17) ஜம்மு, காஷ்மீர் & லடாக்


ஜம்மு , காஷ்மீர் & லடாக்

பூலோக சொர்க்கம் என்றால் எல்லோரின் பதிலும் காஷ்மீர் என்று தான் இருக்கும். உள்ளூர் நம்பிக்கையின் படி ஜம்மு என்ற பெயர் அதை கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆண்ட மன்னரான ஜம்புலோச்சன் என்பவரிடம் இருந்து வந்தது என்று கூறுகின்றனர். ஜம்மு நகரத்தின் பெயர் 3000 ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். லடாக் என்பதன் வார்த்தையில் La என்பதற்கு கடக்கும் மலை என்றும் dakh என்பதற்கு தேசம் என்ற பொருளில் மலைகளை கடக்கும் தேசம் என்று பொருள். காஷ்மீர் என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான கஷ்மிரா என்பதிலிருந்து வந்தது என்றும் அதற்கு நீர் வடிந்து உலர்ந்த இடம் என்றும் பொருள். ஆனால் இன்னொரு சாரார் இந்த பகுதியில் மக்களை குடியமர்த்திய காஷ்யப முனிவரின் பெயரிலிருந்து காஷ்மீர் என்ற பெயர் வந்தது என்று கூறுகின்றனர். வேத காலங்களிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பும் காஷ்மீர் இலக்கியம் விஞ்ஞானம் செழித்து வளர்ந்தது. ஆதி சங்கரர் முதல் இராமானுஜர் வரை காஷ்மீர் சென்றும் சமய சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இடையில் படையெடுப்புகளால் காஷ்மீர் அதன் சுதந்திரத்தை இழக்க தொடங்கியது. கி.பி.1846ல் முதல் ஆங்கிலோ-சீக்கிய போரின் முடிவில் காஷ்மீர் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஆங்கிலேயர்கள் அதை அப்போதைய ஜம்மு அரசர் குலாப் சிங்கிற்கு 27 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீர்,வடக்கு நிலங்கள் மற்றும் லடாக் பகுதிகளை விற்றனர். அவருக்கு பின்னர் அவரது மகன் ரண்பீர் சிங் கி.பி.1857ல் காஷ்மீர் மன்னரானார். கி.பி. 1925ல் ரண்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் காஷ்மீர் மன்னரானார்.இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் காஷ்மீர் தனி நாடாக இருகக்வே அதன் மன்னரான ஹரி சிங் விரும்பினார். பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்கள் என்பதால் கவர்னர் ஜெனரலான மெளண்ட்பேட்டன் பிரபு காஷ்மீர் பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்றார். ஆனால் ஹரி சிங் சுதந்திர நாடாகவே இருக்க விரும்ப ஆனால் பாகிஸ்தானின் குள்ளநரித்தனமான ஆதிவாசிகளின் படையெடுப்பால் பதான் கூட்டத்தாரிடம் சிக்கி காஷ்மீர் அதன் கதறலை தொடங்கியது. இந்தியா காஷ்மீரை பாகிஸ்தான் படையெடுப்பாளர்களிடம் இருந்து மீட்டது. இந்தியாவுடன் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக இணைந்தது. அதன்படி மற்ற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க தடை இருந்தது. ஒயாத தாக்குதல்கள் காஷ்மீரின் சிரிப்பை மறக்க அடித்தது. இந்திய அரசு கி.பி.2019 அக்டோபர் 31முதல் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. காஷ்மீர் மற்றும் ஜம்மு இணைந்த ஒன்றியமாகவும் லடாக் தனி ஒன்றியமாகவும் அறிவித்தது. 

ஶ்ரீநகர் (Srinagar) : கல்ஹனர் எழுதிய இராஜதரங்கிணியில் இருந்து இருவிதமான கருத்துக்கள் வருகிறது. செல்வத்திற்கு அதிபதியான இந்து கடவுளான ஶ்ரீலக்ஷ்மியின் பெயரால் இந்த நகர் ஶ்ரீநகர் என்றும் அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.
சூரிய கடவுளின் நகரமாக இது சூர்யா நகரம் என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். ஏனெனில் ஶ்ரீநகர் என்ற பெயர் வருவதற்கு முன்பு சூர்யா நகரம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

அனந்த்நாக் (அ) இஸ்லாமாபாத் : அனந்தநாக் என்ற பெயர் விஷ்ணு கடவுளின் சயன படுக்கையாக இருந்த அனந்தா என்ற பாம்பின் பெயரால் வந்தது நிலமாதா புராணம் கூறுகிறது.
இஸ்லாமாபாத் என்ற பெயர் இங்கே ஒரு அழகான தோட்டத்தை அமைத்த மொகலாய கவர்னரான இஸ்ஸாம் கானின் பெயரால் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். முஸ்லீம்கள் இந்த நகரின் பெயரை இஸ்ஸாமாபாத் என்றும் இந்து மற்றும் சீக்கியர்கள் அனந்த்நாக் என்றும் அழைப்பது இன்றும் வழக்கில் உள்ளது.

கோகெர்நாக் (Kokernag) : காஷ்மீரி மொழியில் கோக்கர் என்பது கோழி என்றும் நாக் என்பதற்கு நீருற்று என்றும் பொருள். மலையின் அடிவாரத்தில் புறப்படும் நீரூற்றுகள் கோழியின் காலை ஒத்திருப்பதால் இந்த பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.

கோக்கர் என்றால் கோழி என்றும் நாக் என்றால் பாம்பு என்றும் இன்னொரு கோட்பாடு உண்டு.

கோ என்றால் மலை நாக் என்றால் நீருற்று என்பதிலிருந்து மலையில் இருந்து புறப்பட்டு வரும் நீருற்றுகள் என்று அடிப்படையில் இந்த பெயர் வந்தததாகவும் கூறுவர்.

புல்வாமா (Pulwama) : இது பழங்காலத்தில் பன்வாங்கம் என்று அழைக்கப்பட்டு பின்னர் புல்காம் என்று அழைக்கப்பட்டது . பின்னர் மருவி புல்வாமா என்று அழைக்கப்படுகிறது. புல்வாமா என்பதற்கு காஷ்மீரி மொழியில் நன்றாக ஓன்றிணைக்கப்பட்ட என்று அரத்தம்.

ஜம்மு (Jammu) : ஜம்மு மன்னராக இருந்த ஜம்புலோச்சன் ஒருமுறை வேட்டைக்கு இந்த பகுதிக்கு வந்தபோது ஒரே ஓடையில் அருகருகே ஆடும் சிங்கமும் நீர் அருந்திக்கொண்டு இருந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டு இங்கே நகரை நிர்மாணித்தார். அதற்கு ஜம்பு என்று பெயரிட காலப்போக்கில் அது ஜம்மு என்று மருவியதாக கூறுகின்றனர். 

லக்கன்பூர் (Lakhenpur) : பழைய பெயரான லக்ஷ்மண்பூர் என்பதிலிருந்து மருவி லக்கன்பூர் என்றானது.

பாதர்வா (Bhaderwah) :பாதர்வா என்பதற்கு பாம்புகளின் நிலம் என்அறு பொருள். இந்த நகரத்தின் பழைய பெயர் பாதர்காசி என்பதாகும். அது இந்து கடவுளான பத்ரகாளி என்பதிலிருந்து வழங்கப்பட்டது .

சுரன்கோட் (Surankote) : சுரன் என்ற நதிக்கரையில் அமைக்கப்பட்ட கோட்டை என்பதால் நகருக்கும் சுரன்கோட் என்ற பெயர் வழங்கிற்று.

பாரமுல்லா (Baramulla) : இந்த பெயர் சமஸ்கிருதத்தில் வராஹமுலா என்று அழைக்கப்பட்டது. அதாவது வராஹ் என்பதற்கு பன்றி என்றும் முலா என்பதற்கு ஆழமான கடைவாய்பல் என்று பொருளில் வராஹமுலா என்று அழைக்கப்பட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு சதிசரஸ் என்ற ஏரியில் நிரப்பப்பட்டு இருந்தது என்றும் அதை ஜலோத்பவ என்ற அரக்கனின் ஆக்ரமிக்கப்பட்டு இருந்ததாகவும் விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து மலையை தாக்கினார் என்றும் இன்னொரு கருத்தும் உண்டு. வராஹமுலா என்ற பெயர் மருவி பாரமுலா என்றானது.

குல்மார்க் (Gulmarg) : பாரசீக மொழியில் குல் என்றால் பூக்கள் என்றும் மார்க் என்றால் புல்வெளி என்றும் பூக்களின் புல்வெளி என்ற அர்த்தத்தில் நகருக்கு குல்மார்க் என்ற பெயர் வந்தது.

குல்கம் (Kulgam) : இந்த நகரின் பழைய பெயர் ஷாம்போரா. கி.பி.13ம் நூற்றாண்டில் சையத் ஹூசைன் ஷிம்னானி இதை குல்கம் என்று பெயரிட்டார். சமஸ்கிருதத்தில் குல் என்றால் குலம் என்றும் கிராம் என்றால் கிராமம் என்ற பொருளில் நகருக்கு பெயர் வந்தது. பாரசீகத்தில் குல் என்றால் பூக்கள் என்ற அர்த்தத்தில் பூக்களின் கிராமம் என்ற அர்த்தத்தில் பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

கந்தர்பால் (Ganderbal) : நகரில் உள்ள கந்தர்பவன் நீரூற்றின் பெயர் காரணமாக நகருக்கு கந்தர்பால் என்ற பெயர் வந்தது.

பஹல்காம் (Pahalgam) : புஹெய்ல் என்றால் மேய்ப்பவர் என்றும் கோம் என்றால் கிராமம் என்ற பொருளில் புஹெய்ல்கோம் மருவி பஹல்காம் என்றானது என்று கூறுகின்றனர்.

பெயில் என்பதற்கு காளை என்றும் காவ்ன் என்பதற்கு கிராமம் என்ற பொருளில் காளையின் கிராமம் என்ற பொருளில் பெயில் காவ்ன் என்று அழைக்கப்பட்டது. சிவன் அமர்நாத் குகையை அடைவதற்கு முன்னர் தனது காளையை விட்டு இறங்கியதால் இந்த பெயர் வந்தது என்று இந்துமத புராணங்கள கூறுகிறது.

சோஃபோர் (Sopore) : அவந்தி வர்மனின் நீர்பாசன அமைச்சரான சூய்யா என்பவரால் நிறுவப்பட்ட காரணத்தால் சுய்யா பூர் என்று அழைக்கப்பட்டு மருவி சோபோர் என்றானது.

பண்டிப்பூர் (Bandipore) : நகரின் பெயர் நாட்டுபுற கதைகளின் படி வுலர் பண்ட் என்பதிலருந்து வந்தது. அதாவது உள்ளூர் நாட்டுபுற இசைக்கருவியான ஃபேன்ட் என்பதிலிருந்து வந்தது என்று கூறுகின்றனர்.

சோபியான் (Shopian) : ஷா-பயன் (அரச தங்குதல்) என்ற வார்த்தையின் திரிபே ஷோபியான்‌‌ என்று கூறுகின்றனர். உள்ளூர் மக்கள் பனி காடு என்று பொருள்படும் வகையில் "ஷின்-வான்" என்று பெயரிடப்பட்டது மருவி ஷோபியான் என்றானது என்றும் கூறுகின்றனர்.

தனமண்டி (Dhanamandi) : அந்த காலத்தில் வர்த்தக சந்தையாக (மண்டி) இருந்த காரணத்தால் தனமண்டி என்ற பெயர் ஏற்ப்டுருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஹிரா நகர் (Hira nagar) : ராஜா குலாப் சிங்கின் மருமகனான ராஜ்புத் ராஜா ஹிரா சிங்கின் பெயரால் இந்த நகரத்திற்கு ஹிராநகர் பெயர் வந்தது 

ரஜோரி (Rajouri) : இதன் பழைய பெயர் ராஜாபுரி என்பதாகும். அதற்கு ராஜாக்களின் பூமி என்று பொருள். அதிலிருந்து பெயர் மருவி ரஜோரி என்றானது.

பிஜ்பெஹாரா (Bijbehara) : சிவன் கோயிலான விஜயேஸ்வர் ஆலயத்திலிருந்து விஜ்ப்ரோர் என்றும் விக்போர் என்றும் அழைக்கப்பட்டு தற்போது பிஜ்பெஹாரா என்று அழைக்கப்படுகிறது.

வெரிநாக் (Verinag) : இந்த நகரின் பெயர் பக்கத்து கிராமமான வெர் என்பதிலிருந்தும் நீருற்று என்றபதற்கான வார்த்தையான நாக் என்பதிலிருந்து வந்தது. 

பட்டன் (Pattan) : புகழ்பெற்ற அவந்திவர்மனின் மகனான சங்கவர்மனால் இந்த நகரம் நிறுவப்பட்டது. முக்கியமான பாரமுல்லா செல்லும் வழியில் இந்த நகரம் வருவதால் பதன் 'தி பாத் ' என்ற பெயரில் நகருக்கும் அவ்வாறே பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கிஷ்த்வர் (Kishtwar) : இராஜதரங்கிணியில் இந்த நகரின் பெயர் கஷ்தவதா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரம் குங்குமப்பூ மற்றும் நீல நிற மாணிக்கம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது.

போனியார் (Boniyar) : உள்ளூர் மக்களால் பவானி தெய்வத்திற்கு ஏற்பட்ட கோயிலான பவானியார் என்ற பெயரின் திரிபே ஊருக்கும் ஏற்பட்டது என்று கூறுவர்.

ராம்பூர் (Rampur) : இந்த நகரை உருவாக்கிய ராஜா ராம் சிங் என்பவரின் பெயரை தாங்கி ராம்பூர் என்று அழைக்கப்படுகிறது.

பூன்ஜ் (Poonch) : காஷ்மீரின் வரலாற்றை விளக்கும் இராஜதரங்கிணியில் பாராநோட்சா என்று நகரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. அதிலிருந்து மருவி பூன்ஜ் என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது.

சாரார்-இ-ஷெரீப் (Charar-i-sheriif) : இந்த நகரத்திற்கு இங்குள்ள மசூதியில் பிரார்தனையை ஆரம்பித்த புகழ்பெற்ற காஷ்மீரி துறவியான சாரார்-இ-ஃஷரீப் ஷேக் நூரூதீன் வாலி பெயரால் பெயர் வந்தது

அவந்தி போரா (Awantipore) : இந்த நகரம் நகரையும் இங்கு கோயில்களையும் கட்டிய மன்னனான அவந்தி வர்மன் பெயரை தாங்கி அவந்தி போரா என்று அழைக்கப்படுகிறது.

டோதா (Dodha) : உள்ளூர் மொழியில் டோடி என்று அழைக்கப்படும் அபின் செடியின் பெயர் காரணமாக டோதா என்று பெயர் வந்தது 

மனஸ்பால் (Manasbal) : நகரின் பெயர் மானசரோவர் நதியில் வழங்கப்பட்டது.

ரியாஸி (Reasi) : நகரின் பழைய பெயர் ரஸ்யால் என்பதாகும். நகரம் ராஜ்புத் மன்னரான பீம் தேவ் ரஸ்யாலால் நிறுவப்பட்ட காரணத்தால் அவரின் பெயரை பெற்று மருவி ரியாஸி என்றானது.

பீர் பஞ்சால்: பஞ்சால் என்பது பாஞ்சால என்பதின் சமஸ்கிருத திரிபு வார்த்தை. பாஞ்சாலர்கள் காஷ்மீரை ஆண்டனர் என்பதன் அடையாளமாக பீர் பஞ்சால் பகுதி இருப்பதாக கூறுகின்றனர்.

பனிஹால் : காஷ்மீரி மொழியில் இதற்கு பனிப்புயல் என்று பொருள். சில பழைய நூல்களில் இந்த இடம் "தேவ்கோல்" அதாவது கடவுளின் இருப்பிடம் என்று கூறப்பட்டுள்ளது.

சிலர் பா என்றால் பன்னிரண்டு என்றும் நல்ஹே என்றால் ஆறு என்றும் பொருள்படும் வகையில் 12 சிற்றாறுகள் இணைந்து பாய்வதன் காரணமாக இந்த பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.

பாரசீக மொழியில் நிஹால் என்றால் பசுமை என்றும் பனிஹால் என்பதற்கு நித்திய பசுமை என்றும் பொருளால் அமைந்தது என்றும் கூறுகின்றனர்.

ஆர்எஸ் புரா (RS pura) : இந்திய சுதந்திரத்திற்கு முன்பு நவன்ஷேஹர் என்று அழைக்கப்பட்ட நகரம் காஷ்மீரை ஆங்கிலேயரிடம் 27 லட்சம் கொடுத்து வாங்கிய ஜம்மு மன்னர் குலாப் சிங்கின் மகனான ரண்பீர் சிங் நினைவாக ஆர்எஸ் புரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரை உருவாக்கிய அவரின் பெயரை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நகருக்கு அழைக்கப்பட்டது.

அக்னூர் (Aknoor) : மொகலாய அரசர் ஜஹாங்கீரின் கண்பார்வை பாதிக்கப்பட்ட போது காஷ்மீருக்கு வந்தபோது இந்த நகரின் புதிய காற்றால் கண்கள் குணமடைந்ததாகவும் அதனால் நகரை ஆன்கோ-கா-நூர் (கண்களின் ஒளி) என்று அழைத்தார். அதிலிருந்து அக்னூர் என்ற அழைக்கப்படுகிறது.
இன்னோரு விதமாக மொகலாய பேரரசரின் மனைவிக்கு கண்களின் பார்வை குறைபாட்டுக்கு இங்கு வந்து ஆயுர்வேத மருத்துவம் எடுத்து செனாப் நதி நீரால் கண்களை கழுவி பார்வை குறைபாடு நீங்கியதன் காரணமாக ஆன்க்+நூர் (கண்களின் பார்வை) என்ற பொருளில் அக்னூர் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.

டாங்மார்க் (Tangmarg) : டாங் என்றால் பேரிக்காய் என்றும் மார்க் என்றால் புல்வெளி என்றும் பொருள். நகரை சுற்றியும் பல்வேறு கிராமங்களில் பேரிக்காய், செர்ரி மற்றும் ஆப்பிள் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உதம்பூர் (Udampur) : இந்த நகரம் ராஜா உதம் சிங்கின் நினைவாக பெயரிடப்பட்டது.

காத்வா (Kathua) : இந்த நகரம் தேஜூ, கிண்டால், பாஜூ என்ற மூன்று கிராமங்களின் ஒருங்கிணைப்பினால் காதை (Kathai) என்று அழைக்கப்பட்டு மருவி காத்வா என்றானது.

டிரால் (Tral) : டிரால் என்ற வார்த்தையானது காஷ்மீரி மொழியில் TREALAL என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அதற்கு மூன்று வைரங்கள் என்று அர்த்தம்.

லே (Leh) : திபெத்திய மொழியில் லே என்ற சொல்லுக்கு நாடோடிகளின் முகாம் என்று பொருள். இங்குள்ள டார்ட் மக்களால் திபெத்திய மக்கள் நீர்பாசனம் செய்ய அழைத்த காரணமாக இந்த பெயர் ஏற்பட்டு இருக்கலாம்.

கார்கில் (Kargil) : உள்ளூர் மக்கள் இந்த நகரை கார்கைல் என்றே அழைக்கின்றனர். அதற்கு பிரகாசமான அல்லது ஆரோக்கியமான விரிவாக்கம் என்று பொருள்படும். 

உள்ளூர் மக்கள் கர் (கோட்டை) ர்கில் (மையம்) என்ற பொருளில் பல கோட்டைகளுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இவ்வாறு அழைத்தனர் என்றும் கூறுவர்.

படும் (Padum) : பதும் என்றும் அழைப்பார்கள். இந்த நகரம் பெளத்த குரு பத்மசாம்பவாவின் பெயரால் பதும் என்று அழைக்கப்படுகிறது.

டர்டுக் (Turtuk) : இந்த நகரில் வசித்த ஆரம்பகால பழங்குடியினரான டார்டிக் இனத்தை சேர்ந்தவர்களிலிருந்து வந்திருக்கலாம்.

டிராஸ் (Dras) : நகரம் டிராஸ் ஹெம்-பாப்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. ஹெம் என்பதற்கு பனி என்ற பொருளில் பனி நிலம் என்ற அர்த்தத்தில் நகருக்கு பெயர் வந்தது.

பனாமிக் (Panamic) : பனாமிக் என்பது Spang na chumik என்பதன் சுருக்கமே. அதற்கு புல்வெளிகளில் உள்ள வசந்தம் என்று பொருள்.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து