15) சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் :
இன்றைய சத்தீஸ்கர் "தக்ஷின் கோசாலை" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கி.பி.1795ல் தான் சத்தீஸ்கர் என்ற பெயர் வந்தது. இந்த பகுதிகள் 36 கோட்டைகள் இருந்ததால் சத்தீஸ்கர் என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் கோட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னரும் அதே பெயரில் தான் அழைக்கப்பட்டது. காலச்சூரிகளின் காலத்தில் இந்த பகுதி 36 கர்களாக (பகுதிகள்) பிரிக்கப்பட்டதால் இந்த பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்திய சுதந்திரம் பெற்ற போது சத்தீஸ்கர் மத்திய பிரதேசம் மற்றும் பேராரின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் கி.பி.1956ல் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது இந்த பகுதிகள் மத்திய பிரதேசத்துடன் இணைந்தது. பின்னர் கி.பி.2000ல் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து சத்தீஸ்கர் என்ற இந்தியாவின் 26வது புதிய மாநிலமாக உருவானது.
ராய்ப்பூர்: கல்சூரி வம்சத்து மன்னரான இராமச்சந்திரா இந்த நகரை நிர்மாணித்து ராய்ப்பூர் என்று பெயரிட்டார். சிலர் இராமச்சந்திராவின் மகனான பிரம்மதேவ் ராய் இந்த நகரை நிர்மாணித்து தனது பெயரில் ராய்ச்சூர் என்று பெயரிட்டார் என்றும் கூறுவர்.
கல்லாரி : இந்த கிராமத்தின் மலை உச்சியில் உள்ள கல்லரி மாதாவின் கோயிலின் காரணமாக கல்லாரி என்று அழைக்கப்பட்டது என்று கூறுபவர்.
முன்பு கல்லா வாடிகா என்ற பேய்களின் தோட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டவர்கள் இங்கு தான் வந்தனர். இங்கு தான் ஹிடும் என்ற அரக்கனை கொன்று அவன் சகோதரியான ஹிடும்பானியை மணந்தார் என்றும் கூறுகின்றனர்.
பிலாஸ்பூர்: கி.பி.17ம் ஆண்டு வாழ்ந்த பிலாசா என்ற மீனவப்பெண்ணின் பெயரால் நகருக்கு பெயர் வந்ததாகக் கூறுவர்.
இந்த பகுதியில் மிகுதியாக காணப்பட்ட "பலாஷ்" மரமான ப்யூட்டா ஃப்ராண்டோசாவின் பெயரால் நகருக்கு பெயர் வந்தது என்றும் கூறுவர்.
கோர்பா : இந்த பகுதியில் வசித்த கோர்வா பழங்குடி இனமகக்ளின் காரணமாக நகருக்கு கோர்பா என்ற பெயர் வந்தது.
ராய்கர்: ராய்கர் ராஜா மதன் சிங் சடா மகாநதியின் அருகே ஒரு கோட்டையை கட்டி ராய் என்று பெயரிட்டார். அதிலிருந்து ராய்கர் என்ற பெயர் ஊருக்கு வந்தது.
ராஜ்நந்த்கான் : கிருஷ்ணரின் வழித்தோன்றல்களான நந்த்ஸ், நந்தகிராமம் ஆகியோரின் காரணமாக இந்த நகருக்கு நந்த்கிராம் என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னர் இது ராஜ்நந்த்கான் என்ற பெயர் மாற்றப்பட்டது.
ஜக்தல்பூர்: இந்த பகுதி முன்பு தண்டகாரண்யா என்று அழைக்கப்பட்டது. இது வால்மீகி ஆஸ்ரமங்களின் வீடு என்று நம்பப்படுகிறது. இதன் பழைய பெயர் ஜக்துடுகுடா. இந்த பகுதி மகாராஷ்டிரா மன்னரான ஜக்துடுவின் பெயரால் ஜக்தல்பூர் என்றானது.
தண்டேவாடா : இந்த பகுதியில் புகழ்பெற்று விளங்கும் தண்டேஸ்வரி கோயிலின் பெயரிலிருந்து ஊருக்கு பெயர் வந்தது. முன்பு இராமர் சீதை இலட்சுமணரோடு வாழ்ந்த தண்டகாரண்ய காட்டின் ஒரு பகுதி தான் இது.
பஸ்தர் (பஸ்தர்) : புராணங்களின்படி காகதீய மன்னர்களின் தண்டேஸ்வரி தேவி வாரங்கல்லின் மன்னரான புராஷோத்தம் தேவின் சகோதரரான அனம் தேவ் என்பவருக்கு தனது வஸ்திரத்தை (ஆடையை) பரப்பி இராஜ்யத்தை நிர்மாணிக்க உதவினார். பஸ்தர் என்ற சொல் வஸ்திரம் என்ற சொல்லில் இருந்து வந்த சொல் என்று கூறுவர்.
இந்த பகுதியில் பரந்த பரப்பில் மூங்கில் காணப்படுவதால் பன்ஸ்தாரி (மூங்கில் நிலம்) என்ற வார்த்தையில் இருந்து பஸ்தர் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.
பிலாய் (பிலாய்) : இங்கு வாழ்ந்த பில் பழங்குடி இன மக்களிடம் இருந்து ஊருக்கு பிலாய் என்ற பெயர் வந்தது.
அம்பிகாபூர் (அம்பிகாபூர்) : இந்த நகரத்தின் பெயர் இந்து தெய்வமான அம்பிகா தேவியின் (மகாமாயா) பெயரில் இருந்து வந்தது.
தம்தாரி (Dhamtari) : தம்தாரி என்ற சொல் தம்ம தாராய் என்ற பெளத்த மத சொற்களில் இருந்து உருவானது.
சிர்பூர் (சிர்பூர்) : இந்த நகரம் முன்பு ஸ்ரீபுரா, ஸ்ரீபூர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு பாண்டுவன்ஷி வம்சத்தின் தலைநகராக இருந்தது. நன்மையின் நகரம் என்று பொருள்படும்படி அழைக்கப்பட்ட நகரம் தற்போது மருவி சிர்பூர் என்று அறியப்படுகிறது.
துர்க் (துர்க்) : இந்த நகரின் பழைய பெயர் சிவதுர்க் என்பதாகும். அதாவது சிவநாத நதியில் உள்ள கோட்டை என்ற பொருள்.
ராஜிம் ( Rajim) : இந்த ஊரிலுள்ள புகழ்பெற்ற விஷ்ணு கோயிலான ராஜிம் லோச்சன் மந்திரியின் காரணமாக நகருக்கு ராஜிம் என்ற பெயர் வந்தது.
பானுபிரதாப்பூர் (பானுபிரதாப்பூர்) :
இந்த நகரத்தின் பெயர் முந்தைய காங்கர் சமஸ்தானத்தின் கடைசி ஆட்சியாளரான பானுபிரதாப் தேவ் என்பவரின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்கஞ்சூர் : பகான் மற்றும் ஜோன் என்ற இரண்டு வார்த்தைகளின் கலவை தான் இது. பக்கன் என்றால் ரஷ்ய மொழியில் பாஸ் என்றும் ஜோர் என்றால் பெங்காலியில் இரண்டு என்றும் பொருள். இஸ்ரேலி மொழியில் ஜோர் என்றால் கடவுள் உயர்த்துவார் என்ற பொருள்.
இரத்தன்பூர் : இரத்தினபுரி கலாச்சூரிகளின் மன்னரான தக்ஷின கோசலை கைப்பற்றி தும்மன (தற்போது துமன் நகரம்) நகரை தனது தலைநகராக்கினார். அவரது பேரனான இரத்தினராஜா தனது பெயரில் நகரை நிர்மாணித்து இரத்தினபுரி என்று பெயரிட்டார். பின்னர் அதுவே இரத்தன்பூர் என்று மாறியது.
காங்கர் : இந்த பகுதி முன்பு தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது துறவிகள்/முனிவர்கள் வசித்து வந்தனர். காங்க், லோமேஷ், சிருங்கி, அங்கீரா போன்ற ரிஷிகள் வசித்து வந்தனர். அதனால் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டு இருக்கலாம்.

Comments
Post a Comment