23) மத்தியபிரதேசம்
மத்தியபிரதேசம்
புவியியல் ரீதியாக இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இம்மாநிலம் மத்தியப்பிரதேசம் என பெயர் பெற்றது. கிமு 6 ஆம் ஆண்டு உஜ்ஜையினி நகரம் தான் மால்வா என்றழைக்கப்படும் அவந்தி நாட்டின் தலைநகராக இருந்தது. சந்திரகுப்த மெளரியர் ஆட்சியில் அவரது மகத பேரரசின் கீழ் இருந்தது. பின்னர் குசானர்கள், சாதவாகனர்களின் கீழ் வந்தது.பின்னர் குப்த பேரரசும் வாகாடகப் பேரரசும் ஆட்சி செய்தன. பின்னர் ஹர்ஷரும் அவருக்கு பின்னால் இராஷ்டிரகூடர்களும் பரமார பேரரசும் சண்டேலர்களும் ஆண்டனர். பின்னர் 13 ஆம் ஆண்டு தில்லி சுல்தான்களின் ஆட்சியில் 16 ஆம் ஆண்டு மொகலாய பேரரசும் ஆண்டது. பின்னர் 18 ஆம் ஆண்டு மராத்திய பேரரசுக்கு பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இந்திய பிரிவினைக்கு பிறகு கி.பி.1950ல் புந்தேல்கண்ட், சத்தீஸ்கர், போபால் சமஸ்தானம், விதர்பா பகுதிகளை கொண்டு மத்திய பாரதம், விந்திய பிரதேசம் உருவானது. பின்னர் கி.பி.1956ல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் சமஸ்தான உள்ளடக்கிய மத்திய பிரதேச மாநிலங்களை உருவாக்கியது. இந்தியாவின் மாநிலமாக விளங்கி வந்த மத்திய பிரதேசம் கி.பி.2000ல் சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டதால் மிகப்பெரிய அந்தஸ்தை இழந்தது.
போபால் (போபால்) : பரமரா மன்னர் போஜா ராஜாவால் நிறுவப்பட்டதால் போபால் என்று அழைக்கப்பட்டது. போஜ ராஜாவின் அமைச்சரால் கட்டப்பட்ட அணை (பால்) என்பதால் போஜ்பால் என்று அழைக்கப்பட்டு மருவி போபால் என்றானது.
பூபாலா என்ற மன்னனின் பெயரில் நகரத்தின் பெயர் வந்தது என்றும் கூறுவர்
ராஜா போஜா தொழுநோயால் பாதிக்கப்பட்ட போது 365 நதிகளின் நீரை கொண்டு ஏரி கட்டி அதில் தினமும் குளிக்க மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டதால் கட்டப்பட்ட போஜ்தால் (போஜ் ஏரி) பெயரால் நகரும் போஜ்பால் என்று அழைக்கப்பட்டது.
இந்தூர் (இந்தூர்) : குப்தர் கால கல்வெட்டுகள் நகரின் பெயர் இந்திரபுரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரேஷ்வர் மகாதேவ் கோயிலின் பெயரால் நகருக்கு இந்த பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
இந்த இடத்தில் இந்திரன் தவம் செய்தார் என்றும் இந்திரபுரி முனிவர் இந்த கோயிலை நிறுவியதால் இந்திரபுரா என்று பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.
உஜ்ஜைன் (உஜ்ஜைன்) : வேதங்கள் மற்றும் இதிகாசங்களில் நகரத்தின் பெயர் அவந்தி என்று குறிப்பிடப்படுகிறது. மன்னன் கர்தவீர்ய விஜயனின் மகன் அவந்தியின் நினைவாக அவந்தி என்ற பெயர் வந்தது. பின்னர் இது அவந்திகா, அவந்திபுரி, அவந்தி நாக்ரி மற்றும் அவந்திகாபுரி என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. தோட்டங்கள் நிறைந்து காணப்பட்டதால் பிராகிருத மொழியில் தோட்டங்கள் என்பதற்கு உஜ்ஜயினி என்ற பொருளில் உஜ்ஜயினி என்று பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் "ஜெய்" என்பதற்கு வெற்றி என்ற பொருள். அதிலிருந்தும் நகரத்தின் பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
நகரத்தின் பெரிய பரப்பளவு காரணமாக "விசாலா" என்றும் நகரத்தின் கட்டமைப்புகளில் தங்க நிறம் காணப்படுவதால் "கனக்ஷ்ரிங்கா" என்றும் இங்கு பூக்கள் அதிகமாக காணப்படுவதால் "குமுத்வதி" என்றும் நகரம் அழிந்து அழிந்து அடிக்கடி குடியேறிய காரணத்தால் "பிரதிகல்பா" என்றும் எல்லாவித மகிழ்ச்சியையும் உடையது என்பதால் "போகவதி" என்ற பெயரிலும் நகரத்தின் செழிப்பு காரணமாக "ஹிரண்யவதி" என்றும் "பத்மாவதி" என்றும் விக்ரம் சம்வத் நாட்காட்டியை நிறுவிய மன்னன் விக்ரமாதித்யாவின் தலைநகரமாக இருந்ததால் "விக்ரம்புரி" என்றும் புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் ஜோதிலிங்கம் இருப்பதால் "மஹாகல்புரி" என்றும்.
ரத்லம் (ரத்லம்) : ஜோத்பூரின் ஜாலோர் வம்சத்து அரசனான மகேஷ் தாஸின் மகனான ராஜா ரத்தன் சிங் ரத்தோரால் நிறுவப்பட்ட ஊர் என்பதால் அவரின் மகனான ராம் சிங் பெயரைக் கொண்டு ரத்ரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் பெயர் மருவி ரத்லம் என்றானது.
ஜபல்பூர் (ஜபல்பூர்) : நர்மதை நதியில் தியானம் செய்த ஜபாலி முனிவரின் பெயரிலிருந்து நகரத்திற்கு ஜபல்பூர் என்ற பெயர் வந்தது.
அரபு மொழியில் ஜபல் என்பதற்கு கிரானைட் மற்றும் கற்பாறைகள் பொருள். இந்த பகுதியில் அவை நிறைந்து காணப்படுவதால் இந்த பெயர் காரணமாக நகரின் பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
சாகர் (சாகர்) : ஜெயின் மத இரண்டாம் தீர்த்தங்கரான அஜீதநாதாவின் சகோதரரான சாகர் என்பவரின் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
சிந்த்வாரா (சிந்த்வாரா) : இங்கு சிந்த்வாரா (காட்டு பேரீச்சம் பழங்கள்)நிறைந்து காணப்பட்டதால் இந்த இடம் (வாடா) சிந்த்வாடா என்று அழைக்கப்பட்டு மருவி சிந்த்வாரா என்று கூறுபவர்.
இந்த நகரில் நுழைவது சிங்கங்களின் குகைக்குள் நுழைவது போன்றது என்பதால் சின் துவாரா (சிங்கத்தின் நுழைவாயில்) என்று அழுகப்பட்டு சிந்த்வாரா என்றானது என்றும் கூறுவர்.
பெஸ்நகர் (பெஸ்நகர்) : இந்த நகரம் முன்பு பெல்சா என்று அழைக்கப்பட்டது. சூரிய கடவுளான பில்லாஸ்வானின் கோயிலின் பெயரால் நகருக்கு பெயர் வந்தது.
விதிஷா (விதிஷா) : அசோக சக்கரவர்த்தியின் மனைவியான மகாதேவியின் மகளான விதிஷா என்பவரின் பெயரால் நகருக்கு விதிஷா என்ற பெயர் வந்தது. சிலர் விதிஷா என்பது அவரின் மனைவியான மகாதேவனின் இன்னொரு பெயர் விதிஷா என்றும் கூறுவர்
நிமுச் (நீமுச்) : இங்கு ஏராளமாக வேப்ப மரங்கள் சூழ்ந்துள்ளதால் நகரம் பெயரைப் பெற்றது என்று கூறுவர்.
இந்த நகரத்தில் முதலில் குடித்த மீனா இன் மக்களின் பெயரிலிருந்து மீனுச் என்ற பெயர் வந்து மருவியது என்று கூறுவர்.
நிமாச் என்பதற்கு வட இந்தியா மவுண்டட் பீரங்கி மற்றும் குதிரைப்படை தலைமையகம் என்பதிலிருந்து நிமூச் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்
ரேவா (ரேவா) : புனித நர்மதை நதியின் பழைய பெயரான ரேவா என்பதிலிருந்து நகருக்கு ரேவா என்ற பெயர் வந்தது.
தேவாஸ் (தேவாஸ்) : நகரின் பெயர் தேவி வைஷினி மலையிலிருந்து பெறப்பட்டது. இந்த மலையில் துளஜா பவானி தேவி , காளி தேவி மற்றும் சாமுண்டா தேவி தெய்வங்களின் கோயில்கள் அமைந்துள்ளதால் தேவ் (தெய்வம்) வாஸ் (இருப்பிடம்) என்பதாக கடவுளின் வீடு என்ற பொருளில் தேவாஸ் என்ற பெயர் வந்தது.
சத்னா (சத்னா) : இந்த நகரம் ஷாட் நகர் மற்றும் பட்கர் என்ற பெயராலும் அறியப்படுகிறது.
குணா (குனா) : குவாலியர் ஐக்கிய நாடு இராணுவம் என்பது குணா என்பதன் சுருக்கம்
மஞ்சவூர் (மண்ட்சவுர்) : இந்த நகரத்தின் பெயர் மார் மற்றும் செளர் (தசெளர்) என்ற இரு கிராமங்களில் இருந்து உருவானது என்று கூறுகின்றனர்.
மகாபாரத காலத்தில் தசர்ண மக்களால் ஆளப்பட்டதால் தசபுரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இராவணனின் மனைவியான மனைவியான மண்டோதரி இந்த பகுதியை சேர்ந்தவர் என்பதால் இந்த பெயர் வந்தது என்று கூறுவர். ஆனால் இராஜஸ்தானில் ஜோத்பூர் அருகிலுள்ள மண்டோர் நகரமே இராவணனின் மனைவியான மண்டோதரியின் ஊர் என்று கூறுவர். ஆனால் இந்த மஞ்சவூர் நகரில் இராவண வழிபாடு கோயில்கள் இருப்பதால் அவரின் மனைவியின் பெயரைக் கொண்டு நகரத்தின் பெயர் வந்திருக்கலாம்.
சத்தர்பூர் (சத்தர்பூர்) : இந்த நகரம் புந்தேல்கண்ட் மாநிலத்தை நிறுவிய சத்ராஸல் மன்னரின் பெயரால் சத்தர்பூர் என்ற பெயரைப் பெற்றது.
தாமோஹ் (தாமோஹ்) : இந்து புராணங்களில் கூறப்பட்ட நள மகாராஜாவின் மனைவியான தமயந்தியின் பெயரிலிருந்து தாமோஹ் என்ற பெயரைப் பெற்றது.
நாக்தா (நாக்தா) : நகரத்தின் பெயர் நாக் -தா என்பதாகும். பண்டைய பரீட்த்து மகாராஜாவின் மகனான ஜன்மேஜய மன்னரால் உருவாக்கப்பட்ட நகரம். நாக் தாஹ் என்பதற்கு பாம்புகளை எரித்தல் என்ற பெயர். தற்போது நாக்தா என்று உள்ளது
கந்த்வா (கண்ட்வா) : இந்த நகரத்தின் பெயர் "கண்டவ் வான் (கந்தவ் காடுகள்)" என்ற பெயரிலிருந்து வந்தது.
செஹோர் (Sehore) : இந்த நகரின் பழைய பெயர் சித்தாபூர் என்பதாகும். முன்பு இந்த நகருக்கு அருகிலுள்ள காடுகளில் ஏராளமான சிங்கங்கள் இருந்ததால் ஷேர் என்ற சிங்கத்தின் பெயரால் நகரம் செஹோர் என்ற பெயரைப் பெற்றது
இடார்சி (இடார்சி) : முன்பு இந்த நகரில் செங்கல்கள் மற்றும் கயிறு தொழில்களால் நிறைந்திருந்தது. ஈடா (ஈன்ட் - செங்கல்) மற்றும் ரஸ்ஸி (கயிறு) என்ற ஹிந்தி வார்த்தைகளின் கலவையாக இடார்சி என்ற பெயரைப் பெற்றது.
கர்ஹோன் (Khargone) : இந்த நகரின் பழைய பெயர் மேற்கு நிமர் என்பதாகும். ஆரிய மற்றும் ஆரியர் அல்லாதவர்களின் நாகரீகங்களின் கலப்பினால் நியமதி (நிமா -பாதி) என்று அழைக்கப்பட்டது மருவி நிமர் என்றானது. இந்த பகுதியில் முன்பு வேப்ப மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் நிமர் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்
ஓம்காரேஷ்வர் (Omkareshwwr) : நகரம் ஓம் என தோன்றும் தீவின் வடிவத்தில் அமைந்துள்ளதால் "ஓம்காரேஷ்வர்" என்ற பெயர் வந்தது. மந்தாதா மன்னன் இங்கு சிவனை வழிபட்டதாகவும் இந்த புனிதமான இடத்தை தலைநகராக ஆக்கிக் கொண்டு ஆட்சி புரிந்த காரணத்தால் முன்பு மந்தாதா என்ற பெயரில் நகரம் அழைக்கப்பட்டது.
மஹேஷ்வர் (மகேஷ்வர்) : சிவனின் இன்னொரு பெயரான மஹேஷ்வர் என்ற பெயரால் நகரம் மஹேஷ்வர் என்று அழைக்கப்படுகிறார். இந்த நகரம் பண்டைய நகரமான மகிஷ்மதி என்று அடையாளப்படுத்துகின்றனர்.
சிவ்புரி (சிவ்புரி) : சிவபெருமானின் பெயரால் பெயரிடப்பட்ட நகரம் முன்பு சிப்ரி என்றும் அழைக்கப்பட்டது.
புர்ஹான்பூர் (புர்ஹான்பூர்) : இந்த நகரம் இடைக்காலத்தில் நன்கு புகழ்பெற்ற சூஃபி ஞானியான புர்ஹான் - உத் - தின் பெயரைப் பெற்றது.
மொரீனா (Morena) : சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முறைனா என்ற சிறு கிராமத்தின் பெயரால் இந்நகருக்கு பெயர் வந்தது. ஆரம்பத்தில் பென்ச் மோரெனா என்று அழைக்கப்பட்டு மருவி மொரீனா என்று தற்போது தெரியவந்துள்ளது
பிந்த் (பிந்த்) : இந்து துறவியான புனித விபாண்டக் என்ற பிந்தி ரிஷியின் பெயரால் நகருக்கு பெயர் வந்தது. ஆரம்ப பிந்த் -பான்வாரா என்று அழைக்கப்பட்டு பிறகு பிந்த் என்று சுருங்கமாக ஆனது
பீடுல் (Betul) : முன்பு இந்த நகரம் பத்னூர் என்று அழைக்கப்பட்டது. இந்த நகருக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய நகரமான படுல் பஜார் என்பதிலிருந்து இந்த நகருக்கு பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். பருத்தி வயல்கள் காரணமாக இந்த பெயர் வந்தது.
சியோனி (Seoni) : ஜகத் குரு கேரளாவுக்கு பயணம் செய்த வழியில் இந்த அழகிய இடத்தை கண்டு ஷிரோனி என்று பெயரிட்டார். பின்னர் இது ஷிவ் நாக்ரி என்றும் சியோனி என்றும் மருவியது. ரூட்யார்ட் கிம்பிளிங்க்கின் "ஜங்கிள் புக்" நாவலில் இந்த இடத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. சியோனி என்ற பெயர் இங்குள்ள சியோனா எனப்படும் வெர்பெனேசி குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை மரத்தால் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
குவாலியர் (Gwalior) : சூரஜ் சென் என்பவரால் குவாலிபா என்ற புனித நபரால் கொடுக்கப்பட்ட பானத்தினால் தொழுநோயை குணப்படுத்தினார். பின்னர் நகரத்தையும் கோட்டையையும் கட்டி குவாலிபாவின் பெயரால் அழைக்க அதுவே குவாலியர் என்றானது.
நரசிங்பூர் (Narsinghpur) : 18ம் நூற்றாண்டில் இங்கு பெரிய கோயிலை கட்டி நரசிம்மரின் சிலை வைக்கப்பட்டதால் கிராமத்திற்கு நரசிம்மரின் பெயர் வைக்கப்பட்டது. கடார்வாரா என்பது கடாரியா கெடா என்பதன் திரிபு ஆகும். கடாரியா என்பதற்கு குடியானவர்கள் சொந்தமாக வைத்திருந்த ஆட்டு மந்தைகள் என்பது பொருள். பின்னர் கோயிலின் காரணமாக நரசிங்பூர் என்றானது.
ஹோசங்காபாத் (Hoshangabad) : இந்த நகரம் நர்மதா நதியின் பெயரால் நர்மதாபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி.1405ல் சுல்தான் ஹோசங்காஷா கோரி இந்த நகரில் சிறு கோட்டையை கட்டியதால் நகருக்கு அவரது பெயர் வந்தது.
மோரார் கண்டோன்மெண்ட் ( Morar Cantt. ) : Military officers residential area reserved என்பதன் சுருக்கமே மோரார் நகரின் பெயருக்கு காரணம். இந்தியாவின் தேசீய பறவையான மயில்கள் (ஹிந்தியில் மோர்) இங்கு அதிகமாக காணப்படுவதால் கூட மோரார் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
பங்கார்டா (Bangarda) : முன்பு ஹர்ங்காவ் ஹரிகர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
தாடியா (Datia) : இந்த நகரத்தின் பெயரானது இந்த பகுதியை ஆண்ட புராண அசுர குல அரசனான தண்டவகரா என்பவரின் பெயரிலிருந்து வந்தது. இந்த நகரத்திற்கு லகு பிருந்தாவனம் என்றும் இன்னொரு பெயர் உண்டு.
பர்வானி (Barwani) : வானி என்பதற்கு தோட்டம் என்று பொருள். பட்வானி என்பதற்கு Garden of Bads என்று பொருள். "பேட்" காடுகள் இந்த நகரத்தை முன்பு சூழ்ந்திருந்தது. பேச்சுவழக்கில் பட்டினி என்றும் எழுத்து ரீதியில் பர்வானி என்றும் நகரம் அழைக்கப்படுகிறது
கஜூராகோ (Khajuraho) : இந்த நகரம் முன்பு கர்ஜூரவாஹகா என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் கர்ஜூரா என்றும் பேரீச்சம் பழம் என்றும் வாஹகா என்பதற்கு ஏந்தி செல்பவர் என்றும் பொருள். கோயிலின் வாயில்களில் இரண்டு தங்க பேரீச்சம்பழ மரங்கள் வாயிலாக இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்னொரு விதமாக கர்ஜூரவாஹகா என்றால் தேள் சுமப்பவர் என்று பொருள். தேள் மற்றும் பாம்புகளை அடையாள மாலைகளாக அணிந்த சிவனின் அடையாளப்பெயர் என்றும் கூறுகின்றனர்.
ஓர்ச்சா (Orchha) : நகரம் அதன் பெயரை phr என்பதில் இருந்து e 'Onde chhe ' என பெற்றது. அதற்கு குறைந்த அல்லது மறைக்கப்பட்ட என்று பொருள். அதற்கு ஏற்ப இந்ந நகரம் பெட்வா ஆற்றின் கரையில் காடுகளால் மறைக்கப்பட்ட நகரமாக விளங்குகியது.இது முன்பு ஓண்ட்சே (Onduchha) என்று அழைக்கப்பட்டது.
பச்மார்ஹி (Pachmarhi) : இந்த பெயர் பஞ்ச் (ஜந்து) மர்ஹி (குகைகள்) என்று ஹிந்தி வார்த்தையில் இருந்து வந்தது என்று கூறுகின்றனர். பாண்டவர்கள் வனவாசத்தின் போது இந்த குகைகளை கட்டியதால் இந்த பெயர் வந்ததாக கூறுவர்.
பன்னா ( Panna) : இந்த நகரில் உள்ள பத்மாவதி கோயிலின் பெயரால் இந்த இடம் பத்மா என்று பெயரிடப்பட்டது. புராணங்களில் இது பத்மாவதி புரி என்றும் வால்மீகி இராமாயணத்தில் சுக்ரீவரால் இது கில்கில காண்ட் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் இந்தியாவிலையே அதிகமாக வைரங்கள் கிடைபப்தால் ஹீரா நகரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாவதி கோயிலின் பெயரால் அழைக்கப்பட்டது பின்னர்தான் பர்ணா நீர்வீழ்ச்சி காரணமாக பன்னா என்று மாறியது.
மண்டூ (Mandu) : இதன் பழைய பெயர் மண்டப துர்க் என்பதாகும். துர்க் என்பதற்கு கோட்டை என்று பொருள். மண்டபம் என்பது மண்டு என்று மருவியது. மொகலாயர் ஆட்சியின் கீழ் அவர்கள் அதை "ஷாதியாபாத்" என்று அழைத்தனர். அதற்கு மகிழ்ச்சியின் நகரம் என்று பொருள்.
சாஞ்சி (Sanchi) : மகாவம்சத்தில் இந்த இடம் சேதியகிரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப கால கல்வெட்டுகள் கக்கனாயா என்று குறிப்பிடுகிறது. குப்தர் காலத்தில் காகநாடா -போடா என்றும் கி.பி.7 ம் நூற்றாண்டில் போட்ஸ் - ஶ்ரீ - பர்வத் என்றும் அழைக்கப்பட்டது. சாஞ்சி என்பதற்கு சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழியில் "அளக்க" என்று பொருள். ஹிந்தியில் சாஞ்சி அல்லது சஞ்சா என்பதற்கு "கற்களின் அச்சுகள் (Moulds of Stones)" என்று பொருள்.

Comments
Post a Comment