25) ஜார்கண்ட்

ஜார்கண்ட்


பண்டைய காலத்தில் மகாபாரதத்தில் கார்க் ரேகைக்கு (கடக ரேகை) அருகில் அமைந்திருந்த காரணத்தால் கார்க் கண்ட் என்று குறிப்பிடப்பட்ட பகுதி. மெளரியர்கள் மற்றும் மகத, அங்க அரசின் பகுதியாக இருந்தது.மெளரியர் காலத்தில் அடவிகா (காடு) மாநிலங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர் குப்தர்கள், நாகவன்ஷி மற்றும் பாலர்களால் ஆளப்பட்டது. பின்னர் மொகலாயர் ஆதிக்கமும் அதன் பின்னர் ஆங்கிலேயர் கையிலும் வந்தது. 32 பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியான இங்கு தான் பிர்சா முண்டா ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டார். சுதந்திரத்திற்கு பின்பு பீகார் மாநிலத்துடன் சேர்ந்து இருந்தது. பீகாரின் தெற்கு பகுதியாக இருந்த இந்த மாநிலம் முற்றிலும் கனிம வளங்கள் நிறைந்த காட்டு பகுதிகள் மலைப் பகுதிகள் நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை வளங்களும். நிறைந்த பகுதியாக இருந்தது. கி.பி. 2000ல் பீகாரில் இருந்து தனியாக பிரிந்து ஜார்கண்ட் என்ற பெயருடன் பிறந்தது. ஜார் என்பதற்கு காடு என்றும் கண்ட்  என்பதற்கு நிலம் என்ற பொருளில் மாநிலத்திற்கு ஜார்கண்ட் என்ற பெயர் வந்தது. 

பொகாரோ ஸ்டீல் சிட்டி (Bokaro steel City) :  மராஃபரி என்ற பெயரில் மொகலாயர்கள் மற்றும் சுல்தான்களின் காலத்தில் அழைக்கப்பட்ட இந்த கிராமம் பின்னர் டாடா ஸ்டீல் நிறுவனத்தால் பொகாரோ ஸ்டீல் ஆலை நிறுவப்பட்டதால் அந்த பெயரிலேயே பொகாரோ ஸ்டீல் சிட்டி என்ற பெயரில் நகரமாக வளர்ந்துள்ளது.

ராஞ்சி (Ranchi) :  ஊருக்கு அருகிலுள்ள ஓரான் கிராமத்தின் பழைய பெயரான ஆர்ச்சி என்பதிலிருந்து உருவானது. ஓரான் என்பதற்கு மூங்கில் தோப்பு அல்லது தண்டு என்றால் அர்த்தம். கிராமத்து கதையின் படி விவசாயி ஒருவர் ஆவியுடனான விவாதத்திற்கு பிறகு அங்கிருந்த மூங்கில் தடியால் ஆவியை அடிக்க ஆவி அரசி என்று அலறி ஓடியதாம். அரச்சி என்பது ராச்சி என்பது மருவி ராஞ்சியானது என்பர். 

ராஞ்சியின் பெயர் உள்ளூர் பறவையான ரிசி என்பதிலிருந்து உருவானது என்றும் கூறுவர். 

ஆங்கிலேயர் கேப்டன் தாமஸ் வில்கின்சன் ஆர்ச்சி கிராமத்தை தலைமையகமாக தேர்வு செய்தார். அரச்சி என்பதற்கு மூங்கில் காடு என்றால் அர்த்தம். ஆர்ச்சி என்ற பெயருக்கு பதிலாக ராஞ்சி என்று பதிவிட்டு விட்டனர் என்றும் கூறுவர்.

ஹசாரிபாக் (Hazaribagh) : பாரசீக வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஹசார் என்பதற்கு ஆயிரம் என்றும் பாக் என்பதற்கு தோட்டம் என்றும் பொருள். அதாவது ஆயிரம் தோட்டங்களின் நகரம் என்று பொருள். முன்பு ஓக்னி மற்றும் ஹசாரி ஆகிய கிராமங்களின் பெயரால் ஓகுன்ஹாஸ்ரி என்று குறிப்பிடப்பட்டு வந்தது.

தன்பாத் (Dhanbad) : இந்தியாவில் தான் என்பதற்கு தானியங்கள் என்றும் பெய்ட் என்பதற்கு விவசாய நிலம் என்றும் பொருள். இந்த பகுதி முழுவதும் விவசாய நிலங்கள் இருப்பதால் இந்த பெயர் வந்தது.

கிரிதிஹ் (Giridh) : இந்த பெயருக்கு மலைகள் மற்றும் குன்றுகளின் நிலம் என்ற பொருள். இந்த இடத்தின் புவியியல் அமைப்பு காரணமாக இந்த பெயர் ஏற்பட்டது 

ஜாம்ஷெட்பூர் (Jamshedpur) : முன்பு சாக்கி என்ற பெயர் பெற்ற நகரத்தில் டாடா இரும்பு உருக்காலை அமைந்தது. கி.பி.1919ல் லார்ட் செம்ஸ்ஃபோர்ட் நகரத்தின் பெயரை அதன் நிறுவனரான ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாடாவின் பெயரால் ஜாம்ஷெட்பூர் என்று பெயர் மாற்றம் செய்தார்.

தியோகர் (Deoghar) : தியோ என்ற சொல்லுக்கு கடவுள் மற்றும் தெய்வங்கள் என்றும் கர் என்பதற்கு உறைவிடம் என்ற பொருளில் கடவுளின் வீடு என்ற பொருளில் நகருக்கு பெயர் வந்தது. அதற்கு ஏற்ப நகரமும் பைத்யநாத் தாம் பாபா தாம் ஆகிய கோயில்களைக் கொண்டுள்ளது.

மேதினிநகர் (Medininagar) :  கி.பி.1861ல் சோட்டா நாக்பூரின் ஆணையரான கர்னல் எட்வர்ட் டியூட் டால்டன் என்பவரின் நினைவாக டால்டோங்கஞ்ச் என்று பெயரிடப்பட்டது. ஜார்க்கண்ட் மாநில அரசால் செரோ வம்சத்தின் ராஜா மேதினி ரேவின் நினைவாக மேதினிநகர் என்று பெயரிடப்பட்டது.

ராம்கர் (Ramgarh) : கி.பி.14 ஆம் ஆண்டு உர்தாவை தலைநகராக கொண்டு ராம்கர் ராஜ் நிறுவப்பட்டது. தலைநகர் பின்னர் பாதாமிற்கும் பிறகு ராம்கருக்கும் மாற்றப்பட்டது. கி.பி.1670ல் மன்னர் தலேல் சிங் தனது தந்தையின் நினைவாக ராம்சிங் என்ற பெயருக்கு ஏற்ப ராம்கர் என்று நகரின் பெயரை மாற்றினார். 

பெர்மோ (Bermo) :  அபெர்மா என்ற பெயரிலிருந்து மவுடாச் நதியின் முகத்துவாரம் என்ற பொருளில் இருந்து பெர்மோ என்ற பெயர் வந்தது.

ஆதித்யபூர் (Adityapur) :  செரைகேலா வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான ராஜா ஆதித்ய பிரதாப் சிங் தியோவின் நினைவாக நகருக்கு பெயர் வந்தது. 

பராஜம்டா (Parajamda) :  பரஜம்தா என்ற சொல்லுக்கு வனப்பகுதி என்பதன் அர்த்தம். காடுகள் நிறைந்த மலை பீடபூமியான பகுதியாதலால் இந்த பெயர் வந்தது. 

நோமுண்டி (Naomundi) :  உள்ளூர் பழங்குடியின மக்கள் இரும்பு கோடாலிகளை பயன்படுத்துவதை கண்ட ஆராய்ச்சியாளர்கள் எங்கிருந்து இரும்பு தாது கிடைத்தது என்று கேட்க அவர்கள் நோமுண்டி (அந்த மலை) என்று மலையை சுட்டி காட்ட அதுவே நோமுண்டி மலை என்று பெயர் வந்தது. நகருக்கும் அதே பெயர் வந்தது. நோமுண்டி என்பதற்கு "அந்த மலை" என்ற பொருள்.

ஜூம்ரி (Jhumri) :  இந்த நகரத்தின் ஒரு பகுதி கிராமமான ஜூம்ரி என்பதிலிருந்து நகருக்கும் பெயர் வந்தது. ஜூமாரி என்ற உள்ளூர் நாட்டுப்புற நடனம் என்றும் கூறினார் 

கும்லா (Gumla) :  இந்த நகரில் ஒவ்வொரு வருடமும் "மாட்டு கண்காட்சி" ஒரு வார காலம் நடைபெறும். கெள மேளா என்று அழைக்கப்பட்ட கண்காட்சியின் பெயரால் மருவி கும்லா என்று மாறிற்று.

நெதர்ஹாத் (Netarhat) :  இயற்கை எழில் சூழ்ந்த இயற்கையின் இதயம் என்ற பொருளில் நேச்சர் ஹார்ட் என்பது மருவி நெதர்ஹாத் என்றானது என்பர்.

நெதர்ஹாத் என்பதற்கு உள்ளூர் மொழியில் மூங்கில்களுக்கான சந்தை என்ற பொருள்.

பசன்ட்ராய் (Basantroy) :  இந்த பகுதியை ஆண்ட ராஜா பசந்த் ராய் என்பவரின் பெயரால் நகருக்கு பசன்ட்ராய் என்ற பெயர் வந்தது.

சாஹேப்கஞ்ச் (Sahebkanj) :  சாஹிப் என்பதற்கு எஜமானர்கள் என்றும் கஞ்ச் என்பதற்கு இடம் என்ற பொருளில் எஜமானர்களின் இடம் என்றும் பொருள். ஆங்கிலேயர் காலத்தில் ரயில்நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஆங்கிலேயர்கள் மற்றும் ஐரோப்பிய மக்கள் வசித்து வந்ததால் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

லோஹர்டகா (Lohardaga) : இந்த வார்த்தை இரண்டு ஹிந்தி சொற்களில் இருந்து வந்தது. லோஹர் என்பதற்கு இரும்பு வியாபாரி என்றும் டாகா என்றால் மையம் என்றும் பொருள். இரும்பு சுரங்கங்களின் மையம் என்று நேரடி அர்த்தத்தை விளக்குகிறது.

மதுப்பூர் (Madhupur) :  இந்த பகுதியில் ஒரு பெரிய கால்நடை பண்ணைகளை வைத்திருந்த மது என்ற கோபாவின் பெயரால் நகருக்கு மதுப்பூர் என்ற பெயர் வந்தது.

தும்கா (Dumka) :  தும்காவின் பெயர் சம்க் என்ற சந்தாலி வார்த்தையில் இருந்து "தடுக்கப்பட்ட" அல்லது "சிறிய" என்ற பொருளில் இருந்து வந்தது என்று கூறுவர்.

தும்கா என்ற பெயர் பாரசீக வார்த்தையான டாமின் -இ-கோ என்பதிலிருந்து வந்தது என்றும் கூறுவர். அதற்கு மலைகளின் ஓரங்கள் என்ற பொருள்.

பாகூர் (Pakur) : இந்த பகுதி முன்பு பாகெலர் என்று அழைக்கப்பட்டது. அதற்கு ஸ்கர்ட் ஆப் ஹில்ஸ் என்ற பொருள்.

குந்தி (Khunti) : குந்தியும் பாண்டவர்களும் பதினான்கு ஆண்ட வனவாசத்தில் இங்கு இருந்ததாகக் கூறப்படுவதால் அவரின் பெயர் நகரமும் பெற்றது.

ஜம்தாரா (Jamdhara) :  இது ஜம் மற்றும் தாரா என்ற இரு வார்த்தைகளில் இருந்து வந்தது. ஜம் என்பதற்கு சந்தாலி மொழியில் பாம்பு என்றும் தாரா என்பதற்கு குக்கிராமம் என்றும் பொருள். நிறைய பாம்புகள் உலாவிய இடம் என்ற பொருளில் ஜம்தாரா என்ற பெயர் வந்தது.

ராம்ரேகா தாம் (Ramrekha dham) :  ராமர் சீதா லட்சுமணருடன் இந்தப் பகுதிக்கு வருகை தந்த காரணத்தால் இந்த பெயர் வந்தது 

பூண்டு (Bundu) : நகரத்திலிருந்து விலகிய ஒரு பெரிய குடியிருப்பில்லா காட்டுப்பகுதிக்கு பூண்டு என்று பெயர். அதனாலயே அவ்வாறே பெயர் வந்தது.

காங்கர் (Kanker) : தண்டகாரண்ய பகுதியான இங்கு காங்க், லோமேஷ், சிருங்கி மற்றும் அங்கீரா முனிவர்கள்  தங்கி வாழ்ந்து வந்தனர். அதன் காரணமாகவே காங்கர் என்ற பெயர் வந்திருக்கலாம் 

நர்ஹர்பூர் (Narharpur) :  இந்த பகுதியை ஆண்ட நர்ஹர் தியோ தனது மக்களுக்கு தானியங்களை சேர்த்து வைப்பதற்காக "ரத்ன பந்தர்" என்ற திட்டத்தை உருவாக்கினார். அதனால் காங்கருக்கு அருகில் புது நகரை உருவாக்கி தனது பெயரை வைத்தார்.

டோப்சாஞ்சி (Tophchanchi) :  இங்குள்ள டோப்சாஞ்சி நீர்தேக்கத்தின் பெயரால் நகருக்கும் அதே பெயர் வந்தது. 

கோடெர்மா (Koderma) :  கத்ரம் ரிஷியின் தவம் காரணமாக இந்த பகுதி கோடெர்மா என்று வழங்கப்பட்டது.

சராய்கேலா (Saraikela) :  16 கலை வடிவங்களின் நிலம் என்று பொருள்படும் ஷோதோய் கோலா என்ற சொல்லில் இருந்து சரிகேலா என்ற பெயர் வந்தது. இங்குள்ள துர்கா தேவியின் வடிவமான மா பவுரியின் வழிபாடு அஷ்டமி மாதத்தில் 16 நாட்கள் பிரார்தனையுடன் நடைபெறுவதால் கூட இந்த பெயர் வந்திருக்கலாம்.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து