21) டெல்லி


டெல்லி

இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் வரலாறு மிகவும் பழமையானது. மிகவும் பிரபலமான அரசர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் வாழ்ந்த ஊரான இந்திரபிரஸ்தம் என்பதே டெல்லியின் பழைய பெயர். டெல்லி நகரின் பெயர் கி.மு.1 ஆம் ஆண்டு ஆண்ட ராஜா தில்லுவின் பெயரைக் கொண்டு டெல்லி, டெஹ்லி, டில்லி, தில்லி என்று மக்களின் வாய்வழியாக பலவிதமாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. டெல்லியின் இரும்பு தூண் தளர்வாக இருந்த காரணத்தால் (பலவீனமாக இருந்ததால்) கி.பி.8ம் நூற்றாண்டில் இந்நகரை கைப்பற்றிய தோமர்கள் திலி என்று அழைத்தார்கள் என்றும் கூறுவர். தோமர்கள் ஆட்சியில் அவர்களின் நாணயங்கள் டெலிவால் என்றும் அழைக்கப்பட்டது. பிரித்விராஜ் செளகான் காலத்தில் தில்பத் மற்றும் டில்லி என்பது மேன்மை என்று பொருள்படும் வகையில் இருந்த ஹிந்தி வார்த்தையில் இருந்து வந்தது என்றும் கூறுகின்றனர். சில வரலாற்று அறிஞர்கள் தில்லிகா என்பதே நகரத்தின் பெயர் என்றும் குறிப்பிடுவர். பிருத்விராஜ் கோட்டையை கட்டி அதற்கு டெஹாலி என்று பெயரிட்டார் . டெல்லி என்பது டெஹ்லீஸ் அல்லது டெஹாலியின் (நுழைவாயில் என்பது பொருள்) என்பதன் சிதைவாக இருக்கலாம் என்றும் கூறுவர்.

கி.பி.12ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து கி.பி.19ம் நூற்றாண்டு மத்தியபகுதி வரைக்கும் பல்வேறு அரசியல் குழப்பங்கள் படையெடுப்புக்கள் அனைத்தும் சந்தித்து வந்துள்ளது. பிரித்விராஜ் செளகானை இரண்டாம் தரஎய்ன் யுத்தத்தில் தோற்கடித்து முகமது கோரி டெல்லியை கைப்பற்றிய அவருக்கு பின்னர் டெல்லி சுல்தானகம் நிறுவப்பட்டு வரிசையாக மாமுல்க், கில்ஜி, துக்ளக், சைய்யித் மற்றும் லோடி வம்சங்கள் ஆண்டது. பின்னர் "டெல்லி சலோ" என்ற முழக்கத்துடன் பாபர் இப்ராஹிம் லோடியை பானிபட் போரில் தோற்கடித்து டெல்லியை கைப்பற்றி மொகலாய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியது பின்னர் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. பின்னர் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு கி.பி.1911ல் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு இந்தியாவின் தலைநகர் மாற்றப்பட்டு சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் தலைநகராக அங்கீகரிக்கப்பட்டது.

சாவ்ரி பஜார்: மராத்தி வார்த்தையான சாவ்ரி என்பதற்கு சந்திப்பு என்ற பொருள். ஊரிலுள்ள பிரபுவின் வீட்டிற்கு முன் சபா நடக்கும். அவர் விஷயங்களை தீர்க்க முயற்சி செய்யும் இடமாததால் சாவ்ரி பஜார் என்று பெயர் வந்ததாக கூறுவர்.

வைஷ்யர்கள் இங்கு நடனமாடுவதை காண வரும் மக்கள் அவர்களுக்கு சாவன்னிகள் வழங்கினர். அதிலிருந்து சாவ்ரி என்ற பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர்.

ஜங்புரா : ராஜ பாதையின் வழியாக பிரமாண்டமான கட்டிடங்கள் வருவதற்கு ரைசினா கிராமத்தின் மக்களை இடமாற்றம் செய்யும் பொறுப்பு யாங் என்ற பிரிட்டிஷ் துணை ஆணையருக்கு வழங்கப்பட அவர் இந்த மக்களை குடகயமர்த்திய இடம் யங்பூரா என்று அழைக்கப்படும் பேச்சு வழக்கில் ஜங்புரா என்றானது.

சிராக் டில்லி: நிஜாமூதீன் தனது சீடரான நசீருதினை ஆசிர்வதிக்க அவர் எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரில் விளக்குகளை ஏற்றி எரிய செய்தார். சிராக் என்றால் விளக்கு என்ற பொருளில் அந்த பகுதிக்கு சிராக் டில்லி என்ற பெயர் வந்தது.

ஜந்தர் மந்தர் : ஜெய்ப்பூர் மஹாராஜா இரண்டாம் ஜெய் சிங் என்பவரால் கட்டப்பட்டது. வானியல் ஆராய்ச்சிகூடமாக இயங்கி வந்தது. 

ஷஹ்தரா : உருது மொழியில் ராஜாக்களின் கதவு என்று பொருள். தாரா என்பதிலிருந்து தரியா என்ற வார்த்தை வந்ததாகவும் யமுனை நதிக்கு அருகில் இருந்த கதவு வழியாக டெல்லிக்கு பொருட்கள் வந்ததால் இந்த பெயர் வந்ததாகவும் கூறுபவர்.

ஜிபி சாலை : பிரிட்டிஷ் கமிஷனரான கார்ஸ்டின் நினைவாக கார்ஸ்டின் பாஸ்டன் சாலை/ஜிபி சாலை என்ற பெயர் வந்தது.

பல்லி மாறன் : பல்லி என்பது படகின் துடுப்புகள் என்றும் மாறன் என்றால் துடுப்புகளை இயக்கும் செயல் என்றும் பொருள். மொகலாயர் காலத்தில் செங்கோட்டைக்கும் ஃபதேபுரி மசூதிக்கும் இடையே படகு போக்குவரத்து இருந்தது. 

சாந்தினி செளக் (Chandani chowk) : இந்த பஜார் மொகலாய பேரரசர் ஷாஜஹானின் மூத்த மகளான ஜஹனாரா பேகத்தால் குறிப்பிடப்பட்டது. பிரதிபலிக்கும் குளம் என்ற பொருளில் நிலவின் வெள்ளி நிற ஒளியை பிரதிபலிக்கும் குளத்தை கொண்டதால் இந்த பெயர் வந்தது.

மெஹ்ராலி (Mehroli) : இது முன்பு மிஹிராவாலி (மிஹிரின் வீடு) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. குர்ஜர-பிரதிஹாரா மன்னர் மிஹிர் போஜாவால் நிறுவப்பட்டது.

மெஹ்ராலி என்ற பெயர் மெஹ்ராவலி மாய் (மெஹர் என்றால் ஆசீர்வாதம்) என்ற பெயரில் அழைக்கிறார்கள் என்று கூறுகிறார்.

முஸ்லீம்கள் மெஹர்-இ-வாலி என்பதிலிருந்து வந்தது என்றும் கூறுகின்றனர்.

சிரி (Siri) : அலாவுதீன் கில்ஜி சுமார் 8000 மங்கோலிய வீரர்களின் துண்டிக்கப்பட்ட தலைகளின் மேல் இங்குள்ள கோட்டையைக் கட்டினார். சர் என்றால் ஹிந்தியில் தலை என்று பொருள்.

துக்ளகாபாத் (Tughlakabad) : இந்த நகரம் துக்ளக் வம்சத்து கியாஸ்ஸீதின் துக்ளக் என்பவரால் கட்டப்பட்டு அவரின் பெயரை தாங்கி துக்ளகாபாத் என்ற பெயர் வந்தது.

தியோலி (Deoli) : இந்த நகரத்தின் பெயர் ஹிந்தி வார்த்தையான டெவ்ரோ என்பதிலிருந்து வந்தது அதற்கு "கடவுளின் இடம்" என்று அர்த்தம் என்று கூறுகின்றனர்.

ஹஸ்ட்சல் (Hastsal) : இங்கு முன்பு யானைகள் நீரில் மூழ்கி ஓய்வெடுக்கும். யானைகள் (ஹாத்தி) ஒய்வெடுக்கும் ஸ்தலம் (ஸ்தல்) என்ற பொருளில் ஹஸ்ட்சல் என்ற பெயர் வந்தது.

கோகல்பூர் (Gokalpur) : சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு ஜிந்தாத் கோத்ராசகோதரர்களில் மூத்தவரான கோகல் என்பவரால் நிறுவப்பட்ட ஊர் என்பதால் கோகல்பூர் என்ற பெயர் வந்தது.

ஜோஹ்ரிபூர் (Gohripur) : கோகல்பூரை நிறுவிய கோகல் என்பவரின் சகோதரரான ஜோஹ்ரி என்பவரால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் கோஹ்ரிபூர் என்ற பெயர் வந்தது.

நஜாப்கர் (Najabgarh) : மொகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலமின் ராணுவ தளபதியாக இருந்த மிர்சா நஜாப் கானின் நினைவாக இந்த நகருக்கு பெயரிடப்பட்டது.

கேயர் (Kaier) : கெமர் என்பது "கப்பரிஸ் டெசிடுவா" என்று அழைக்கப்படும் தாவரத்தின் பெயர். இந்த வகை தாவரங்கள் இந்த கிராமத்தில் அதிகமாக இருந்த காரணத்தால் நகருக்கு இந்த பெயர் வந்தது.

சாகேத் (Saket) : சமஸ்கிருதத்தில் சாகேத் என்ற பெயருக்கு சொர்க்கத்துக்கு அருகில் உள்ள இடம்.

ஷாஜஹானாபாத் (Shajahanabad) : இந்த நகர் மொகலாய பேரரசர் ஷாஜஹானால் நிறுவப்பட்டதால் அவர் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணிகேரா (Ranikhera) : தபாஸ் ஜாட் இன மன்னரை மணந்த தோமர் ஜாட் இளவரசியின் நினைவாக பெயரிடப்பட்டது.

பவானா (Bawana) : இந்த நகரம் ஹிந்தி மொழி வார்த்தையான பவான் என்பதிலிருந்து பெயர் பெற்றது.

அலிப்பூர் (Alipur) : இந்த இடத்தில் குடிபுகுந்த அலி என்ற பக்தியான தீர்க்கதரிசியின் பெயரால் நகருக்கு இந்த பெயர் வந்தது.

கிட்ரோனி (Ghitorni) : இந்த இடத்தில் நெய் உற்பத்தி செய்யப்பட்டதால் நெய் கிராமம் என்ற பெயரில் நகருக்கு இந்தப் பெயர் வந்தது.

ஜரோடா கலன் (Jharauda Kalan) : இந்த நகர் லோவா காலனின் ஜாடோ என்ற பெண்ணின் பெயரால் ஜரோடா கலன் என்ற பெயரைப் பெற்றது.

நங்லி சக்ரவதி (Nangli Chakravathi) : 800 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலத்திலுள்ள நரினாரா கிராமத்திலிருந்து வந்த மக்களால் கரும்பு ஏராளமாக பயிரிடப்பட்டது. அதனால் ஷக்கர் (சர்க்கரை) என்பதால் நகருக்கு அந்த பெயர் வந்தது.

தயாள்பூர் (Dayalpur) : இந்த நகரம் குர்ஜார் ஜமீன்தாரான தயாள் சிங் என்ற பாபா தயலா பெயரால் தயாள்பூர் என்ற. பெயர் பெற்றது.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து