14) மேற்கு வங்காளம்
வங்காளம் என்ற சொல் பகுதி பண்டைய காலத்தில் ஆண்ட பங்கா இராஜ்ஜியத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. பங்கா என்ற வார்த்தையின் பின்னர் பாங் என்று அழைக்கப்பட்டது. ஆஸ்டிரிக் மொழியில் பாங் என்பதற்கு சூரியக் கடவுள் என்று அர்த்தம். ஏன் அவ்வாறு அழைத்தார்கள்? சூரியன் முதன்முதலில் உதிக்கும் கிழக்கு திசையில் இருப்பதாலா? என்றும் தெளிவான காரணங்கள் இல்லை. கி.பி.14ம் ஆண்டு சுல்தான்கள் ஆட்சியில் பங்களா என்ற சொல் வந்தது. போர்த்துகீசியர்கள் இப்பகுதியை பெங்காலா என்று குறிப்பிட்டனர். மாநிலமாக வங்காளம் பரந்து விரிந்து இருந்தது. பெங்காலின் மொழி பெங்காலி என்பதாகும். இந்திய சுதந்திரத்திற்கு முன் வங்காளம் கி.பி.1905ல் நிர்வாக வசதிக்காக இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து இரண்டு பகுதிகளும் இணைந்தது. ஆனாலும் இந்திய விடுதலைக்கு பின்னர் வங்காளம் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் கி.பி.1971ல் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை அடைந்து வங்கதேசம் என்ற தனி நாடாக உருவானது வேறு கதை. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு வங்காளம் இந்தியாவில் இணைந்தது.
கொல்கத்தா (கொல்கத்தா) :
கொல்கத்தா காளி தேவியின் இருப்பிடமான காளி கோட்டா என்ற சொல்லில் இருந்து வந்ததாக பெரும்பாலானோர் கூறுகின்றனர். இந்த இடத்தை பண்டைய காலத்தில் காளி ஷேத்ரா என்று குறிப்பிட்டனர்.
ஐரோப்பியர்கள் வெப்ப மண்டல நோய்களால் அவதிப்பட்டவர்கள் கோல்கோதா என்று அழைக்க தொடங்கி கொல்கத்தா என்றாகி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
வங்காள நதிகளின் ஓரங்களில் நீரோட்டங்களால் விலகும் வண்டல் மண் தீபகற்பங்கள் கோல் என்றும் அதை வெட்டி வழிவிடுவதால் கட-கோல் அல்லது கோல்-கட்டா என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஒரு ஆங்கிலேயர் இந்த இடத்தின் பெயரை ஒரு விவசாயிடம் கேட்க அவர் புல் எப்போது வெட்டப்பட்டது என்று கேட்பதாக கருதி கல்-கட்டா (நேற்று வெட்டப்பட்டது) என்று கூறுவது அதுவே ஊரின் பெயராக கல்கத்தா என்றானது.
சிலிகுரி (Siliguri) :
கி.பி.19 ஆம் ஆண்டு இது ஷில்சகுரி என்று அழைக்கப்பட்டது. சிலிகுலி என்பது கிழாங்கற்களின் அடுக்கை குறிக்கிறது.
அசன்சோல் (Asansol) :
ஆசான் என்ற ஒரு வகை மரம் 30 மீட்டர் வரை வளரக்கூடியது. இது தாமோதர் நதிக்கரையில் நிறைய வளர்ந்திருந்த காரணத்தால் ஆசான் என்பதோடு நிலம் என்பதற்கான பொருளில் சோல் என்ற சொல்லும் இணைந்து ஆசான்சொல் என்ற பெயர் வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இதை அசென்சோல் என்று அழைத்தனர். பின்னர் அசன்சோல் என்று மருவியது.
துர்காபூர் (துர்காபூர்) :
கி.பி.18 ஆம் ஆண்டு பர்த்வான் மகாராஜாவிடம் இருந்து இந்த பகுதிகளை பெற்ற கோபிநாத் சட்டோபாத்யாவின் பரம்பரையில் வந்த துர்காசரண் சட்டோபாத்யாவின் பெயரை தாங்கி துர்காபூர் என்ற பெயர் வந்தது.
பர்த்வான்:
ஜைன மதத்தின் 24வது தீர்த்தரங்கரான வர்த்தமான மாவீரரின் பெயரைக் கொண்டு விளங்குகிறது. வர்த்தமான் என்பதற்கு வங்காள மொழியில் போரத்தமான் என்பது இணையான சொல்.
மண்பம் (Manpam) :
கி.பி.16 ஆம் ஆண்டு அக்பரின் ஆட்சியின் போது இந்த பகுதிக்கு ஆளுநராக இருந்த முதல்வர் மான் சிங்கிடம் இருந்து இந்த பெயரைப் பெற்றது என்று கூறுவர்.
மன்பஜார் அல்லது மன்பூம் காஸ் பர்கானாஸ் என்பதிலிருந்து இந்த பெயர் உருவானது என்றும் கூறுவர்.
மால்டா (மால்டா) :
கி.பி.18 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த இடம் ஏங்கல்சாவத் என்று அழைக்கப்பட்டது. கி.பி.19 ஆம் ஆண்டு முதல் கருவூலம் இங்கு திறக்கப்பட்ட பின்னர் ஆங்கில பஜார் என்று அழைக்கப்பட்டு பின்னர் மால்டா என்று மறுபெயரிடப்பட்டது.
பெர்ஹாம்பூர் (பெர்ஹாம்பூர்) :
பட்டு நகரம் என்று அறியப்படும் இந்த நகரம் படைப்பு கடவுள் பிரம்மாவின் பெயரை தாங்கி பெயர் பெற்றது.
ஹவுரா (ஹவுரா) :
ஹோர் என்ற வார்த்தையில் இருந்து வந்தது. நீர், சேறு, வண்டல் மண் சார்ந்த சதுப்பு நில ஏரியை குறிக்கும் பெங்காலி வார்த்தை.
டார்ஜிலிங் (டார்ஜிலிங்) :
ஆங்கிலேயர் வருகையின் போது டார்ஜிலிங் நகரம் பூர்வகுடிகளான லெப்சா மக்களால் டோர்ஜே-லிங் அல்லது தண்டர்போல்ட் என்று அழைக்கப்பட்டது. அதாவது டோர்ஜியின் நிலம் அல்லது இந்திரனின் இடி மின்னல் ஆயுதம் என்ற பொருள். டார்ஜிலிங் என்ற சொல் திபெத்திய டோர்ஜெலிங் அல்லது டோர்ஜே-க்ளின் என்பதிலிருந்து பெறப்பட்டது.
ஹல்தியா (ஹல்டி) :
இந்த ஊர் ஹூக்லி நதி மற்றும் ஹல்டி நதியின் சங்கமத்தில் அமைந்துள்ளது. ஹல்டி நதியால் சூழப்பட்டுள்ளதால் இந்த நகருக்கு ஹல்தியா என்ற பெயர் வந்தது.
காரக்பூர் (காரக்பூர்) :
மல்லபூம் வம்சத்தின் கார்கா மல்லா இந்த நகரை கைப்பற்றியபோது அவரின் பெயரை இந்த ஊர் பெயர் பெற்றது என்று கூறுவர்.
இந்த நகரை நிறுவிய காரக்சிங் பாலால் நிறுவப்பட்ட பழைய சிவன் கோயிலான கர்கேஸ்வரர் என்பதிலிருந்து நகருக்கு பெயர் வந்தது என்றும் கூறுவர்.
கூர் பெஹார் (கூச் பெஹார்) :
கூச் என்பது கோச் என்ற வார்த்தையின் சிதைந்த வடிவம். கோச் என்பது அங்குள்ள பழங்குடியினரை குறிக்கும். பெஹார் என்ற சொல் விஹார் என்பதன் வாங்காள சொல். கோச்சாகளின் நிலம் என்று பொருள்படும்.
கொச்சுகுமாரி மற்றும் மஹாதேவ் இடம்பெயர்ந்த காரணத்தால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
தங்குனி :
பெங்காலி வார்த்தையான தன்யா மற்றும் குனி என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. தன்யா என்றால் தானியம் என்றும் குனி என்றால் குவியல் என்றும் பொருள். இந்த இடம் ஒரு காலத்தில் தானியங்களை குவித்து வைக்கும் இடமாக இருந்ததால் இந்த பெயர் வந்தது.
தங்குனி என்ற உள்ளூர் தெய்வத்தின் பெயரால் நகரத்திற்கும் தங்குனி என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.
தங்குனி என்ற பெயர் தேனுகுழி என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்தது என்று கூறுகின்றனர். தேனு என்றால் மாடு என்றும் குனி என்றால் குழி என்றும் பொருள். அதாவது மாடுகளை கட்டி வைத்திருக்கும் குழி என்ற பொருள்.
ரணகாட் :
ராணி , ராணா (போர்வீரன்) மற்றும் காட் (நதிக்கு செல்லும் படிக்கட்டுகள்) ஆகியவற்றிலிருந்து வந்தது என்றும் கூறுகின்றனர்.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கொள்ளையடித்த ராணா டகோயிட் என்ற கொள்ளையனின் பெயரால் இந்த ஊருக்கு பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.
ராய்கஞ்ச் :
ராய் என்ற வார்த்தை ராதா (கிருஷ்ணரின் மனைவி) வை குறிக்கிறது என்றும் கூறுகின்றனர்.
ராய் என்ற பெயர் தினாஜ்பூர் அரச குடும்பத்துடன் தொடர்புடைய பெயர் என்றும் கூறுகின்றனர்.
பழங்காலத்தில் இந்த இடத்தில் ஏராளமான ரை சோர்ஷே (ஒரு வகை சிறப்பு கடுகு பயிர்கள் விளைந்ததால் இந்த பெயர் வந்தது என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.
கிருஷ்ணாநகர் :
இந்த நகரம் இதை நிர்மாணித்த கிருஷ்ண சந்திர ரேயின் பெயரை தாங்கி கிருஷ்ணாநகர் என்ற பெயரைப் பெற்றது.
நபத்வீப் :
வங்காள மொழியில் நாபா மற்றும் த்விபா என்ற சொற்களுக்கு புதிய மற்றும் தீவு என்ற பொருள். கங்கையின் கீழ் நீரோட்டத்தில் வண்டல் மண் படிவுகள் படிப்படியாக அடித்து செல்லப்பட்டு உருவாகிய தீவு என்பதால் இந்த பெயர் பெற்றது.
மிட்னாபூர் (மிட்னாபூர்) :
இந்த நகரம் கி.பி.17 ஆம் ஆண்டு வாழ்ந்த முஸ்லீம் அறிஞரான ஹாஜி முஸ்தபா மதினியின் பெயரைக் கொண்டு மதினிபூர் என்று பெயரிடப்பட்டது. மதினிபூரின் ஆங்கில சிதைவு மிட்னாபூர் என்பதாகும்.
கி.பி. 13ம் ஆண்டு இந்த நகரை நிறுவிய மேதினிகர் பெயரை கொண்டு நகருக்கு பெயர் வந்தது என்றும் கூறுவர்.
ஜல்பைகுரி (ஜல்பைகுரி) :
ஜல்பைகுரி என்ற பெயர் ஜல்பாய் என்ற வார்த்தையில் இருந்து வந்தது. ஆலிவ் என்பது இதன் அர்த்தத்ம். இந்த பகுதிகளில் ஆலிவ் வளர்ந்ததால் குரி என்ற இடம் என்ற பொருளுடன் ஜல்பைகுரி என்ற பெயர் வந்தது.
பாங்குரா (பாங்குரா) :
மஹாபாரத காலத்தில் இந்த பகுதி சுஹ்மோ பூமி என்று அழைக்கப்பட்டது. மல்லா வம்சத்தின் அரசரான பீர் ஹம்பீர் அவரது இரு மகன்களுக்கு தனது இராஜ்ஜியத்தை பிரித்து கொடுத்தார். இந்த பகுதி கிடைத்த பீர் பாங்குரா அதில் நகரத்தை உருவாக்கி தனது பெயரை வைத்தார்.
ஜங்கிபூர் (ஜாங்கிபூர்) :
இந்த நகரம் மொகலாய பேரரசர் ஜஹாங்கீரால் நிறுவப்பட்டதால் ஜஹாங்கீர்பூர் என்று அழைக்கப்பட்டு தற்போது ஜங்கிபூர் என்று அழைக்கப்படுகிறார்.
பாரக்பூர் கண்டோண்மெண்ட் (பாரக்பூர்) :
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் இருந்ததால் Barracks என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தத்திற்கு ஏற்ப பாரக்பூர் கண்டோன்மெண்ட் என்ற பெயர் வந்தது என்று கூறுவர்.
அயினி அக்பரி நூலில் இந்த ஊரின் பெயர் பர்பக்பூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.
சந்தன்நகர் (சந்தன்நகர்) :
இதன் பழைய பெயர் சந்தர்நாகூர். பிரெஞ்சில் சந்தர்நாகோர் என்று அழைக்கப்பட்டது. பெங்காலியில் சந்த் என்றால் நிலா. ஹூக்ளி ஆற்றின் கரையில் வடிவத்தை குறிக்கிறது என்றும் கூறுவர்.
பெங்காலியில் சந்தன் என்றால் சந்தனம். ஒரு காலத்தில் சந்தன மர வியாபாரத்தில் இந்த ஊர் கொடி கட்டி பறந்த காரணத்தால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
சண்டி என்ற தெய்வத்தின் பெயரிலிருந்து வந்தது என்றும் கூறுவர்.
செரம்பூர் (செரம்பூர்) :
டென்மார்க் மன்னரான ஜந்தாம் ஃபிரடெரிக் நினைவாக ஃபிரடெரிக்நகர் என்று டேனிஷ்காரர்கள் பெயரிட்டனர். அது உள்ளூர் மொழியில் இயக்கப்பட்டது செரம்பூர் என்றும் அழைக்கப்பட்டது.
முர்ஷிதாபாத் (முர்ஷிதாபாத்) :
இந்த நகரை நிறுவிய நவாப் முர்ஷித் குலி கான் நினைவாக பெயரிடப்பட்டது.

Comments
Post a Comment