12) குஜராத்



குஜராத் என்னும் சொல் மத்திய ஆசியாவில் இருந்து கி.மு.1 நூற்றாண்டுக்கு முன்பே இந்த பகுதிகளில் வந்து குடியேறிய குர்ஜ் (குர்ஜரா) இன மக்களிடம் இருந்து வந்ததாகக் கூறுபவர். இந்த குர்ஜரா மக்கள் இன்றைய ஜார்ஜியா (பழங்காலத்தில் இதன் பெயர் குர்ஜிஸ்தான்) நாட்டிலிருந்து இங்கு குடியேறியவர்கள். பல்வேறு மாநில அரசுகளால் ஆளப்பட்டு வந்த இப்பகுதி சுதந்திர இந்தியாவில் பம்பாய் இருந்தது. பின்னர் கி.பி.1960ல் மொழி அடிப்படையில் பம்பாயில் இருந்து பிரித்து செளராஷ்டிரா மாநிலத்துடன் சேர்த்து குஜராத் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் தலைநகர் அகமதாபாதாக இருந்தது பின்னர் கி.பி.1970ல் அகமதாபாத்திற்கு வெளியே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காந்தி நகர் என்ற நகருக்கு தலைநகர் மாறியது.

அகமதாபாத் (அகமதாபாத்) :   இந்த நகர் முன்பு ஆஷாவால் என்ற பழங்குடி மக்களின் பெயரை தாங்கி ஆஷாவால் என்ற பெயராக இருந்தது. அவர்களை வீழ்த்தி முதலாம் கர்ண தேவன் நகரை நிர்மாணித்தார். அப்போது நகருக்கு வைக்கப்பட்ட பெயர் கர்ணாவதி. கர்ணாவதி மாதாவின் பெயரை தாங்கி நின்றது. பின்னர் 15 ஆம் ஆண்டு இந்த பகுதியை கைப்பற்றிய முதலாம் அகமது ஷா நகரை புணர்நிர்மாணம் செய்ய ஆரம்பித்தார். தனது பெயர் மற்றும் தனது குருவின் பெயரான ஷேக் அஹ்மத் மற்றும் தனது இணைபிரியாத தோழர்களான காசி அஹ்மத் மற்றும் மாலிக் அஹ்மத் ஆகியோரின் பெயர்களில் இருந்து பொதுவான பெயரான அஹ்மத் என்பதிலிருந்து நகருக்கு அகமதாபாத் என்று பெயரிட்டார்.

நாடியாத் (நாடியாத்) :   இந்த நகரம் முன்பு நாட்பூர் மற்றும் நாத்ரா என்று அழைக்கப்பட்டது. இங்கு குடியேறிய நாட்டு இன மக்களால் இந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது.

இடார் (இடார்) :   இந்த ஊர் முன்பு இல்வதுர்க் என்று அழைக்கப்பட்டது. அதாவது இல்வனின் கோட்டை என்று பொருள்படும். இல்வதுர்க் என்ற பெயர் மருவி இடார் என்றானது.

ஹிம்மத்நகர் (ஹிம்மத்நகர்) :.  இந்த ஊரின் பெயர் நகரை நிர்மாணித்த மன்னர் ஹிமத்சிங் பெயரால் ஏற்பட்டது.

வாபி (வாபி):   இந்த ஊரில் அமைந்துள்ள படி கிணற்றின் பெயரால் இந்த நகருக்கு பெயர் வந்தது என்று நம்பப்படுகிறது. சமஸ்கிருதத்தில் வாப்பி என்பதற்கு பொருள் ஒரு நீர் தேக்கம் அல்லது நீர் அமைப்பு.

நவ்சாரி (நவ்சாரி) :   இந்த நகரம் முதலில் நவசரிகா என்று அழைக்கப்பட்டது. ஈரானில் இருந்து இங்கு குடியேறிய பார்சி இன மக்கள் குடியேறிய போது நாக் மண்டலம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நகரம் ஈரானின் சாரி பகுதியை போல வளமான வண்டல் மண் பகுதி பிரதேசமாக இருந்ததால் நவ (புதிய) சாரி என்று பெயர் வைத்தனர்.

வல்சாத் (வல்சாத்) :  இந்த பெயர் வாட்-சால் என்பதிலிருந்து உருவானது. குஜராத்தியில் ஆலமரங்களால் மூடப்பட்ட பகுதி என்பதால் வல்சார் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் புல்சார் என்று அழைக்கப்பட்டது.

நந்தோட் (நந்தோட்) :   தெற்கு குஜராத் பகுதியான லத்தா பகுதியின் குர்ஜர மன்னர்களின் தலைநகராக விளங்கிய இந்த நகரம் முன்பு நந்திபுரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் நந்தோல் மற்றும் நந்தோட் என்றும் மருவியது. தற்போது இது ராஜ்பிப்லா ஊரின் ஒரு பகுதியாக உள்ளது.

சூரத் (அகமதாபாத்) :   கி.பி.16 ஆம் ஆண்டு முழுவதும் கோபி ஏரியை கட்டிய கோபி என்ற பிராமணர் இந்த பகுதிக்கு சூரஜ்பூர் என்றும் சூர்யாபூர் என்றும் பெயரிட்டார். அது மருவி சூரத் என்று கூறுகின்றனர்.

அங்கலேஷ்வர் (அங்கலேஷ்வர்) :   இங்குள்ள அங்கலேஷ்வர் சிவன் கோயிலின் பெயரால் ஊருக்கும் அந்தப் பெயர் வந்தது.

பரூச் (பரூச்) :   ஸ்கந்த புராணத்தின்படி பிருகு முனிவர் இங்கு வந்தபோது இங்கிருந்த ஆமை மீது அமர்ந்து தவம் இயற்றினார். சமஸ்கிருதத்தில் அமைக்கு கச்சா என்ற பெயர். இதனால் இந்த இடம் பிருகு கச்சா என்று அழைக்கப்பட்டு பரூகச்சா என்ற மருவி கடைசியில் பரூச் ஆனது.

ஜம்புஸர் (ஜம்புசார்) :   இங்கு வாழ்ந்த ஜம்புசார பிராமணர்களின் காரணமாக பெயர் வந்ததாகக் கூறுபவர். 

சம்பனர் (சம்பானர்) :   மன்னர் வனராஜ் சாவ்தா தனது புத்திசாலியான மந்திரி சம்பாவின் நினைவாக பாவகாத் மலையின் அடிவாரத்தில் நிர்மாணித்த ஊரானது மந்திரி சம்பாவின் பெயரை தாங்கி நிற்கிறது.

வதோதரா (வதோதரா):   இந்த நகரம் முன்பு வடபிரடகா என்ற பெயர் வந்தது. அதாவது ஆல மரங்களுக்கு மத்தியில் உள்ள ஒரு கிராமம். கிராமத்தை சுற்றி ஆல மரங்கள் இருந்ததால் இந்த பெயர் வந்தது. பின்னர் வடபிரடகா என்ற பெயர் மருவி வதோதரா என்ற பெயர் வந்தது.

கோத்ரா (கோத்ரா) :   கோ (மாடு) + தாரா (நிலம்) என்ற பொருளில் மிகுதியான மாடுகள் இருந்ததால் இந்த பெயர் ஏற்பட்டது. சமஸ்கிருதத்தில் கோத்ரா என்பதற்கு பசுக்களின் நிலம் என்று பொருள் 

வாத்வான் (வாத்வான்) :   மனிதனை உண்டு வாழும் ஷீல்பானி என்ற யட்சனை சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரான வர்த்தமான மகாவீரர் மனம் மாறி திருத்தினார். அதனால் அவரின் நினைவாக வர்த்தமான்பூர் என்ற இந்த ஊருக்கு பெயர் வந்தது. பின்னர் மருவி வாத்வான் என்றானது.

பாலன்பூர் (பலன்பூர்):   இந்த நகரம் பிரஹலாதனால் நிர்மாணிக்கப்பட்ட காரணத்தால் பிரஹலாதன பாட்டன் என்றும் பிரஹலாதனபுரா என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் இந்த நகரம் பழன்சி செளஹானால் மீண்டும் புணர்நிர்மாணம் செய்யப்பட்டதால் அவரின் பெயரை தாங்கி பழன்பூர் என்றும் பெயர் பெற்றதாக கூறுபவர். இன்னும் சிலர் பால் பர்மர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதால் பாலன்பூர் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர்.

பாவ் நகர் (பாவ்நகர்) :   இந்த நகரம் இதை நிர்மாணித்த மகாராஜாவான பாவ்சின்ஜி தக்தாசின்ஜி கோஹில் என்பவரின் பெயரால் பாவ் நகர் என்று கூறப்படுகிறது.

கோகா (கோகா) :   இந்த நகரத்தின் பெயர் புகழ்பெற்ற இராஜபுத்ரரான கோகோபாவாவின் பெயரை தாங்கி கோகா என்று அறியப்படுகிறது.

வாலா (வல்லபி) வாலா :   இந்த நகரம் ஆரம்பத்தில் வல்லபிபுரா என்றும் வல்லபி, வலபி, வாலாபிபூர் என்ற பெயர்களால் அறியப்படுகிறது. தற்போது வாலா என்ற பெயரில் உள்ளது.

மஹ்மூதாபாத் (மெஹ்மதாவாத்) :   குஜராத் சுல்தானான மஹ்மது ஷாவின் பேரனான மஹ்மூத் பேகடா என்ற மன்னரால் இந்த ஊர் நிர்மாணிக்கப்பட்டது. அதனால் ஊருக்கும் மஹ்மூதாபாத் என்ற பெயர் வந்தது.

மெஹ்சானா (மெஹ்சானா) :   இந்த நகரம் இராஜபுத்ர சாவ்தா வம்சத்தை சேர்ந்த மெஹ்சாஜி சாவ்தா என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. அதனால் அவரின் பெயரை தாங்கி மெஹ்சானா என்ற பெயரில். 

படான் (படான்) :   இந்த நகரை நிர்மாணித்த சாவ்தா இன மன்னர் வனராஜ் சாவ்தா தனது நண்பரான அனாஹில் பர்வத் என்பவரின் பெயரில் அன்ஹில்பூர் படான் என்று பெயரிட்டார். சோம்நாத் பிரபாஸ் பதான் என்று அழைக்கப்பட்டதால் அதை வேறுபடுத்த அன்ஹில்பூர் படான் என்று பெயர் வைக்கப்படுபவர்.

மோர்பி (Morbi) :   மோர்பி என்றால் மயில்களின் நகரம் என்று பொருள். மிகுதியான மயில்கள் (மோர்யா) இருந்ததால் இந்த நகரம் இவ்வாறு அழைக்கப்பட்டது.

ஜெட்பூர் (ஜெட்பூர்) :   இந்த நகரை நிறுவிய ஜெட்ஜியின் பெயரால் ஜெட்பூர் என்ற பெயர் வந்தது.

அம்பாஜி (அம்பாஜி) :   இங்குள்ள அம்பாஜி மாதா கோயிலின் பெயரால் ஊருக்கு பெயர் வந்தது.

அம்ரேலி (அம்ரேலி) :   இந்த நகரம் முன்பு அனுமான்ஜி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பின்னர் மருவி அமிலிக் என்றானது. காலப்போக்கில் இந்த நகர் அமராவல்லி என்றும் அமராவதி என்றும் அழைக்கப்பட்டது. அம்ரவல்லி என்ற பெயர் மருவி அம்ரேலி என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

ஜூனாகத் (Junagadh) :   ஜூனாகத் என்பதற்கு பழைய கோட்டை என்று பொருள் 

கம்பத் (Kombat) :   இதன் பெயரானது கம்பவதி அல்லது தூண் நகரம் என்பதிலிருந்து வந்ததாகக் கூறுவர். 

சுரேந்தர் நகர் (Surendarnagar) :   ஜாலா இராஜபுத்திரர்களின் தலைநகராக இந்த ஊர் இருந்ததால் இதற்கு ஜாலா நகர் என்ற பெயர் முன்பு இருந்தது. ஆங்கிலேயர் இதற்கு வாத்வான் முகாம் என்று அழைத்தனர். ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறிய சமயத்தில் இந்த பகுதியின் ஆட்சியாளராக இருந்த சுரேந்தர்சின்ஹ்ஜி ஜோராவர்சின்ஹ்ஜியின் பெயரால் நகருக்கு சுரேந்தர்நகர் என்று பெயர் வந்தது.

டாகோர்) :   இங்கு நீரோடைகளும் ஏரிகளாலும் வளமாக இருந்த காரணத்தால் டாங்க் ரிஷி இங்கு சிவனை வழிபட்டு தவம் இறந்தார். மகிழ்ந்த சிவன் வரம் கேட்க சிவன் இங்கேயே தங்க வேண்டினார். இதனால் சிவன் தனது இருப்பை பான் (லிங்கம்) வடிவில் நிருபிக்க அந்த டங்கநாத் மகாதேவ் கோயில் என்று பெயர் வந்தது. இதனால் ஊரின் பெயர் டாங்கோர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி டாகோர் என்றானது.

ராஜ்காட் (ராஜ்கோட்) :   கி.பி. 17 ஆம் ஆண்டு இந்த நகரை நிர்மாணித்த இணை நிறுவனரான சன்னி இஸ்லாம் பிரிவை சேர்ந்த ராஜூ சாந்தியின் பெயரால் நகர் ராஜ்கோட் என்று அழைக்கப்பட்டது.

காந்தி நகர் (காந்தி நகர்) :   குஜராத்தின் நிர்வாக தலைநகரான இந்த ஊர் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம். இந்த நகருக்கு தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவாக காந்திநகர் என்று பெயர் வந்தது.

சித்பூர் (சேத்பூர்) :   இந்த ஊர் (புனிதமான இடம்) என்று அழைக்கப்பட்டது. சோலாங்கி வம்ச மகாராஜா சித்ராஜ் ஜெய்சிங் இந்த நகரை உருவாக்கினார் என்பதால் ஊருக்கு சித்பூர் என்ற பெயர் வந்தது.

ஜாம் நகர் (ஜாம்நகர்) :   இந்த ஊர் நிர்மாணிக்கப்பட்ட போது நவநகர் (புதிய நகர்) என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரின் பகுதியான 12 கிராமங்களுக்கு கடைசி மொகலாய பேரரசர் பகதூரிஷாவால் ஜாம் லகாஜிக்கு வழங்கப்பட்டது. அவர் அரச பதவிக்கு வருவதற்கு முன்பே அவரது உறவினர்களால் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்குப் ஜாம் ராவா கொலையாளியை கொல்ல கொலையாளியின் மகன்கள் மற்றும் கூட்டாளிகள் பேரரசர் உதவி பெற்றாலும் போரில் தனது தந்தையை கொன்றவர்களை வீழ்த்தி பழிவாங்கினார். தந்தை மற்றும் மகனின் பெயர்கள் ஜாம் என்பதிலிருந்து ஊருக்கும் ஜாம் நகர் என்ற பெயர் வந்திருக்கலாம்.

துவாரகா (துவாரகா) :   இந்த நகரை துவாரவதி என்றும் அழைப்பார்கள். சமஸ்கிருதத்தில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள்.

சோம்நாத் (சோம்நாத்) :   இந்த ஊரில் உள்ள சிவனின் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் ஒன்றான சோமநாதர் கோயிலின் பெயரால் ஊருக்கும் சோம்நாத் என்று பெயர் வந்தது. இந்த ஊருக்கு பிரபாஸ் படான் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

வெரவல் (வெரவல்) :   இதன் பழைய பெயரான "வேலகுல்" என்பதிலிருந்து மருவியிருக்கலாம் என்று கூறுகின்றனர். துறைமுக நகரம் என்பதே அதன் பொருள். சிலர் இந்த நகரம் 14 ஆம் ஆண்டு இராஜபுத்ர ராவ் வெரவல்ஜி வதேரால் நிறுவப்பட்ட காரணத்தால் வெரவல் என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.

போர்பந்தர் (Porbander) :   போரை என்ற சொல் தேவதையையும் பந்தர் என்ற சொல் துறைமுகத்தையும் குறிக்கும். இது பகவான் கிருஷ்ணரின் நண்பரான சூதாமா பிறந்த நகரம் என்பதால் சூதாமாபுரி என்றும் சூதாமபுரி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த நகரம் மகாத்மா காந்தி பிறந்த நகரமும் கூட. அஸ்வாமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள போரவ் தேவி கோயிலின் பெயரால் போர்பந்தர் என்ற பெயர் வந்தது.

பூஜ் (புஜ்) :   பூஜ் நகரின் மையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் நகரத்தை பட்டும் படாமல் தொட்டு செல்லும் புஜியோ துங்கர் மலைத்தொடரின் பெயரிலிருந்து நகரத்திற்கும் பெயர் வந்ததாக கூறுவர்.

மோதரா (மோதேரா) :   இங்கு இராவணனை கொன்ற தோஷத்திற்காக இராமன் யாகம் செய்ததாக நம்பப்படுகிறது. இதன் பழைய பெயர் தர்மரண்யா என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள மோதேஸ்வரி மாதா கோயிலின் பெயரால் ஊரும் பெயர் வந்ததாகக் கூறுவர்.

நாடாபெட் (Nadabet) : உள்ளூர் மொழியில் Bet என்பதற்கு நீரினால் சூழ்ந்த தீவுப்பகுதி என்று அர்த்தம். நாடா என்ற பெயர் இங்குள்ள நாடேஸ்வரி மாதாஜி கோயிலின் பெயரிலிருந்து வந்தது.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து