23) மத்தியபிரதேசம்
மத்தியபிரதேசம் புவியியல் ரீதியாக இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இம்மாநிலம் மத்தியப்பிரதேசம் என பெயர் பெற்றது. கிமு 6 ஆம் ஆண்டு உஜ்ஜையினி நகரம் தான் மால்வா என்றழைக்கப்படும் அவந்தி நாட்டின் தலைநகராக இருந்தது. சந்திரகுப்த மெளரியர் ஆட்சியில் அவரது மகத பேரரசின் கீழ் இருந்தது. பின்னர் குசானர்கள், சாதவாகனர்களின் கீழ் வந்தது.பின்னர் குப்த பேரரசும் வாகாடகப் பேரரசும் ஆட்சி செய்தன. பின்னர் ஹர்ஷரும் அவருக்கு பின்னால் இராஷ்டிரகூடர்களும் பரமார பேரரசும் சண்டேலர்களும் ஆண்டனர். பின்னர் 13 ஆம் ஆண்டு தில்லி சுல்தான்களின் ஆட்சியில் 16 ஆம் ஆண்டு மொகலாய பேரரசும் ஆண்டது. பின்னர் 18 ஆம் ஆண்டு மராத்திய பேரரசுக்கு பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இந்திய பிரிவினைக்கு பிறகு கி.பி.1950ல் புந்தேல்கண்ட், சத்தீஸ்கர், போபால் சமஸ்தானம், விதர்பா பகுதிகளை கொண்டு மத்திய பாரதம், விந்திய பிரதேசம் உருவானது. பின்னர் கி.பி.1956ல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் சமஸ்தான உள்ளடக்கிய மத்திய பிரதேச மாநிலங்களை உருவாக்கியது. இந்தியாவின் மாநிலமாக விளங்கி வந்த மத்திய பிரதேசம் கி.பி.2000ல் சத்தீ...