5) கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் : இங்கிருந்த படுகர் இன் தலைவன் கோவன் என்பது பெயரால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் கோயம்புத்தூர் என்ற பெயர் கோயம்புத்தூர் என்று கூறுபவர்.
சங்ககாலத்தில் இந்த ஊரை கோசர்கள் இனத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்டு வந்ததால் கோசம்புத்தூர் என்று அழைக்கப்பட்டு மருவி கோயம்புத்தூர் என்று கூறுபவர்.
இங்குள்ள காவல் தெய்வமான கோணியம்மன் பெயரால் கோணியம்மன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு கோயம்புத்தூர் என்றானதாகவும் கூறுவர்.
ஈரோடு : பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன் ஓடை என்ற இரு ஓடைகளுக்கு நடுவே அமைந்த ஊர் என்பதால் ஈரோடு என்ற பெயர் மருவி ஈரோடு என்றானது.
பொள்ளாச்சி : பொழில் வாய்ச்சி என்ற பெயர் மருவி பொள்ளாச்சி ஆனதாக கூறுகின்றனர். மிகப்பெரிய சந்தைக்கான ஊர் என்பதால் பொருள் வாய்ச்சி என்ற பெயர் மருவி பொள்ளாச்சி என்றானதாகவும் கூறுவர்.
திருப்பூர் : மகாபாரத காலத்தில் பாண்டவர்களின் திருடப்பட்ட கால்நடைகள் அவர்களின் படைவீரர்களால் இவ்வூரில் இருந்து திரும்ப பெறப்பட்ட காரணத்தால் திரும்பவும் பெற்ற ஊர் என்ற பெயரில் திருப்பையூர் என்ற அழைக்கப்பட்டு மருவி திருப்பூர் என்று வழங்கபடலாயிற்று என்று கூறுவர்.
கொடைக்கானல் : காணல் என்பது ஒருவகை செடி. இது கொடைக்கானல் மலையில் அதிகம் நிறைந்து காணப்பட்டதாலும் கோடை வாசஸ்தலமாக இருப்பதாலும் கோடைக்காணல் என்று இருந்து மருவி கொடைக்கானல் என்றாயிருக்கலாம்.
உடுமலைப்பேட்டை : உடும்புகள் நிறைந்த மலைகள் சூழ்ந்த இடம் என்ற பொருளால் உடுமலைப்பேட்டை என்ற பெயர் வந்தது.
உடுமலை என்றால் சற்று உயரத்தில் இருக்கும் மலை என்றும் அங்கு சந்தை இருந்ததால் உடுமலைப்பேட்டை என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.
அவிநாசி : அவிநாசம் என்ற சொல்லுக்கு பெருங்கேட்டை தவிர்க்க வல்லது என்று பொருள்.
வால்பாறை : பஞ்சம் பிழைக்க மக்கள் எல்லா ஊரிலிருந்தும் குடி பெயர்ந்து வந்தனர். அதனால் இங்கு வீடுகள் வரிசையாக லைன் வீடுகளாக தோட்ட தொழிலாளர்களுக்கு கருங்கற்களால் கட்டப்பட்டன. அந்த வீடுகள் சிலி நாட்டின் வீடுகளை போல் இருந்ததால் அந்த நாட்டில் முக்கியமான ஊரான "வால்பாறைஸோ" என்ற பெயரை வைத்தனர். பின்னர் இது மருவி வால்பாறை என்றானது.
இராசிபுரம் : இவ்வூரின் பழைய பெயர் ஸ்ரீராஜபுரம் என்பதாக இவ்வூரின் கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகள் குறிக்கின்றன. பின்னர் இதன் பெயர் மருவி ராசிபுரம் என்றாகியிருக்கலாம் என்றும் கூறுவர்.
ஜோதிடத்தில் பொருத்தம் பொருந்தாத திருமண ஜோடிகளுக்கு கைலாசநாதர் கோயிலில் நடைபெறுவதால் அவர்களின் பாவ தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்பதாலும் இப்பிறவியில் அறிந்து அறியாமல் செய்த பிழைகள் போக்கும் ஸ்தலம் என்பதாலும் ராசிபுரம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
கோபிசெட்டிபாளையம் : இந்த ஊரின் பழைய பெயர் வீரபாண்டி கிராமம். இந்த ஊரில் வாழ்ந்த கோபிசெட்டிப்பிள்ளை என்பவர் பெரும் வள்ளலாக திகழ்ந்த காரணத்தால் அவர் பெயரிலேயே கோபிசெட்டிபாளையம் என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தின் பழைய பெயர் சிக்கதாசம்பாளையம் என்பதாகும். தெற்கு நீலகிரி அடிவாரத்தில் முல்லைகாடுகள் சூழ்ந்த மேடான பகுதியாக இருந்ததால் மேட்டுப்பாளையம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
கூடலூர் : இந்த ஊரில் உள்ள இறைவனுக்கு கூடலழகன் என்ற பெயர். அதனால் ஊருக்கும் கூடலூர் என்ற பெயராயிற்று என்றும் கூறுவர்.
மதுக்கரை : மதில்+கரை என்பது மருவி மதுக்கரை என்று கூறுபவர்
காரமடை : இந்த ஊர் பகுதியில் காராம் பசுக்கள் மற்றும் காரை மரங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் காரமடை என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
புவனகிரி : புவனம் என்பதற்கு உலகம் என்ற பொருள். கிரி என்பதற்கு மலை என்று பொருள்.

Comments
Post a Comment