18) ஹிமாச்சல் பிரதேசம்
ஹிமாச்சல் பிரதேசம்
இமயமலையின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும். ஹிமாச்சல் என்பதற்கு பனி நிறைந்த மலை மாகாணம் என்பது பொருள். பனி நிறைந்த இமயமலையின் மடியில் உள்ள நிலம் என்ற பொருளில் ஹிமாச்சலத்தின் புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரான ஆச்சார்யா திவாகர் தத் சர்மாவால் ஹிமாச்சல் என்று பெயரிடப்பட்டது. இது தேவ் பூமி மற்றும் வீர் பூமி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. ஆரம்பத்தில் குப்த பேரரசால் கைப்பற்றப்பட்டு பின்னர் ஹர்ஷரின் கீழ் வந்தது. பின்னர் பல இராஜ்ஜியங்களாக பிரிந்தது டெல்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டு மொகலாயருக்கு பின்னர் நேபாளத்தின் கோர்கா ராஜ்ஜியத்தின் கீழ் வந்தது. பின்னர் மஹாராஜா ரஞ்சித் சிங் வசம் வந்து ஆங்கிலோ-சீக்கிய போருக்கு பின் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின் இமயமலையின் முன் பகுதியில் இருந்த 30 குட்டி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு சிம்லா ஹில்ஸ் ஸ்டேட்ஸ் மற்றும் பஞ்சாப் மலை மாநிலங்கள் சேர்த்து இந்திய யூனியனுடன் சேர்த்து கி.பி.1948 ஏப்ரல் 15ல் 'சி' மாநிலமாக உதயமானது. 31 வந்து மாநிலமாக இருந்த பிலாஸ்பூர் கி.பி.1954ல் இமாச்சலுடன் இணைக்கப்பட்டது. கி.பி.1956ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. கி.பி.1966ல் பஞ்சாப் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் படி சில மாகாணங்கள் இணைக்கப்பட்டன. கி.பி.1971ல் முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது .
சிம்லா (சிம்லா) : சிம்லா என் பெயர் ஷாம்லி அல்லது ஷ்யாமளா என்பதிலிருந்து வந்தது. அதாவது நீல நிற பெண் தெய்வமான காளியின் பெயரால் ஷ்யாமளா தேவி கோயிலின் பெயரால் நகருக்கு பெயர் வந்தது.
ஜக்கு மலையில் ஒரு ஃபக்கீரால் கட்டப்பட்ட நீல நிற ஸ்லேட்டால் செய்யப்பட்ட ஒரு தனி வீடு என்பதிலிருந்து ஷியாமலயா என்ற பெயர் மருவி வந்தது என்று கூறுவர்.
சம்பா (சம்பா) : கி.பி.920ல் பார்மூர் நகரை ஆண்ட ராஜா சாஹில் வர்மன் தனது மகளான சம்பவதின் கோரிக்கையை ஏற்று தலைநகரை இந்த ஊருக்கு மாற்றி தனது மகளின் பெயரையே நகருக்கும் சம்பா என்று பெயரிட்டார்.
மண்டி (மண்டி) : இந்த பெயர் இங்கு பிரார்த்தனை செய்த மாண்டவ் என்ற முனிவரிடம் இருந்து வந்ததாக கூறுபவர். மண்டி என்ற பெயரானது உள்ளூர் மொழியில் மாண்டவ் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.
சந்தை என்பதன் பொருள்படும் வார்த்தையில் மண்டி என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர் உண்டு.
தர்மஸ்சலா (தர்மசாலா) : சமஸ்கிருதத்தில் தர்மத்தின் வீடு என்ற பொருள். ஆன்மீக யாத்திரிகர்களுக்கான தங்குமிடம் அல்லது ஓய்வு இல்லத்தை குறிக்கிறது. அத்தகைய யாத்திரிகர்களின் ஒய்வு இல்லம் இருந்து பின்னர் குடியேற்றங்கள் ஏற்பட நகருக்கும் அதே பெயர் வந்தது.
சோலன் (சோலன்) : நகரத்தின் பெயர் இந்து பெண் கடவுளான சோலினி தேவியின் பெயரால் வந்தது.
மணலி (மணலி) : நகரம் சனாதன தர்மம் எழுதிய மனுவின் நினைவாக மணலி என்று பெயரிடப்பட்டது. மணாலி என்பது மனு-அலயாவின் (மனுவின் இருப்பிடம்) என்று கூறுவர்.
குலு (Kullu) : குலு என்ற பெயர் குளந்த் பீத் என்ற வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு அர்த்தம் வாழக்கூடிய உலகின் முடிவு. பெரு வஎளத்ததன் முடிவில் இங்கு வந்த மனு இங்கு குடியேற்றங்கள் இருந்ததைக் கண்டு குளந்த் பீத் என்று பெயரிட்டார். இந்த இராஜ்யம் குலூட் என்ற பெயர் மாறி இறுதியாக குலு என்ற பெயர் வந்தது.
சுந்தர் நகர் (சுந்தர் நகர்) : இந்தியில் சுந்தர் நகர் என்றால் அழகான இடம். கி.பி.1970க்கு முன்பு விஜய்கர் வாடி என்று அழைக்கப்பட்ட நகரம் பெயர் மாற்றம் பெற்று சுந்தர் நகர் என்றானது.
பெஹன்டா சாஹிப் (Paonta sahib) : இந்த நகரின் அசல் பெயர் பெளண்டிகா. இந்தியில் பான் என்றால் அடி என்றும் டிகா என்றால் நிலையானது என்றும் பொருள். 10மீ சீக்கிய குரு கோபிந்த் சிங் இங்கே வந்தபோது அவரது குதிரை இங்கே அடியெடுத்து நின்றதால் இங்கேயே தங்க முடிவெடுத்தார். குருத்வாரா அமைத்த காரணத்தால் பெஹண்டா சாஹிப் என்ற நகருக்கு பெயர் வந்தது.
டல்ஹெளசி (டல்ஹெளசி) : இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹெளசி இந்த இடத்தை கோடைகால ஒய்வு இடமாகப் பயன்படுத்தினார். அவரின் நினைவாக நகருக்கு டல்ஹெளசி என்ற பெயர் வந்தது
நஹான் (Nahan) : குளங்களின் நகரம் என்ற பொருளில் ஊருக்கு நஹான் என்ற பெயர் வந்தது.
பாலம்பூர் (palampur) : இந்த ஊர் பானி (நீர்), ஆலம் (சுற்றுச்சூழல் மற்றும் வசிப்பிடம்) & பூர் (குடியேற்றம்) ஆகிய மூன்று சொற்களின் இணைப்பில் பாலாம்பூர் என்றானது. நிறைய மழை பெய்யும் குடியிருப்பு என்ற பொருள்.
பிலாஸ்பூர் (பிலாஸ்பூர்) : இந்த நகரின் பழைய பெயர் கஹ்லூர் என்பதாகும். நகரில் இந்த வசித்த பிலாசா என்ற மீனவ பெண்மணியின் பெயரிலிருந்து நகருக்கு பிலாஸ்பூர் வந்ததாக கூறப்படுகிறது.
பஞ்சார் (பஞ்சார்) : இந்தோஷியா (பாலி) தீவிலிருந்து வந்த பஞ்சாரி மக்கள் குடியேறியதால் நகருக்கு பஞ்சார் என்ற பெயர் வந்தது. பாலி மொழியில் இதற்கு சகோதரத்துவம் என்ற பொருள்.
ஹமீர்பூர் (ஹமீர்பூர்) : கி.பி.1700-1740 வரை இந்த ஊரில் கோட்டை கட்டி ஆண்ட கடோச் வம்சத்து அரசர் ஹமீர் சந்துவின் பெயரை தாங்கி நகருக்கு ஹமீர்பூர் என்ற பெயர் வந்தது.
காங்க்ரா (காங்க்ரா) : காங்க்ரி என்பதற்கு மலை உச்சியில் பனி என்றால் அர்த்தம். இங்கு நகரில் இருந்து பார்த்தால் பனி மூடிய மலைகள் தென்படுவதால் நகருக்கு அவ்வாறே பெயர் வந்தது
டெஹ்ரா கோபிபூர் (டெஹ்ரா கோபிபூர்) : இந்த நகரில் ராதா -கிருஷ்ணர் உட்பட பல கடவுள்கள் தெய்வங்களின் கோயில்கள் இருப்பதால் டெஹ்ரா (பஹாரி மொழியில் கோயில் என்று அர்த்தம்) என்ற பெயர் வந்தது.
சிலர் இந்த நகரம் நாகர்கோட் (காங்க்ரா) கோட்டையின் மீது படையெடுக்கும் சமயத்தில் தேரா (முகம்) இருந்தது. தேரா என்ற பெயர் டெஹ்ரா என்று திரிந்தது என்று கூறுகின்றனர்.
சிவனது வரத்தால் காளியவன் கிருஷ்ணரை போருக்கு அழைக்க கிருஷ்ணர் மதுராவை விட்டு கோபிபூர் ஓடினார். தூக்கத்தில் இருந்த முச்சுகுந்தன் மேல் தன் ஆடையை போர்த்தினார். தூக்கத்தில் இருந்து எழுப்புவரை கண்களில் இருக்கும் ஆற்றலால் எரிக்கும் வல்லமை இருந்தது தெரியாமல் காளியவன் அவரை எழுப்ப அவன் எரிந்து சாம்பலானான். அதனால் கோபியூர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ராம்பூர் பூஸார் (ராம்பூர் புஷாஹர்) : இந்த நகரம் நான்கு கயிர்மங்களஇன் தொகுப்பாக கதர் என்று இருந்தது. பின்னர் ராஜா ராம் சிங் இங்கே நகரத்தை விரிவாக்கம் செய்ய நகருக்கு அவர் பெயர் வந்தது.
அர்க்கி (Arki) : அர்க்கி என்பதற்கு வெப்பமான பகுதி என்ற பொருள்.
உனா (உனா) : 5வது சீக்கிய குருவான குரு அர்ஜூன் தேவ் நிலத்தில் உழைக்கும் கடின உழைப்பாளிகளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் உன்னதி என்று பெயரிட்டார். அது மருவி உனா என்றானது.
ராஜ்கர்க் (ராஜ்கர்) : இந்த நகரம் ரகுவன்ஷி வம்சத்து ராஜாவால் ஆளப்பட்டதால் ராஜ்கர்க் என்ற பெயர் வந்தது.
நூர்பூர் (நூர்பூர்) : இந்த நகரத்தின் பழைய பெயர் தாமேரி என்பதாகும். மொகலாய அரசரான நூரூத்தின் ஜஹாங்கிர் மற்றும் அவரது மனைவியான நூர்ஜஹான் ஆகியோரை சிறப்பிக்கும் விதமாக நகருக்கு நூர்பூர் என்ற பெயர் வந்தது.
சர்காகாட் (Sarkaghat) : சர் என்றால் குளம் காட் என்று படிக்கட்டு கொண்ட குளக்கரை . இந்த நகரில் இரு மலைக்கு இடையேயான சமவெளியில் பெரிய குளம் அமைந்துள்ளதால் நகருக்கு இந்த பெயர் வந்தது.
இந்தோரா (இந்தோரா) : இந்த நகரை கி.பி.1806ல் ஆண்ட சவுதாரி குர்பாஜ் தனது தாத்தாவான இந்த சந்த் நினைவாக நகருக்கு இந்த்பூர் (அல்லது) இந்தோரா என்ற பெயரை சூட்டினார்.
கோட்காய் (Kotkhai) : இந்த வார்த்தை இந்தி மற்றும் உருது மொழியில் இருந்து வந்தது. கோட் என்றால் மன்னர்கள் வசிக்கும் அரண்மனை என்றும் காய் என்றால் ஆழம் என்றும் அர்த்தம். இங்குள்ள மன்னரின் அரணமனை ஆழத்தில் (பள்ளத்தில்) அமைந்துள்ளதால் நகருக்கு இந்தப் பெயர் வந்தது
ஜோகிந்தர் நகர் (ஜோகிந்தர் நகர்) : இந்த நகரின் அசல் பெயர் சுக்ரஹட்டி என்பதாகும். மண்டியின் மன்னர் ஜோகிந்தர் சிங்கின் நினைவாக நகருக்கு ஜோகிந்தர் நகர் என்ற பெயர் வந்தது.
தீரா சுஜன்பூர் (சுஜன்பூர் தீரா) : இந்த நகரம் ராஜா சன்சார் சந்த் கடோச்சால் கட்டப்பட்டு சஜ்ஜன்பூர் என்று பெயரிடப்பட்டது. காலப்போக்கில் மருவி சுஜன்பூர் என்றானது. இங்குள்ள குடியிருப்புடன் கோட்டையை சேர்த்து திஹ்ரா சுஜன்பூர் என்று அழைத்தனர்.
சுபது (சுபது) : மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்ட சுபாகு மன்னரின் தலைநகராக இருந்த இடம் தான் இது. அது சுபாகு என்று அழைக்கப்பட்டு மருவி சுபது என்றானது என்று கூறுகின்றனர்.
சிலர் சுபது என்ற வார்த்தை கூர்கலி வார்த்தையான சுப்ப தும் என்பதிலிருந்து வந்தது என்றும் அதற்கு அர்த்தம் கவர்னரின் குடியிருப்பு என்றும் கூறுகின்றனர்.
பர்வானு (Parwanoo) : இந்த நகரின் பழைய பெயர் ஊஞ்சா பர்வானு என்பதாகும்.
கசோலி (கசௌலி) : இங்குள்ள மக்களின் மரபு வழி கதையின் படி கசோல் என்பதற்கு மலையில் காணப்பட்ட மலர் என்பது பொருள். அதிலிருந்து தான் கசோலி என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
சிலர் காஷ் என்றால் மணல் என்றும் அவுளி என்றால் காடு என்றும் பொருள்படும் மணல்காடு என்ற பொருளில் ஊருக்கு பெயர் வந்தது என்றும் கூறுவர்.
ஜூவாலமுகி (ஜவாலமுகி) : இந்த நகரில் அமைந்துள்ள புனித ஜூவாலமுகி ஆலயத்தின் பெயரால் நகருக்கும் ஜூவாலமுகி என்ற பெயர் வந்தது.
யோல் (YOL) : இந்த இடத்தின் பழைய பெயர் மஜைதா என்பதாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போர் கைதிகளின் இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் இளம் அதிகாரிகள் நிலம் என்று அழைக்கப்பட்டதின் சுருக்கமே யோல் என்ற நகருக்கு பெயராகியது.
நைனா தேவி (நைனா தேவி) : இந்து புராணங்களின் படி மகிசாசூரனை திருமணம் ஆகாத பெண்ணால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றதால் பார்வதி தேவி சதி தேவியாக தன்னை எரித்துக் கொண்டாள். சிவன் அவளது உடலை தூக்கி தாண்டவம் ஆடியதில் 51 இடங்களில் வாழ்ந்து அவை சக்தி தலங்களாகியது. சதி தேவியின் கண்கள் வாழ்ந்த இடம் தான் நைனா தேவி கோயில். இதனால் நகருக்கும் நைனா தேவி என்ற பெயர் வந்தது.
கானரி (கனாரி) : கான் + அரி என்ற இரு வார்த்தைகளின் கலவை தான். சமஸ்கிருதத்தில் கான் என்றால் மேகங்கள் அரி என்றால் எதிரி என்ற பொருள். கடந்த காலங்களில் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் பெய்த மழை இந்த ஊரில் பெய்யாத காரணத்தால் கானரி என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
கிண்ணார் (கிண்ணார்) : மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட மக்களான கிண்ணர்கள் வாழ்ந்து வந்த காரணத்தால் கிண்ணார் என்ற நகருக்கு பெயர் வந்தது.
சார்ஹான் (சரஹான்) : இந்த நகருக்கு பழைய பெயர் சோனிட்பூர். அரக்க அரசனான பனாசூர் இந்த நகரை உருவாக்கினாலும் அவனது வீழ்ச்சிக்குப் பிறகு சார்ஹான் என்று குறிப்பிடுகிறார்.

Comments
Post a Comment