30) திரிபுரா

 

திரிபுரா 

இந்தியாவின் வடகிழக்கின் ஏழ சகோதரிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று . நாட்டின் 3வது சிறிய மாநிலமாகும். திரிபுராவில் 19 பழங்குடி இனங்களும் வங்காள மக்களும் உள்ளனர். ஆங்கிலம், பெங்காலி மற்றும் கோக்போரோக் ஆகியவை அதிகாரபூர்வமாக பேசப்படும் மொழிகள் ஆகும். திரிபுராவின் பழங்கால பெயர் கிராதா தேஷ் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது முழு திரிபுராவிற்குமா எந்தளவு என்று சரியாக குறிப்பிடப்படவில்லை. கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகரின் ஆட்சி கல்வெட்டிலும் இந்த பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதி பல நூற்றாண்டுகளாக த்விப்ரா இராச்சியத்தின் கீழ் இருந்தது. பின்னர் இது மாணிக்ய வம்சத்தால் ஆளப்பட்டது. திரிபுரி இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது ஹில் டிப்போரா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. மாணிக்ய வம்சத்தின் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு சமஸ்தானமாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின் இந்தியாவுடன் இணைந்தது. கி.பி.1949ல் யூனியன் பிரதேசமாக இருந்தது. கி.பி.1972ல் இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாக ஆனது. 88% கல்வியறிவு பெற்ற மாநிலம். வங்க தேசத்தின் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தானின்) எல்லைபகுதியாக இருந்த காரணத்தால் கி.பி.1971ல் வங்கதேசத்தின் சுதந்திர போரின் போது ஏகப்பட்ட இந்துக்கள் போரின் கொடுமையை மத கலவரத்தில் இருந்து தப்பித்து இங்கு அகதிகளாக இடம் பெயர்ந்து வந்தனர். பாகிஸ்தான் இராணுவத்தின் ஷெல் தாக்குதலையும் அந்த நேரத்தில் எதிர்கொண்டது. 

திரிபுரா என்ற பெயர் உதய்பூரிலிலுள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான திரிபுர சுந்தரியின் கோயிலின் தெய்வமான திரிபுர சுந்தரியின் பெயரிலிருந்து வந்தது என்பர். சந்திர வம்சத்தின் அரசரான யயாதி பரம்பரையை சேர்ந்த மன்னனான திரிபூர் என்பவனின் பெயரிலிருந்து திரிபுரா என்ற பெயர் வந்தது என்னும் கூறுவர். திப்ரா, துய்புரா, டிபாபோரா என்பது அங்கு வாழும் பழங்குடி இனத்தவரை குறிக்கும். அதிலிருந்து திரிபுரா என்ற பெயர் மருவி வந்திருக்கலாம் என்றும் கூறுவர். துய் என்ற சொல்லுக்கு நீர் என்றும் ப்ரா என்ற சொல்லுக்கு அருகில் என்றும் பொருள். துய்ப்ரா என்பது மருவி திரிபுரா என்றானது என்றும் கூறுவர். 

அகர்தலா (Agarthala) : அகர்தலா இரண்டு சொற்களின் இணைப்பினால் வந்த சொல். அதாவது அகர் அக்விலேரியா இனத்தின் வாசனை மிக்க திரவியம் மற்றும் இறைவழிபாட்டில் தூபமாக பயன்படும் பொருள். தாலா என்பது அந்த மரங்களின் அடர்த்தியை குறிக்கிறது. இங்கு ஏராளமான அகர் மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்த பெயர் வந்தது.

கைலாசஹர் (Kailashaghar) : இதன் பழைய பெயர் சம்புல் நகர் என்பதாகும். கைலாஷ் என்ற பெயர் கைலாஷ மலையையும் ஹர் என்பது சிவனையும் குறிக்கும் சொற்களாகும். கைலாஷஹார் என்பது அழைக்கப்பட்டு மருவி கைலாசஹர் என்றானது.

உனகோடி (Unagodi) : இது உள்ளூர் கோக்போரோக் மொழியில் சுப்ராய் குங் என்று அழைக்கப்படுகிறது. இது வடகிழக்கின் அங்கோர்வாட் என்று அழைக்கப்படுகிறது. பாறை சிற்பங்கள் நிறைந்த இடமாக உள்ளது. இந்தியில் உனகோடி என்றால் ஒரு கோடிக்கும் குறைவாக என்று அர்த்தம். இங்கு 99 லட்சத்து 99 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது சிறப்ஙகள் இருப்பதால் இந்த பெயர் வந்தது. 

உதய்பூர் (Udaipur) : இந்த நகர் முன்பு ரங்கமதி என்று அழைக்கப்பட்டது. ஏரிகளின் நகரம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. கி.பி.590ல் திரிபுரா மன்னரான ஜூஜருபா மோக் வம்சத்தை தோற்கடித்து ரங்கமதியை கைப்பற்றி புதிய நகரை நிர்மாணித்து தலைநகராக ஆண்டு வந்தார். கி.பி. 1567ல் மன்னரின் படைதலைவரான கோபி பிரசாத் ஆட்சியை கைப்பற்றி தன்னையே மன்னராக அறிவித்து உதய் மாணிக்ய என்று புதுப்பெயருடன் ஆட்சியை தொடர்ந்தார். அப்போதிலிருந்து ரங்கமதி உதய்பூர் என்று பெயர் மாற்றம் பெற்றதாக தெரிகிறது.

கமல்பூர் (Kamalpur) : இந்த ஊரில் அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலான கமலேஸ்வரி காளி மந்திரின் பெயரிலிருந்து நகருக்கு பெயர் வந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

அமர்பூர் (Amarpur) : திரிபுராவின் மன்னராக இருந்த அமர் மாணிக்ய நினைவாக நகருக்கு அமர்பூர் என்ற பெயர் வந்தது. 

கோவாய் (Khowai) : இந்த நகரத்தின் அருகில் ஓடும் கோவாய் ஆற்றின் பெயரால் நகருக்கும் பெயர் வந்தது.

தர்மநகர் (Dharmanagar) : பழங்காலத்தில் தர்மநகர் என்ற பொருளில் "ஃபாட்டிகுலி" என்ற பெயர் பயன்பட்டு வந்தது. திரிபுராவின் மன்னர்களில் நான்கு மன்னர்கள் பெயர்கள் தர்மா என்று உள்ளதால் எந்த மன்னரின் பெயரை கொண்டு நகருக்கு பெயர் வந்தது என்று உறுதியாக குறிப்பிடப்பட முடியவில்லை என்றாலும் ஆண்ட மன்னர்களில் ஒருவரின் பெயரால் நகருக்கு பெயர் வந்தது அறியமுடிகிறது.

குமுலுன்ங் (Khumulwng) : இந்த சொல்லுக்கு பூந்தோட்டம் என்று பொருள். 

ஜம்புய் (Jampui hills) : இதற்கு வசந்தத்தின் நித்திய மலைகள் என்று அர்த்தம். அதாவது வசந்த காலம் என்றும் நிலைத்திருக்கும் மலைகள் என்று அர்த்தம்

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து