16) பஞ்சாப்

 


பஞ்சாப் :

பஞ்சாப் என்ற சொல்லை பிரித்தால் பாஞ்+ ஆப் என்பதற்கு ஜந்து +நீர் என்று பொருள்படும். அதாவது ஜந்து ஆறுகளான ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகியவற்றால் வளப்பட்ட மாகாணம். வேத காலத்தில் இந்த பகுதி சப்த சிந்து என்று அழைக்கப்பட்டது. கிரேக்கர்கள் இதை "பென்டோபோடாமியா" என்று குறிப்பிட்டனர். மஹாபாரத இராமாயண காலத்தில் இந்த பகுதி பஞ்சனவட மற்றும் பிரஹம் விராதா என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது திரிகர்த்த நாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பஞ்சாப் மாகாணம் இன்றைய இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அரியானா, இமாச்சல் பிரதேசம், டெல்லியின் சில பகுதிகள், இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய பெரிய பகுதி. வழங்கப்பட்டது. இந்திய பிரிவினைக்கு முன் லாகூர் இந்த மாகாணத்தின் தலைநகராக இருந்தது. பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு லாகூர் வழங்கப்பட்டதால் பஞ்சாபின் தற்காலிக தலைநகராக சிம்லா இருந்தது. கி.பி. 1960ல் சண்டிகர் கட்டி முடிக்கப்பட்டவுடன் கிழக்கு பஞ்சாவின் தலைநகராக சண்டிகர் ஆனது. பஞ்சாபில் இருந்து இந்தி பேசும் தெற்கு பகுதிகள் அரியானா எனவும் வடக்கில் மலை நாட்டு மொழி பேசிய பகுதிகள் இமாச்சல பிரதேசம் எனவும் பிரிக்கப்பட்டன. கிழக்கு பஞ்சாப் இன்று பஞ்சாப் என்ற பெயருடன் தற்போது உள்ளது.

சண்டிகர் (Chqndigarh) : இந்த புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகருக்கு அருகில் இருந்த கோயிலான "சண்டி மந்திர்" என்பதிலிருந்து சண்டிகார் என்று பெயர் வந்தது. சண்டி என்பது சக்தியின் தெய்வம் ஹர் என்பது வீடு என்ற பொருளில் "சண்டி தேவியின் வாழும் இடம்" என்ற அர்த்தத்தில் நகருக்கு இந்தப் பெயர் வந்தது.

ஜலந்தர் (ஜலந்தர் ) : ஜலந்தரா என்ற மன்னனின் பெயரிலிருந்து உருவானது. ஜல் என்றால் நீர் என்றும் அந்தர் என்றால் உள்ளே என்ற பொருள்பட இம்மன்னன் நீரினுள் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

லூதியானா (லூதியானா) : லூதியானா லோதி வம்சத்திலிருந்து பெயரைப் பெற்றது. டெல்லியின் பெரிய தலைவர்களில் ஒருவரான நிஹாந்த் கான் இந்த இடத்தில் இருந்த மீர் ஹோட்டா கிராமத்தை புதிய பெரிய நகரமாக நிறுவினார். லோதி அனா என்று அழைக்கப்பட்ட நகரம் பின்னர் லூதியானா என்று மருவியது.

அமிர்தசரஸ் (அமிர்தசரஸ்) : அம்ரித் என்றால் புனித நீர் என்றும் சார் என்றால் சரோவர் (நதி) என்ற பொருளில் புனித நீர் நதி என்ற பெயரில் நகருக்கு இந்தப் பெயர் வந்தது.

பாட்டியாலா (பாட்டியாலா) : இந்த நகரை நிறுவிய ராஜா ஆலா சிங்கின் பெயரை தாங்குகிறது. பாட்டியாலா என்ற சொல்லுக்கு ராஜா ஆலா சிங்கின் ஆதிக்கத்தில் இருக்கும் பகுதி என்ற பொருள் 

மெஹாலி (மொஹாலி) : இந்த நகரம் அதிகாரபூர்வமாக சாஹிப்சாதா அஜித் சிங் நகர் என்ற குரு கோவிந்த் சிங்கின் மூத்த மகனான அஜித் சிங் பெயரால்.

 மொஹாலி என்ற சொல்லுக்கு குடியேற்றம் என்ற பொருள். மொஹியல் பிராமணர்களின் நினைவாக மொஹாலி என்று அழைக்கப்படுவதாகவும் கூறுபவர்.

பதின்டா (Bwthinda) : இந்த நகரின் பழைய பெயர் பிக்ரம்கார்க் என்பதாகும். ஆனால் இது இந்தியாவின் நுழைவு வாயில் என்ற பொருளில் தபர்ஹிந்த் என்று அழைக்கப்பட்டது.

பதான்கோட் (பதான்கோட்) : ஆப்கானிஸ்தானின் பதான் பழங்குடியினர் இந்தியாவை நோக்கி வந்து பதான்கோட் பகுதியில் குடியேறினர். அவர்களிடம் இருந்து நகருக்கு இந்த பெயர் வந்தது.

மோஹா (மோஹா) : இந்தோ - சித்தியன் அரசரான மெளஸ் என்பவரின் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

சிலர் முக்கிய மனிதரான வாடன் கில்லின் சகோதரரான வேகா கில் என்பவரின் பெயரால் நகரத்தின் பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.

ஃபிரோஸ்பூர் (ஃபிரோஸ்பூர்) : கி.பி.14 ஆம் ஆண்டு ஃபிரோஸ் ஷா துக்ளக்கால் ஆரம்பிக்கப்பட்ட நகரமானது அவரின் பெயரை தாங்கி நிற்கிறது.

கபூர்தலா (Kwburthala) : முகமது கஜினியின் காலத்தில் ஜெய்சால்மேரின் காரானா ராஜபுத்ர அரசரான ராணா கபூரால் உருவாக்கப்பட்ட இந்த நகர் அவரின் பெயரை தாங்கி கபூர்தலா என்று அழைக்கப்படுகிறார்.

படாலா (படால) : கி.பி.15ம் ஆண்டு பதி ராஜ்புத்ரான அபய் பர்தாப் சிங் பால் என்பவரால் நிறுவப்பட்டதால் அவர் பெயரை தாங்கி படாலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மலர்கோட் (மலேர்கோட்) : கி.பி. 17 ஆம் ஆண்டு முழுவதும் ஓலரங்கசீப்பை புலியின் தாக்குதலில் இருந்து பயாசித் தான் காப்பாற்றியதன் பொருட்டு அவருக்கு இங்கு கோட்டை கட்ட அனுமதி கிடைத்தது கோட்டைக்கு மாலேர்கோட் என்ற பெயரிட ஊருக்கும் அதே பேர் வந்தது.

குர்தாஸ்பூர் (குர்தாஸ்பூர்) : மஹந்த் குரியா தாஸ் ஜியின் நினைவாக நகருக்கு குர்தாஸ்பூர் என்று பெயரிடப்பட்டது.

ரூப்நகர் (ரூப்நகர்) : கி.பி. 11ம் ஆண்டு ராஜா ரோகேஸ்வரர் என்பவரால் கட்டப்பட்டது. அவரின் மகனான ரூப் பெயரை தாங்கி நகருக்கு ரூபார் என்று பெயர் வைக்கப்பட்டது. தற்போது ரூப்நகர் என்ற பெயரிலையே உள்ளது.

முக்த்ஸர் (முக்த்சர்) :
குரு கோபிந்த் சிங்கை அழிக்க துரத்திய மொகலாயர்களை சீக்கியர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 40 பேர் மற்றும் மாய் பாகோ ஆகியோர் தடுத்து நிறுத்தி போரிட்டு அவர்களை விரட்டியடித்தனர். சம்பவத்தை கேள்விபட்ட குரு அங்கு வந்தபோது உயிர் போகும் நிலையில் இருந்த மாய் பாகோவை காப்பாற்றி சிகிச்சை அளித்தார். மற்றொரு வீரரான மஹான் சிங் சீக்கியர்கள் அடையாளத்தை அழித்த ஆவணத்தை அழிக்குமாறு வேண்ட குரு அவர்கள் 40 பேருக்கு முக்தி அளித்தார். அதனால் இந்த ஊருக்கு முக்தி என்ற பெயருடன் சார் என்றால் சரோவர் (நீர்த்தேக்கம்) என்ற கித்ரானா நீர்தேக்கத்தை குறிப்பிட்டு ஊருக்கு முக்த்ஸர் என்ற பெயர் வந்தது.

ஃபரீத்கோட் (ஃபரீத்கோட்) : இந்த நகரம் இராஜஸ்தானின் பட்டி இன தலைவரான ராஜா மொகல்சியால் நிறுவப்பட்டு மொகல்ஹார் என்று பெயரிடப்பட்டது. பின்னர் பாபா ஃபரீத் இந்த நகருக்கு விஜயம் செய்த போது ராஜா இந்த நகருக்கு ஃபரீத்கோட் என்று பெயரிட்டார்.

காணா (கன்னா) : பஞ்சாபியில் இதற்கு கால் பங்கு (0.25) என்ற பொருள். ஒரு நகரத்தின் அளவில் கால் பங்கே இருந்த காரணத்தால் நகருக்கு இந்தப் பெயர் வந்தது.

பாக்வாரா (பக்வாரா) : கி.பி.1635ல் குரு ஹர் கோபிந்த் கர்தார்பூர் மற்றும் பலாஹி போரில் வெற்றி கண்ட பின் இந்த நகருக்கு விஜயம் செய்தார். அவரின் சீடரான பாகு என்பவர் இங்கு வசித்து வந்தார். போருக்கு பின்னால் மொகலாயர்கள் குருவை தேடி வருவார்களே என்ற கவலையில் குருவை கவனிக்காமல் குருவுக்கு ஆபத்து வரக்கூடாது என்ற சிந்தனையில் இருந்ததால் குரு அவரை பார்த்து "பாகு டா வர்ரா. பஹ்ரோன் மிதா ஆன்ட்ரோன் காரா" என்று கூறினார். அவரின் "பாகு -டா-வர்ரா" என்று சொல்லி பாக்வாரா என்ற பெயரைப் பெற்றது

ஃபாசில்கா (Fazilka) : கி.பி.19 ஆம் ஆண்டு மாவட்டத் தலைவராக இருந்த ஆங்கிலேயரான ஜெ.எச்.ஆலிவரால் இந்த நகரம் உருவானது. இந்த இடத்தை வழங்கிய மியான் ஃபாசில் வாட்டூவின் நினைவாக நகருக்கும் அவர் பெயரை வைத்தனர்.

குரு ஹர் சஹாய் (குரு ஹர் சஹாய்) : இந்த நகரம் சீக்கிய குரு ராம் தாஸின் நேரடி வழித்தோன்றலான ஹர் சஹாய் நினைவாக பெயரிடப்பட்டது

ராம்புரா புல் (ராம்புரா புல்) : புல்கியன் வம்சத்தை தோற்றுவித்த சவுத்ரி புல் சிங்கின் மகனான செளத்ரி ராம் சிங் என்பவரால் கி.பி.1680ல் தோற்றுவிக்கப்பட்ட இந்த நகரம் அவரது பெயரை தாங்கி நிற்கிறது.

சமனா (சமனா) : சூஃபி ஞானியான முகமது நபியின் வழித்தோன்றலான அலி அல்-ரிதா இங்கே குடியேறினார். அவருக்கு பின்னர் அவரது மகன்களால் அவரது தாயாரின் பெயரால் நகருக்கு சமனா என்று பெயர் வைக்கப்பட்டது

மாலூட் (மாலூட்) : கராச்சிக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்ய வேண்டிய மால் என்று அழைக்கப்பட்ட குளுக்கோஸை ஆங்கிலேயர் விற்க வேண்டி அமைக்கப்பட்ட நகரம் அந்த பெயரை தாங்கி மாலூட் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெயர்காரணம் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை

பில்லூர் (phillaur) : இந்த நகரை உருவாக்கிய சங்கேரா ஜாட் புல் இதற்கு புல்நகர் என்று பெயரிட்டார். பின்னர் இது பில்லூர் என்று அறியப்படுகிறது

ஜலாலாபாத் (ஜலாலாபாத்) : இந்த நகரை நவாப் குதுபுதீன் உருவாக்கிய கான் இதற்கு தன் மகன் நவாப் ஜலாலுதீன் கான் பெயரில் ஜலாலாபாத் என்று பெயரிட்டார்.

தசுயா (தாசுயா) : மகாபாரதத்தில் விரட்ட மன்னனின் இருப்பிடமாக குறிப்பிடப்பட்ட நகரம் தான் இது. அதை அங்கீகரிக்கும் வகையில் தசுயா நகரம் விராட் கி நாக்ரி என்ற பெயரிலும் உள்ளது.

ஜைது (ஜைது) : பாபா ஜைதுவால் உருவாக்கப்பட்ட கிராமம் அவரின் பெயரில் என்று கூறுபவர்.

புத்தலடா (புத்தலடா) : காத்ரி இனத்தை சேர்ந்த புத்தா மற்றும் லதா ஆகிய இரு சகோதரர்களின் பெயரால் இந்த நகரம் புத்தலடா என்று பெயரிடப்பட்டது.

சிர்ஹிந்த் (Sirhind) : சர்-ஐ-ஹிந்த் என்ற வார்த்தையில் இருந்து வந்தது. அதாவது மொகலாயர்கள் இதை இந்துஸ்தானின் நுழைவாயில் என்று அழைத்தனர்.

பாஸ்ஸி பதானா (பாஸ்ஸி பதானா) : இந்த நகர் இங்கு வாழ்ந்து வந்த முஸ்ஸீம் பதான்களின் பெயரை தாங்கி நிற்கிறது 

ஹோசியார்பூர் (ஹோஷியார்பூர்) : இங்குள்ள பாஜ்வாரா கிராமத்தில் வாழ்ந்து வந்த ஹோசியார் சிங் என்பவரால் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டதால் அவரின் பெயரை தாங்கி நிற்கிறது.

பர்னாலா (பர்னாலா) : அடிக்கடி வரும் புயல்கள் வருவதால் வர்ணா என்று அழைக்கப்பட்டு பர்னாலா என்று கூறுபவர்

பாபா ஆலா சிங் தனது மூத்த சகோதரருடன் இந்த நகருக்கு குடியேறியதால் பர்னாலா என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்.

தர்ன் தரண் சாஹிப் (டர்ன் தரண் சாஹிப்) : இந்த நகரம் 5வது சீக்கிய குருவான அர்ஜூன் தேவ்வால் நிறுவப்பட்டது. இதன் இயற்கை அழகில் மயங்கிய அவர் தர்ன் தரண் சாஹிப் கோயிலை கட்டினார். வாழ்க்கைப் பெருங்கடலைக் கடக்கவும் இறைவனின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் என்ற பொருளில் தர்ந் தரண் சாஹிப் என்று பெயரிட்டார்.

நவன்ஷாஹர் (நவன்ஷாஹர்) : சட்லஜ் நதிக்கு அருகில் அமைந்த ரஹோன் நகரத்திலிருந்து குடியேறியவர்களால் நிறுவப்பட்டு பஞ்சாபியில் புதிய நகரம் என்ற பொருளில் நவன்ஷாஹர் என்ற பெயர் சேர்க்கப்பட்டது.

சுனம் (சுனம்) : சுனம் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் சுதந்திர போராட்ட வீரரான உதம் சிங்கின் பெயரை தாங்கி சுனம் உதம் சிங் வாலா என்று அழைக்கப்பட்டார்.

ஆனந்த்பூர் சாஹிப் (ஆனந்த்பூர் சாஹிப்) : பேரின்பம் நகரம் என்ற பொருளில் இந்த நகருக்கு ஆனந்த்பூர் சாஹிப் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சங்ரூர் (சங்ரூர்) : இந்த நகரம் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜாட் இன தலைவர் ஒருவரான சங்கு என்பவரால் நிறுவப்பட்ட காரணத்தால் சங்ரூர் என்று வழங்கப்படுகிறது.

அபோஹர் (அபோஹர்) : கி.பி. 12ம் ஆண்டு ஜாட் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த பட்டி குல அரசரான அபோகர்க் என்பவரால் நிர்மாணிக்கப்படுவதால் ஊருக்கு அபோஹர் என்ற பெயர் வந்தது.

மான்சா (மான்சா) : இந்த நகரம் 18 ஆம் ஆண்டு ஃபக்கீர் மனா அல்லது பாபா மனா என்ற பெயரால் உருவாக்கப்பட்டு மான்சா என்று மருவியது.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து