம் தீவு (Autram island) : இந்த தீவிற்கு லெப்டினன்ட் ஜெனரல் ஜேம்ஸ் அவுட்ராம் நினைவாக அவுட்ராம் தீவு என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஹென்றி லாரென்ஸ் தீவு (Henry Lawrence island) : இந்த தீவிற்கு பிரிகேடியர் ஜெனரல் சர் ஹென்றி மார்கோன்றி லாரென்ஸ் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது

பீல் தீவு (Peel island) : கி.பி.1857ல் சிப்பாய் புரட்சியில் இறந்த ராயல் நேவியின் கேப்டன் சர் வில்லியம் பீலின் நினைவாக பீல் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது

வில்சன் தீவு (Wilson island) : இந்த தீவு பிரிகேடியர் கமாண்டர் சர் ஆர்ச்டேல் வில்சனின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது

நிக்கல்சன் தீவு (Nicholson island) : இந்த தீவிற்கு கிழக்கிந்திய கம்பெனியின் பிரிகேடியர் ஜெனரல் ஜான் நிக்கல்சன் நினைவாக நிக்கல்சன் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது

ரோஸ் தீவு (Rose island) : இந்த தீவிற்கு ஃபீல்ட் மார்ஷல் ஹக் ரோஸின் நினைவாக ரோஸ் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது.

கிதார் தீவு (Guitar island) : இந்த தீவின் அமைப்பு கிதார் இசைக்கருவியின் வடிவமைப்பை போன்று இருப்பதால் இதற்கு கிதார் தீவு என்ற பெயர் வந்தது

Comments

Popular posts from this blog

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து