27) சிக்கிம்
சிக்கிம் (Sikkim) :
சிக்கிம் என்பதற்கு லிம்பு மொழியில் சு என்பதற்கு புதிய என்றும் கைம் என்பதற்கு அரண்மணை அல்லது வீடு என்று பொருளில் புதிய அரண்மணை (வீடு) என்று பொருள்படும். சிக்கிமின் திபெத்திய பெயர் ட்ரென்ஜோங் என்பதாகும். இதற்கு அரிசி பள்ளத்தாக்கு என்று பொருள். இந்திய இலக்கியங்களில் இந்திரகில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது போர் கடவுளான இந்திரனின் தோட்டம் என்று பொருள். சிக்கிமின் பூர்வகுடிகளான லெப்சா மக்கள் இதை நெய்-மே-எல் என்று அழைத்தனர். அதற்கு சொர்க்கம் என்று பொருள். உண்மையிலேயே இயற்கை அழகும் நீர்வளமும் வன விலங்குகளும் விதவிதமான பறவையினங்களும் கண்கவர் சூழலும் நிறைந்த இந்த மாநிலம் உண்மையிலையே சொர்க்கம் தான். மாநிலத்தின் அதிகாரபூர்வமாக மொழிகளாக ஆங்கிலம்,நேபாளி, சிக்கிமீஸ் மற்றும் லெப்சா ஆகியவைகளாக உள்ளது. இந்து மதமும் புத்த மதமும் பெரும்பான்மையாக உள்ளது. கி.பி. 17ம் நூற்றாண்டில் நாம்க்யால் ராச்சியத்தால் ஆளப்பட்டது. ஃபன்ட்சோக் நாம்க்யால் கி.பி.1642ல் முதல் முடியாட்சியை துவக்கினார். திபெத்தில் இருந்து வந்த மூன்று துறவிகள் அவரை ஆசீர்வதித்தனர். அவருக்கு பின்னர் அவரது மகன் டென்சுங் நாம்க்யால் ஆட்சிக்கு வந்தார். கி.பி.1700ல் அரியணை மறுக்கப்பட்ட சோக்யாலின் ஒன்றுவிட்ட சகோதரியின் உதவியால் பூட்டானியர்களால் சிக்கிம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அடுத்த 10 ஆண்டுகளில் திபெத்தியர்கள் அவர்களை விரட்டி மீண்டும் சோக்யாலை ஆட்சியில் அமர்த்தினர். ஆனாலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேலான பூட்டானியர்கள் மற்றும் நேபாளிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது. கி.பி. 1791ல் சீனா சிக்கிமிற்கு ஆதரவாக கூர்க்கா ராஜ்ஜியத்திற்கு எதிராக திபெத்திற்கு ஆதரவாக படைகளை அனுப்பி கூர்க்கா படைகளை விரட்டி சிக்கிம் மீது தனது கட்டுபாட்டை நிறுவியது. கி.பி.1817ல் கூர்க்கா போருக்கு பின்னர் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி முன்னர் கைப்பற்றப்பட்ட சிக்கிமின் பிரதேசங்கள் மீண்டும் வந்தது. கடைசியில் கி.பி.1890ல் பிரிட்டிஷ் இந்தியாவின் சமஸ்தானமாக மாறியது. பின்னர் கி.பி.1947ல் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய ஓன்றியத்துடனும் பின்னர் கி.பி.1950ல் இந்திய குடியரசுவுடன் இணைந்தது. கி.பி.1975ல் முடியாட்சி கலைக்கப்பட்டு இந்தியாவின் 22வது மாநிலமாக இணைந்தது. இதன் தலைநகரமாக காங்டாக் உள்ளது. இந்தியாவின் உயரமான சிகரமாகவும் உலகில் மூன்றாவது பெரிய சிகரமாவும் உள்ள கஞ்சன்ஜங்கா இந்த மாநிலத்தில் தான் உள்ளது.
காங்டாக் (Gangtok) : துல்லியமான விளக்கம் தெரியவில்லை. ஆனாலும் பெரும்பாலானோர் மலை உச்சி என்பது தான் அதன் பொருள் என்று கூறுகின்றனர். திபெத்திய மொழியில் மலை உச்சி என்று பொருள்படும்.
யக்சோம் (Yuksom) : திபெத்தில் இருந்து வந்த மூன்று துறவிகள் வந்து சிக்கிமின் முதல் மன்னராக புன்ட்சோக் நம்கியாலை தேர்ந்தெடுத்தனர். அதனால் "மூன்று துறவிகளின் சந்தித்த இடம்" என்ற பொருளில் யக்சோம் என்ற பெயர் வந்தது
கெய்சிங் (Geyzing) : இதற்கு ராஜாவின் தோட்டம் என்று பொருள். அரண்மனையை அடுத்து ராஜாவின் தோட்டம் இருந்ததால் இந்த பெயர் வந்தது. பின்னர் அதுவே நகருக்கும் பெயராக ஆனது.
தரம்டின் (Dharamdin) : உள்ளூர் மொழியான லெப்சா மொழியில் இருந்து "டலோம்" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. அதற்கு ஒய்வெடுக்கும் இடம் அல்லது தட்டையான நிலம் என்று பொருள்.
மங்கன் (Mangan) : இது கி.பி.10ம் நூற்றாண்டில் காலியோக் மங்கன் என்பவரிடம் இருந்து அவரின் பரம்பரையினர் என்ற பொருளில் கூறப்படுகிறது. Mongach மொழியில் இதற்கு நீண்ட தலைமுடியினர் என்று அர்த்தம்
லாச்சுங் (Lawchung) : லாச்சுங் என்ற சொல்லுக்கு சிறிய கணவாய் என்று அர்த்தம். இது லாச்சுங் மற்றும் லாச்சென் நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது
சுந்தாங் (Chungthang) : இது சுங்தாங் அல்லது சுந்தாங் என்றும் அழைக்கப்படுகிறது. இது 'Tsemo Rinchen Thang " என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. அதற்கு விலைமதிப்பற்ற சமவெளி என்று அர்த்தம்.
லாச்சென் (Lachen) : லாச்சென் என்ற சொல்லுக்கு பெரிய கணவாய் என்று அர்த்தம்.
பாக்யோங் (Pakyong) : லெப்சா வார்த்தையான பா யோங் என்பதிலிருந்து வந்தது. அதற்கு வில்லின் மூங்கில்கள் என்று அர்த்தம். லெப்சா மக்கள் ஒரு இடத்தில் பெரும்பான்மையாக காணப்படும் பொருளின் அடிப்படையில் நகருக்கு பெயர் வைப்பது வழக்கம் என்பதால் இங்கு மூங்கில் மரங்கள் அதிகமாக காணப்பட்டதால் இந்த பெயரை சூட்டினர்.
பெல்லிங் (Pelling) : பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரெட்டி பெல்லிங் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதால் நகருக்கு பெல்லிங் என்ற பெயர் வந்தது
ரவங்கலா (Ravangla) : சிக்கிம் மொழியில் இருந்து வந்தது. ரா என்பதற்கு காட்டு ஆடு என்றும் வோங் என்றால் வளர்க்கும் இடம் என்றும் லா என்றால் கணவாய் (மலை) என்றும் பொருள். காட்டு ஆடுகளை வளர்க்கும் இடமான மலைப்பகுதி என்பதால் ரவங்கலா என்ற பெயர் வந்தது
நாத்துலா (Nathu la) : நாத்து என்றால் கேட்கும் காதுகள் என்றும் லா என்பதற்கு கணவாய் என்றும் பொருள். எதிரொலிக்கும் மலையை கொண்டதால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர். இது இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் உள்ளது.
ராங்போ (Rangpo) : இங்கு ஓடும் ராங்போ நதியின் பெயரால் நகருக்கு ராங்போ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது
காம்லிங் சுல்துங் (Kamling Suldung) : 2 மொழிகளின் வார்த்தைகளின் கலவையாக இதன் பெயர் உள்ளது. பூட்டியா மொழியில் காம் என்பதற்கு வறண்ட என்றும் லெப்சா மொழியில் சுலதுங் என்பதற்கு ஜமுன்னா மரம் என்றும் பொருள். இந்த பகுதி வறண்ட பகுதியாக இருப்பதால் இந்த பெயர் வந்தது.
லெக்ஷ்ஷிப் (Legship) : 'Lyuksyep' என்பது தான் உண்மையான பெயர். தவறான உச்சரிப்பில் லெக்ஷ்ஷிப் என்றானது. லெப்சா மொழியில் மிளகாய் போன்ற சுவையுடைய ஒரு ஃபெர்ன் என்ற பொருள். இங்கு அதிகமாக காணப்பட்டதால் இந்த பெயர் வந்தது
தாஷிடிங் (Tashiding) : இதற்கு "அர்ப்பணிக்கப்பட்ட மத்திய மகிமை (The Devoted Central Glory) " என்று அர்த்தம். கி.பி.17ம் நூற்றாண்டில் திபெத்திய புத்த மதத்தின் நியிங்மாபா குழுவின் வழிபாட்டு மையமாக இருந்த காரணத்தால் இந்த பெயர் வந்தது.
பெரிங் (Pering) : பைரிங் என்பது பூட்டியா மொழியில் பு (bu) என்பதற்கு பாம்பு என்றும் மோதிரம் என்றும் சிலர் கருதுகின்றனர். சிலர் லெப்சா மொழியில் பைரிங் என்பதற்கு "மூங்கில்கள் நிறைந்தது" என்றும் அர்த்தம் கூறுகின்றனர்.சிலர் இரண்டு விளக்கமும் தவறு. நேபாள மொழியில் இருந்து வந்தது என்றும் அதன் அர்த்தம் தெரியவில்லை என்றும் கூறுவர்.
ரெனாக் (Rhenok) : ரெனாக் என்பதற்கு லெப்சா மொழியில் கருப்பு மலை என்று அர்த்தம்.
தரேய்தாங் (Tareythang) : இது "தாரே" என்ற வார்த்தைகளில் இருந்து வந்தது என்றும் தாங் என்பதற்கு சமவெளி நிலம் என்றும் தாரே பீர் கிராமத்தின் கீழுள்ள சமவெளி நிலம் என்ற பொருளில் தாரேதாங் என்று வந்ததாக கூறுகின்றனர்
சிங்டம் (Singdam) : சிஞ்சுதாங் என்பது பழைய பெயர். இங்கு ஓடும் டீஸ்டா நதி மரக்கட்டைகளை எடுத்துச்சென்று ஆற்றங்கரையில் சேகரித்து வைக்கும். மரக்கட்டைகளை பெரிய அளவில் சேகரித்து தேவைக்கு ஏற்ற இடங்களில் விற்பனைக்கு அனுப்பப்பட்டதால் சிஞ்சுதாங் என்ற பெயர் வந்தது. அதற்கு பதிவுகளின் தொகுப்பு என்று பொருள். பின்னர் மருவி சிங்டம் என்றானது. சிங் என்பதற்கு லோ காயில் மரம் என்று பொருள். அதனால் தான் சிங்டம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்
டிங்கிடாம் (Tinkitam) : டான்கடம் என்ற அரக்கனின் பெயரால் டிங்கிடாம் என்ற பெயர் பூட்டியா மொழியில் இருந்து வந்தது.
ரின்செங்போம் (Rinchenpong) : திபெத்திய மொழியில் ரீஸம் என்பதற்கு மூன்று மலைகள் சந்திக்கும் இடம் என்று பொருள்.
மெல்லி (Melli) : நேபாளிய மொழியில் மெல்லி என்பதற்கு இறந்தவர்களை தகனம் செய்யும் இடம் என்று பொருள்.
சேவோகே (Sevoke) : இங்குள்ள காளி மாதாவின் பெயரில் அமைந்த சேவோகேஸ்வரி காளி மாதா ஆலயத்தின் பெயரால் நகருக்கு சேவோகே என்ற பெயர் வந்தது
ஹூ பார்மியோக் (Hee Barmiok) : இங்கு ஓடும் ஹூ நதியின் பெயரால் ஹூ என்ற பெயரும் இதை அடுத்துள்ள பார்மியோக் என்ற இடத்தின் பெயரையும் சேர்த்து ஹூ பார்மியோக் என்ற பெயர் வந்தது
டிக்சு (Dikshu) : டீஸ்டா நதி மற்றும் டிக்சு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் டிக்சு நதியின் பெயரால் டிக்சு என்ற பெயர் வந்தது
நாம்தாங் (Namthang) : இதன் நாம் என்ற சொல்லுக்கு சூரியன் என்றும் தாங் என்ற சொல்லுக்கு இடம் என்றும் பொருள்
சலம்தாங் (Chalamthang) : லெப்சா மொழியில் சலம் என்பதற்கு ஆரஞ்சு பண்ணை என்றும் தாங் என்பதற்கு இடம் என்றும் பொருளில் ஆரஞ்சு பண்ணைகள் நிறைந்த இடம் என்ற பொருளில் சலம்தாங் என்ற பெயர் வந்தது
ரோங்லி (Rongli) : இங்கு நகரின் நடுவில் பிரிந்து ஓடும் ரோங்போ நதியின் பெயரிலிருந்து ரோங்லி என்ற பெயர் வந்தது
டாம்தாங் (Damthang) : இது பூட்டியா மொழி சொல்லான டம்போ தாங் என்பதிலிருந்து வந்தது. அதற்கு சேற்று மண் என்று பொருள்
தாங்கு சமவெளி (Thangu Valley) : இங்கு ஓடும் தாங்கு ஆற்றின் பெயரால் இதற்கு இந்த பெயர் வந்தது.

Comments
Post a Comment