3) மதுரை


மதுரை :

வைகை நதிக்கரையில் மருத மரங்கள் நிறைய இருந்த காரணத்தால் மருத துறை என்பதாக அழைக்கப்பட்டு மதுரை என்றானதாகவும் கூறுவர்.

பெரு மதில்களுடன் மதில்களால் சூழப்பட்ட நகரமாக இருந்ததால் "மதில் நிரை" என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி மதுரை என்று கூறுபவர்.

ஜந்திணைகளில் மருதம் என்ற நிலப்பரப்பை கொண்ட ஊர் என்பதால் மருதம் என்றாகி மதுரை என்று மருவியிருக்கலாம் என்றும் கூறுவர்.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் நிலவை போற்றுபவர்களாக இருந்ததால் அதன் பொருட்டு மதி என்பது மதுரை என்றாகியிருக்கலாம் எனக் கூறுவர்.

சிவபெருமானின் சடைமுடியில் இருந்து பொழிந்த அமிர்தத்தைப் போற்றும் வகையில் மதுரம் என்ற சொல்லே மருவி மதுரை என்று ஆகியிருக்கலாம் என்று கூறுபவர்களும் உண்டு.

இது போக மதுரைக்கு நான்மாடக்கூடல் , ஆலவாய், தூங்கா நகரம், கூடல் நகர் என்ற பெயர்களும் உண்டு.

நான்மாடக்கூடல்:   வருணன் மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்ப பாண்டிய மன்னன் இறைவனை வேண்ட அவர் மனமிறங்கி நான்கு மாடங்கள் எனப்படும் திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடகை, திருநடுவூர் ஆகிய கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு அமைத்தார். அதனால் மதுரைக்கு நான்மாடக்கூடல் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

ஆலவாய் நகரம்:   திருவிளையாடற் புராணத்தில் மதுரை நகரை ஆலவாய் நகரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலம் என்ற சொல்லுக்கு நீர்நிலை என்ற பொருள். வைகையில் எப்போதும் நீர் நிறைந்து ஓடியதால் "நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த நகரம்" என்ற பொருளில் ஆலவாய் நகரம் என்றும் சிறப்புப் பெயரைப் பெற்றது.

சிவபெருமானின் அணிகலமான பாம்பு தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்

கூடல் நகரம்:   வியாபாரத்திற்காக எண்நாட்டவரும் வந்து கூடுவதால் கூடல் மாநகர் என்ற பெயர் பெற்றதாகவும் செந்தமிழை வளர்க்க தமிழ் புலவர்கள் ஒன்றுகூடியதால் கூடல் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுபவர்.

தூங்கா நகரம்:   உலகமே உறங்கும் வேளையிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகரம் என்பதால் தூங்கா நகரம் என்றும் பெயர் உண்டானது.

நாளங்காடி - பகல் வேளைகளில் வியாபாரத்தை கவனிக்கும் அங்காடி 

அல்லங்காடி - இரவு வேளைகளில் வியாபாரத்தை கவனிக்கும் அங்காடி என இருவகை அங்காடிகளும் இருந்ததால் இந்தப் பெயர் வந்தது.

திருப்புவனம்:   இதன் உண்மையான பெயர் திருப்பூவனம் என்பதாகும். இந்த ஊரிலுள்ள இறைவனின் பெயரால் இந்த நகரம் பெயர் பெற்றது.

சோழவந்தான்:   ஒருமுறை சோழ மன்னன் பாண்டிய மன்னனை காண இந்த ஊர் வழியாக வந்தவன் இந்த ஊரில் காணப்பட்ட பசுமையை கண்டு வியந்தான். வியந்தான் என்பதற்கு உவந்தான் என்ற பொருளும் உண்டு. அதனால் சோழன் உவந்தான் என்றது மருவி சோழவந்தான் என்றானது.


திருப்பரங்குன்றம் :   சிவபெருமானுக்கு உரிய மலை என்ற பொருளில் திரு + பரன் (சிவன்) + குன்றம் (மலை) என்பது திருப்பரங்குன்றம் என்று.

திருவேடகம்:   திருநாவுக்கரசர் சமணர்களுடன் புணல் வாதம் நடந்த போது திருநாவுக்கரசர் வைகை ஆற்றில் விட்ட சைவ ஏடுகள் நீரின் போக்கை எதிர்த்து கரை ஏறியதால் திரு+ஏடு+அகம் என்ற பொருள் மருவி திருவேடகம் என்றானது.

புட்டுதோப்பு:   இறைவன் புட்டுக்கு மண் சுமந்த கதை நடந்த இடம் என்பதால் அந்த பெயரை பெற்றது.

அரசரடி:   பிட்டுக்கு மண் சுமந்த இறைவனை சவுக்கால் அடித்த அடியை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்ததால் வந்தவர் இறைவன் சொக்கநாதரே என உணர்ந்தனர். மன்னர் இருந்த இடமே அரசர்+அடி என்ற பொருளில் அரசரடி என்றானது.

ஆனை மலை:   யானை தன் முன்கால் மண்டியிட்டு அமர்ந்தது போல் இருக்கும் மலை என்பதால் யானை மலை என்று பெயர் வந்தது. பேச்சுவழக்கில் ஆனைமலை என்றும் கூறுவர்.

கோவலன் பொட்டல்:‌  சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனால் சிலம்பு திருடியதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட கோவலனின் தலை வெட்டப்பட்ட பொட்டல் பகுதி என்பதால் "கோவலன் பொட்டல்" என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர்.

சிம்மக்கல்:   நகரின் மையப்பகுதியில் சாலைகள் சந்திக்கும் இடத்தில் கல்லிலான சிம்ம (சிங்க) உருவாக்கம் ஒன்று உள்ளது. அதனால் இந்த பகுதிக்கு சிம்மக்கல் என்று பெயர் வந்தது.

மாட்டுத்தாவணி:   மாடுகளையும் கன்றுகளையும் விற்பதற்கான கால்நடை சந்தை. கையில் துணி போட்டு விரல்களால் விலை பேசி மாட்டு வியாபாரத்தை முடிப்பதால் "மாட்டுத்தாவணி" என்ற பொருளில் சந்தை நடந்த பகுதிக்கு மாட்டுத்தாவணி என்ற பெயர் வந்தது.

திருமங்கலம்:   திருமணம் செய்வதற்கு முன்பு தம்பதிகளை வழிபட தேவர்கள் விரும்பியதால் சிவன் பார்வதியுடன் சகிதமாக இங்கு காட்சி தந்தார். இங்கு மாங்கல்யம் செய்யப்பட்டதால் "திருமாங்கல்யம்" என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் பெயர் மருவி திருமங்கலம் என்றானது.

அலங்காநல்லூர்:‌  சித்திரை திருநாள் நேரத்தில் மதுரையில் கள்ளழகரை தோளில் சுமந்து தேனூருக்கு வரும் வழியில் இந்த ஊரில் இறக்கி வைத்து அவருக்கு அலங்காரம் செய்வார்கள். அதனால் "அலங்கார நல்லூர்" என்ற பெயர் வந்தது மருவி அலங்காநல்லூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

இராஜபாளையம்:   இந்த ஊரில் தெலுங்கு தேசத்தில் இருந்து இராஜூக்கள் என்ற மக்கள் வந்து பழையபாளையம் பகுதியில் குடியேறினர். அதனால் ஊருக்கு இராஜபாளையம் என்ற பெயர் வந்தது.

திருவில்லிபுத்தூர்:‌   இந்த பகுதியை ஆண்ட ராணியான மல்லி என்பவருக்கு வில்லி, கண்டன் என்ற இரு மகன்கள் வேட்டையாட சென்ற இடத்தில் பிரிந்து விட்டனர். கண்டனை புலி அடித்து கொன்றது. சகோதரனை காணாத வில்லி களைப்பில் மயங்க கனவில் வந்த பெருமான் அவனுக்கு ஏற்பட்ட நிலையை விவரித்தார். உண்மை புரிந்ததும் தெய்வீகத்தின் அருளை உணர்ந்து அந்த காடுகளை அழித்து நகரை உருவாக்கினார். அவர் பெயரால் வில்லிபுத்தூர் என்ற பெயர் வழங்கலாயிற்று. திருமகளின் அவதாரமான ஆண்டாளின் பிறப்பு வளர்ப்பு இந்த ஊரில் நிகழ்ந்ததால் "தொடர்ச்சி" என்ற அடைமொழியுடன் திருவில்லிபுத்தூர் என்ற பெயர் வழங்கலாயிற்று.

வத்ராயிருப்பு:   மகாலெட்சுமி தாயார் இந்த இடத்தில் தவம் செய்த காரணத்தால் இந்த இயக்கி (திருமகள்) "வக்த்ரம் (திருமுகம்)" என்ற பொருளில் தொடர்ந்துரீவக்தரபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. இதற்குப் பிறகு மருவி வத்ராயிருப்பு என்ற பெயரால்.

விருதுநகர்:   இதன் பழைய பெயர் "விருதுகள் வெட்டி" என்றும் விருது பட்டி என்றும் அழைக்கப்பட்டது. பல இராஜ்யங்களில் பலருடன் போரிட்டு வென்று பல விருதுகளை பெற்ற போர் வீரன் இங்கு வந்து சண்டையிட அழைக்கப்பட்ட ஒருவர் அவனுடன் போர் புரிந்து அவனை கொன்று விருதுகளை கைப்பற்றினார். அதனால் "விருதுகள் வெட்டி" என்று அழைக்கப்பட்ட ஊர் பின்னால் மருவி "விருதுபட்டி" என்ற பெயரால் அழைக்கப்பட்டு விருதுநகர் என்றானது.

சிவகாசி:   தென்காசியை ஆண்ட அரிகேச பராங்குச பாண்டியன் தென்காசியில் சிவாலயம் எழுப்ப காசியில் இருந்து சிவலிங்கம் எடுத்து வந்தார். வழியில் வில்வ மரங்கள் நிறைந்த இந்தப் பகுதிக்கு வந்தவுடன் சிவலிங்கத்தை சுமந்த வந்து பசு நகர மறுத்து அங்கேயே நின்று விட்டது. சிவனின் சித்தம் இதுவே என்று பாண்டிய மன்னர் வில்வ வனத்தில் சிவனின் காசி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அதனால் சிவன்+காசி லிங்கம் என்ற பொருளில் சிவகாசி என்று இந்த ஊர் பெயர் பெற்றது.

சாத்தூர்:‌   சாத்தூரின் பழைய பெயர் "இருஞ்சோ நாடு" என்பதாகும். பிறவியிலேயே கண் தெரியாத ஜமீன்தாரின் கனவில் ஒருநாள் பெருமாள் தோன்றினார். பெருமாள் இருந்த அரச மரமும் கனவில் தெரிந்தது. இரு கண்ணும் இல்லாத நான் உன்னை எப்படி வணங்குவேன் என வினவ இன்று முதல் ஒரு கண் தெரியும். நான் இருக்குமிடம் தேடி வந்து என்னை கண்டவுடன் மறு கண்ணும் தெரியும் என்று கனவில் உரைத்தார். விடிந்தவுடன் தனது வேலையாட்களுடன் பெருமாளைத் தேடி புறப்பட்டவர் பெருமாளைக் கண்டு கொண்டார். இன்னொரு கண்ணிலும் அவருக்கு பார்வை வந்தது. கோவிலை கட்ட இடம் தேடி சரியான இடம் கிடைக்காமல் சாஸ்தா கோயில் அருகே இருந்த இடத்தில் கோயில் கட்டினார். இறைவனுக்கு சாத்தூரப்பன் என்றும் அவர் இருந்த பகுதிக்கு சாத்தூர் என்றும் பெயர் வந்தது.

திண்டுக்கல்:   திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மக்கள் இறைவனை வேண்டி தவம் புரிந்தனர். இதனால் ஈஸ்வரன் மனமிறங்கி திண்டி மன்னனை அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது திண்டுக்கல் என்று பெயர் மாற்றம் பெற்றது.

திண்டு என்றால் தலையணை என்ற பொருள். திண்டு போன்ற மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதால் திண்டு மற்றும் கல் என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்து திண்டுக்கல் என்றானதாகவும் கூறுவர்.

பேகம்பூர்:   இது திண்டுக்கல் நகரின் ஒரு பகுதியாக உள்ளது. இங்குள்ள மசூதியில் ஹைதர் அலியின் இளைய சகோதரியான அமீருன்னிஸா பேகம் அடக்கம் செய்யப்பட்டது. பேகம் அடக்கம் செய்யபப்ட்ட காரணத்தால் பேகம்பூர் என்று இப்பகுதிக்கு பெயர் வந்தது.

உதகமண்டலம்:   மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வந்த மலைவாழ் மக்களான படுகர், தோட்டம் மற்றும் இடும்பர்களின் மொழியில் ஒத்தை கல் மந்தை(மாந்தை) என்று அழைக்கின்றனர். ஆங்கிலேயரின் வாயில் இந்த பெயர் நுழையாததால் உதகமண்ட் (ஊடகாமண்ட்) என்று அழைக்கப்பட்டு தமிழில் உதகமண்டலம் அல்லது ஊட்டி என்ற பெயரால்.

பழனி:  இதன் பழைய பெயராக "ஆவினன்குடி" என்று திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவியர் குல தலைவனான கடையேழு வள்ளல்களில் ஒருவராக குறிப்பிடப்படும் பேகனின் தலைநகராக இருந்தது. மலை பழநி மலை என்றும் ஊர் ஆவினன் குடியாக அழைக்கப்பட்டது தற்போது இரண்டுமே பழநி என்ற பெயரால் அறியப்படுகிறது. பழனங்கள் (வயல்கள்) சூழ்ந்த பகுதி என்பதால் பழநி என்று அழைக்கப்பட காரணமாயிற்று என்றும் கூறுவர்.

முருகபெருமான் ஞானப்பழம் கிடைக்காததால் தாய் தந்தையருடன் கோபித்துக் கொண்டு தண்டாயுதபாணியாக வந்து சேர்ந்த போது சிவனும் பார்வதியும் இங்கு வந்து "அடியாருக்கு அருளும் ஞானப்பழம் நீ" என்று முருகனை சமாதானப்படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை "பழம் நீ" என்றாகி பிறகு மருவி பழநி என்றானதாகவும் கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து