29) மிசோராம்

 



மிசோராம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. ஏழ சகோதரிகளின் மாநிலங்கள் என்று அழைக்கப்படுவதில் மிசோராமும் ஒன்றாகும். மிசோ என்பது மிசோ மொழியில் இருந்து மிசோ மக்கள் என்றும் ராம் என்றால் நிலம் என்ற பொருளில் "மிசோ மக்களின் நிலம்" என்பதாக மிசோராம் என்ற பெயர் வந்தது.‌ இன்னொரு கருத்தாக ஸோ என்பது குளிர் மண்டலம் என்றும் பொருள்படும் என்பதால் மிஸோ குளிர்மண்டல மக்களின் நிலம் என்றும் பொருள் கொள்ளலாம் என்பதாகவும் உள்ளது. நாட்டிலையே சிக்கிமிற்கு பிறகு 2வது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் இது. இதன் பரப்பளவில் 85% காடுகள் என்பதிலிருந்து இதன் இயற்கையை புரிந்து கொள்ளலாம். இதன் மக்கள் தொகையில் 95% பழங்குடி இனத்தவர்கள் தான். கி.பி.16ம் நூற்றாண்டில் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து குடியேற துவங்கியவர்கள் 18ம் நூற்றாண்டுகள் வரை தொடர்ந்து குடியேறினர். கடந்த காலங்களில் மிசோக்கள் ஆன்மிஸ்ட்கள் மற்றும் இயற்கையை வணங்கினார்கள். ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்னர் 87% பேர் தற்போது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இது நீல மலைகளின் நிலம் மற்றும் லுஷாய் ஹைலேண்டர்களின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் நீர்வீழ்ச்சிகளும் ஆறு ஏரிகளும் மலை சிகரங்களும் காடுகளும் நிறைந்து காணப்படுகிறது. மிசோராமின் மலைப்பகுதிகள் மேகங்கள் அல்லது மூடுபனியால் மூடப்பட்டு இருக்கும். இவர்களின் முக்கிய தொழிலாக விவசாயமும் மூங்கில் வளர்த்தலும் உள்ளது. மிசோராமை "இயற்கையின் ஆவி வசிக்கும் இடம்" என்று கூறுவதிலிருந்து இயற்கை இங்கு மக்களின் வாழ்வில் பின்னி பிணைந்துள்ளது. ஏராளமான புதிய வகை பறவைகளின் சரணாலயமாகவும் உள்ளது. மிசோக்கள் தென் சீனாவிலுள்ள குல் என்ற புராண குகையில் இருந்து தோன்றியவர்கள் என்று முன்னோர்கள் வழியாக நம்புகின்றனர். ஆனால் மரபணு ரீதியாக மங்கோலாய்டு இனத்தவர்கள் மற்றும் பர்மாவின் ஷான் மாநிலத்திலிருந்து குடியேறியவர்கள் என்று தெரிகிறது. இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் அசாம் மாநிலத்தில் இருந்தது. பின்னர் கி.பி.1971ல் யூனியன் பிரதேசமாக மாறியது. பின்னர் கி.பி.1987ல் இந்தியாவின் 23வது மாநிலமாக உதயமானது.

ஐஸ்வால் (Aizawl) : Ai என்பதற்கு ஒரு வித மூலிகை என்றும் Zawl என்பதற்கு வெற்று நிலம் என்றும் மிசோ மொழியில் பொருள். அதன்படி மூலிகையின் இடம் என்று அர்த்தம். ஐ என்பது ஒருவித வேர்த்தண்டு கிழங்கு தாவரமாகும். 

வபாய் (Vapai) : இதன் பழைய பெயர் இவாபாய் என்பதாகும். அதாவது இவா நதியின் சமவெளி என்று அர்த்தம். நாளடைவில் மருவி வபாய் என்றானது.

தெற்கு சோட்டே (S.Zote) : இந்த பகுதியில் முதலில் குடியேறிய பழங்குடி இனமான சோட்டே மக்களின் பெயரால் இதற்கு சோட்டே என்றே பெயர் வந்தது.

லுங்லே (Lunglei) : இதற்கு பாறை பாலம் என்று பொருள். நகரின் பெயர் ஆற்றின் அருகில் காணப்படும் பாறை போன்ற பாலத்தில் இருந்து வந்தது.

சவாங்ட்லால் (Chawngtlal). : இந்த பகுதியில் அதிகமாக காணப்பட்ட சவாங்ட்லால் என்ற பூவின் பெயரால் இந்த கிராமத்திற்கு பெயர் வந்தது.

செர்ஷிஃப் (Serchhip) : இந்த கிராமத்தை அடுத்துள்ள முதல் மலையின் உச்சியில் சிடரஸ் மரங்கள் அமைந்திருந்ததால் சிட்ரஸ் ஆன் டாப் என்ற பொருளில் கிராமத்திற்கு செர்ஷிஃப் என்ற பெயர் வந்தது 

கொலசிப் (Kolasib) : இந்த கிராமத்தின் தலைவராக இருந்த கவாலா என்ற ஒருவரின் பெயரால் "தலைவர் கவாலாவின் கிராமம்" என்பதே கொலசிப் என்றானது.

சைச்சுவல் (Chaizuwal) : இங்கு பெரும்பான்மையாக இருந்த சைலோ இனத்தவரின் காரணமாக இந்த பெயர் வந்தது.

தென்சால் (Thenzawl) : இது தென் மற்றும் சால் என்ற இரண்டு சொற்களின் கலவையாகும். தென் என்பது இங்கு பெரும்பான்மையாக காணப்படும் ஒரு மரத்தின் பெயராலும் Zawl என்பதற்கு "Level of plane" என்ற பொருளில் விமானம் பறக்கும் உயரமான பகுதியில் அமைந்துள்ள சமவெளி பகுதியில் அமைந்துள்ளதால் இந்த பெயர் வந்ததாக தெரிகிறது.

ஹ்னாஹ்தியால் (Hnahthial) : இந்த பெயர் மிசோ சொல்லில் இருந்து வந்தது. இது இந்த பகுதியில் பெரும்பான்மையாக காணப்படும் Phrynium capitatum என்ற ஒரு தாவரத்தின் பெயரிலிருந்து வந்தது.

மாமிட் (Mamit) : இங்கு குடியேறிய மைத்தி கலாச்சார மக்களின் பெயரால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது 

சியாஹா (Siaha) : சைஹா என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் மாரா மொழியில் சியா என்றால் யானை என்றும் ஹா என்றால் பல் என்றும் பொருள். இங்கு யானை பற்கள் அதிக அளவில் கிடைத்ததால் சியாஹா என்று அழைத்தனர். ஆனால் மிசோ மக்கள் இந்த பகுதியை சைஹா என்று அழைக்கின்றனர் 

காவ்பங் (Khawbung) : இந்த இடம் மிசோ கலைஞர்களின் சதுக்கமாகும். மிசோ கலாசாரத்தின் பராம்பரிய இடமாக இருக்கிறது. 

கெல்கங்க் (Kelkang) : கெல்கங்க் என்பதற்கு கடவுளின் வீடு என்று பொருள்.

லுங்ஃபுன்லியன் (Lungphunlian) : இதற்கு பெரிய ஒற்றைக்கல் கிராமம் என்று பொருள். கிராமத்தின் அருகில் கிடக்கும் 13 அடி உயரம், 6 1/2 அடி அகலம் மற்றும் 2 அடி தடிமன் கொண்ட ஒற்றைக்கல்லின் பெயரால் இந்த பெயர் வந்தது 

லேம்சால் (Lamzawl) : இந்த பகுதியில் காணப்பட்ட ஒருவகை தாவரமான அஃபானாமிக்சிஸ் பாலிஸ்ஸடாச்சியா தாவரத்தின் மிசோ மொழி பெயரால் இந்த பெயர் வந்தது. 

புல்லன் (Phullen) : கிராமத்தின் அருகில் உள்ள புல்லன் மலையின் பெயரால் கந்தாய் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் பெயர் புல்லன் என்றானது. 

புக்சிங் (Pukzing) : மிசோ மொழியில் புக் என்பதற்கு குகை என்றும் பொருள். இந்த குகையில் இருந்து எப்போதும் சத்தம் வந்து கொண்டு இருந்ததால் சத்தமிடும் பாறைகளை கொண்ட குகை என்று பொருளில் அந்த குகையின் பெயரால் கிராமத்திற்கும் புக்சிங் என்ற பெயர் வந்தது 

செர்கான் (Serkawn) : ‌ ஆங்கிலேயர்கள் இங்கே வந்தபோது சமவெளி முழுவதும் எலுமிச்சை பழ மரங்கள் இருந்ததால் "லெமன்வேல் (Lemonvale)" என்று அழைத்தனர். மிசோ மொழியிலும் செர்கான் என்பதற்கு அது தான் பொருள்.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து