10) மஹாராஷ்டிரா & கோவா
மஹாராஷ்டிரா என்ற சொல்லின் வேறு எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதில் தெளிவான விடைகள் இல்லை. மஹாராஷ்டிரியன், மராத்தி, மராத்தா என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்று நினைக்கின்றனர். நவீன மராத்தி மொழி மஹாராஷ்டிரா பிராகிருதத்தில் இருந்து பிறந்தது. மர்ஹாட்டா என்ற சொல் சமண இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து வந்திருக்கலாம் என்றும் நினைக்கின்றனர்.
பெரும்பாலானோர் மஹாராஷ்டிரா , மராத்தா என்ற சொற்கள் மஹா என்ற பழங்குடி வம்சத்தில் பிறந்தது என்றே கருதுகின்றனர். மஹா என்றால் பெரிய என்றும் ரதா என்றும் தேர் என்றும் பொருளில் தெற்கு நோக்கி நகர்ந்த பெரும் தேர் படைகளைக் கொண்ட இராஜ்ஜியம் என்ற பொருளில் உருவானது என்றும் சிலர் மஹா என்றும் பெரிய ராஷ்டிரம் என்றும் தேசம் என்ற பொருளில் இருந்து மஹாராஷ்டிரம் உருவானது என்றும் கூறுகின்றனர்.
மும்பை : முன்பு பம்பாய், பாம்பே என்று அழைக்கப்பட்ட பெயர் கி.பி.1995ல் சிவசேனா ஆட்சிக்கு வந்த பிறகு மும்பை என்ற பெயர் மாற்றப்பட்டது. இங்குள்ள பெரும்புகழ் பெற்ற மும்பா தேவியின் ஆலயத்தின் பெயராலேயே இந்த நகரின் பெயர் மாற்றப்பட்டது. பம்பாய் என்பது போர்த்துகீசிய பாம்பைம் (Bombaim) என்பதிலிருந்து வந்தது. அதற்கு "நல்ல சிறிய வளைகுடா" என்று பொருள்
பன்வெல் : இதன் பழைய பெயர் பனேலி. கொங்கணியில் பனேலிம் என்று அழைக்கப்பட்டு வந்தது. அஷ்ட விநாயகர் கோயில்களுள் ஒன்றான பல்லாலீஸ்வர் கோயிலின் பெயரிலிருந்து இந்த ஊரின் பெயரில் பனேலி பனேலிம் பிறகு பன்வெல் என்று மாறியிருக்கலாம்.
எலிஃபெண்டா: இது முன்பு கராபுரி அல்லது கராபூர் தீவு என்று அழைக்கப்பட்டு வந்தது. அதாவது குகைகளின் கிராமம் என்ற பெயரில் மராத்தி மொழியில் அர்த்தம் வரும். தீவில் உள்ள பிரம்மாண்டமான பாறையில் வடிக்கப்பட்ட சிற்பத்தை கண்ட போர்த்துகீசிய படைவீரர்களால் எலிஃபெண்டா தீவு என்று பெயரிடப்பட்டது.
அகத்தியரால் இப்பகுதியை ஆண்ட அசுர மன்னரான இல்வலரின் நினைவாக இல்வலபுரம் என்று அழைக்கப்பட்டு எல்லாபுரம், எலூரா என்ற மருவி எல்லோரா என்ற பெயர் வந்ததாகக் கூறுபவர்.
மகாபலேஷ்வர்: இங்குள்ள பழமையான மகாபலேஷ்வர் கோயிலின் பெயரிலிருந்து ஊருக்கும் பெயர் வந்ததாகக் கூறுவர்.
தெளலதாபாத் (தேவகிரி) : இதன் பழைய பெயர் தேவகிரி என்பதாகும். சிவன் இங்குள்ள மலைகளில் தங்கியிருப்பதாக நம்பப்பட்டு "கடவுளின் மலைகள்" என்ற அர்த்தத்தில் தேவகிரி என்று அழைக்கப்பட்டது. கி.பி.1327ல் துக்ளக் வம்சத்தை சேர்ந்த முகமது பின் துக்ளக் டெல்லியில் இருந்து தேவகிரிக்கு தனது தலைநகரை மாற்றி "தெளலதாபாத்" என்று பெயரிட்டார்.
ஓளரங்காபாத் : அகமது நகர் சுல்தானகத்தின் நிஜாமின் முதலமைச்சரான மாலிக் அம்பரால் காட்கி என்ற சிற்றூர் தலைநகராக உருவாக்கப்பட்டது. மாலிக் அம்பருக்கு பின் பதவியேற்ற அவரது மகனான பஃதே கான் ஊரின் பெயரை காட்கி என்பதிலிருந்து பஃதே நகர் என்று மாற்றினார். பின்னர் கி.பி.1653ல் தக்காணத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஒளரங்கசீப் பஃதே நகரை தனது தலைநகராக மாற்றி தனது பெயரில் நகருக்கு அவுரங்காபாத் என்று பெயரிட்டார்.
அகமது நகர் : நிசாம் ஷாகி வம்சத்தின் சுல்தானான மாலிக் அகமது தான் நிறுவிய ஊர் பெயருக்கு தனது பெயரை வைத்தார்.
சனி சின்னாபூர் : சனி கிரகத்துடன் தொடர்புடைய இந்து மதத்தின் சனி பகவானின் கோயிலின் பெயரால் இந்த ஊருக்கு பெயர் வந்தது.
சோலாப்பூர் : காலச்சூரிகளின் காலத்தில் இந்த ஊர் கன்னட மொழியில் சொன்னலகே. உச்சரிப்பில் சொன்னழகி என்ற பெயரால் தேவகிரி யாதவர்கள் காலம் வரை அழைக்கப்பட்டது. பின்னர் சோனாலிபூர் என்றும் சோனல்பூர் என்றும் அழைக்கப்படடு மருவி சோலாப்பூர் என்ற பெயரால் தற்போது இருக்கிறார். ஆங்கிலேயர்கள் இந்த நகரை ஷோலாப்பூர் என்று அழைத்தனர்.
சோலா என்றால் 16 என்றும் புறா என்றால் கிராமம் என்ற பொருள்படி பதினாறு கிராமங்கள் அடங்கிய நகரமாக சோலாப்பூர் உள்ளது.
கோலாப்பூர்: மகாலெட்சுமி பன்றி முக அரக்கனான கோலாசுரனை வதம் செய்ததால் "கோலாசுர பயங்கரி" என்று பெயர் பெற்றார். கோலாசுரன் உயிர் விடும்போது மகாலட்சுமியை வணங்கி தாயே இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருந்து அருள் பாலிக்கவேண்டும் என்று வேண்ட மகாலெட்சுமி இங்கு வில்,வாள்,கேடயம் தாங்கிய வடிவில் வீர லெட்சுமியாக அருள் பாலிக்கும் நகருக்கு கோல்ஹாப்பூர் என்று பெயர் வந்தது. பின்னர் மருவி கோலப்பூர் என்றானது.
பந்தர்பூர் (பண்டரிபுரம்) : பெற்றோர்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட புண்டரீகன் என்ற பக்தனின் அன்பை உலகுக்கு உணர்த்திய இடமே பாண்டுரங்கனாக கிருஷ்ணர் அவதரித்த இடம் புண்டரீகபுரம் என்று பெயர் பெற்றது. பின்னர் மருவி பண்டரிபுரம் என்ற பெயரில் வழங்கலாயிற்று.
லோனாவாலா: பிராகிருத மொழியில் லோனாவாலா என்ற பெயருக்கு கல்லில் செதுக்கப்பட்ட ஓய்வெடுக்கும் இடம் என்று அர்த்தம். இங்கு அது போன்ற ஓய்விடங்கள் இருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டது.
நாக்பூர்: இந்த நகரின் பழைய பெயர் ஃபனிந்திரபுரா. மராத்திய மொழியில் நாகப்பாம்பின் பேட்டை என்று பொருள்படும். இந்த நகரில் பாயும் பெரிய நதியான நாக் ஆற்றின் பெயரால் நாக்பூர் என்றும் இந்தோ-ஆரியர்களின் எதிர்ப்பாளர்களாக இருந்த நாக் இனத்தவரின் பெயரால் நாக்பூர் என்றும் அழைக்கப்பட்டது என்றும் கூறுபவர்.
நாசிக் : இராமாயண காலத்தில் இந்த ஊரின் பெயர் பஞ்சவடி என்பதாகும். இராமர் வனவாசத்தின் போது இங்கு தங்கியிருந்தார். இங்கே தான் இலட்சுமணன் சூர்ப்பனகையின் நாசியை (மூக்கை) அறுத்த நிகழ்வு நடந்தது. அதனால் தான் இந்த நகருக்கு நாசிக் என்ற பெயர் வந்ததாக கூறுவர்.
பூனே : புன்ய விஷயா, புனக் விஷயா என்ற பெயர்களில் அழைக்கப்படும் நகரம் புண்ணா என்ற பெயர் புன்ய நகரி (மாசற்ற நகரம்) என்ற சமஸ்கிருத வார்த்தையில் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் பூனா என்று வழங்கப்பட்டது மருவி பூனே என்றானது.
ஜல்கெளவுன் :' சுற்றியும் நீர் நிலைகள் நிரம்பிய கிராமங்களை கொண்ட நகரம் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகக் கூறுவர்.
சிவனேரி : இந்த கோட்டையின் உள்ளே சிவாஜி என்று அழைக்கப்படும் சிவாயி தேவி என்ற பெண் தெய்வத்திற்கு கோயில் உள்ளது. அதனால் தான் இங்கு தான் சத்ரபதி சிவாஜி பிறந்தார். அவருக்கு பெண் தெய்வத்தின் பெயரால் சிவா என்று பெயரிடப்பட்டது. இங்குள்ள கோயில் தெய்வத்தின் பெயரால் சிவநெறி என்ற பெயர் வந்தது.
வாஸிம் (வத்ஸகுல்மா) : இதன் பழைய பெயர் வத்ஸகுல்மா என்பதாகும். வத்ஸா ரிஷி தவம் செய்த இடத்தில் அவரை ஆசிர்வதிக்க பல கடவுள்கள் வந்ததால் இந்த இடம் வத்ஸகுல்மா என்று அழைக்கப்பட்டது.
சிந்துகேட் ராஜா : இந்த நகரத்தை சிந்துராம மன்னரின் பெயரிலிருந்து இந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது. இந்த பகுதி சித்தர்களின் புனித பூமியாக (சித்த ஷேத்ரா) என்று அழைக்கப்பட்டதால் கூட இந்த பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.
நாண்டேட் : இந்த நகரம் முன்பு நந்திதாதா என்று அழைக்கப்பட்டது. மற்றொரு பெயர் நந்திகிராமம் என்றும் கூறப்பட்டது. சிவனின் வாகனமான நந்தியில் இருந்து இந்த ஊரின் பெயர் உருவானதாக கூறுவர். சிவன் கோதாவரி கரையில் தவம் செய்ததாக கூறப்படுகிறது. நந்தி தாடா என்ற பெயர் மருவி நாண்டேட் என்றானது.
வார்தா : இங்கு ஓடும் வார்தா நதியின் பெயரால் இந்த ஊருக்கும் வார்தா என்ற பெயர் வழங்கலாயிற்று.
யவத்மால் : மராத்திய மொழியில் யாவத் என்றால் மலை என்றும் மால் என்றும் வரிசை என்றும் பொருளில் இருந்து வந்ததாகக் கூறுவர். யவதேஷ்வர் (சிவன்) மால் (பீடபூமி) என்ற பொருளில் வந்ததாகக் கூறுவர்
சாங்கிலி : நகரத்தின் அசல் பெயர் சககல்லி என்பதாகும். சஹா என்றால் ஆறு என்றும் கல்லி என்றால் பாதைகள் என்ற அர்த்தத்தில் ஊருக்கு பெயர் வந்தது மருவி சங்கிலி என்றானது.
சதாரா : நகரை சுற்றி அமைந்துள்ள ஏழு கோட்டைகளின் காரணத்தால் சாத் - ஏழு என்றும் தாரா - கோட்டை என்பதிலிருந்து சத்தாரா என்ற ஊருக்கு பெயர் வந்தது.
கல்யாண் : இங்குள்ள துர்காவதி கோட்டையில் உள்ள துர்கா தேவி கோயிலுக்கு வருகை தந்த சத்குரு சமர்த்த ராம்தாஸ் சுவாமியின் சீடரான கல்யாண் சுவாமிகளின் பெயரால் நகருக்கு கல்யாண் என்று பெயர் வந்ததாக கூறுபவர். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கல்லியன், குல்லியன் அல்லது கலியாணி என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேனா : இந்த நகரின் பெயர் பெணே, பெனே என்ற சொற்களில் இருந்து வந்தது. அதாவது ஓய்வெடுக்கும் இடம் என்ற பொருளில் வந்ததாகக் கூறுவர்.
நந்துற்பார் : இதன் பழைய பெயர் ரசிகா என்பதாகும். அந்த மன்னர் நந்தராஜாவின் பெயரால் நந்தனகிரி என்று அழைக்கப்பட்ட பெயர் நந்துற்பார் என்றானது.
பீட்: புராண காலத்தில் இது துர்காவதியாக இருந்தது. பின்னர் பல்னி என்ற பெயர் மாற்றப்பட்டது. விக்ரமாதித்யனின் சகோதரியான சம்பவவதியின் பெயரால் சம்பவதிநகர் என்ற பெயர் மாற்றப்பட்டது. பாலகாட் மலைத்தொடரின் அடிவாரத்தில் குழியில் அமைந்திருப்பது போல் உள்ளது என்ற பெயர் வந்தது மருவி பீட் என்று கூறுகின்றனர். ஆரம்ப காலத்தில் மிகக்குறைந்த ஆழத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்த பாரசீகர் பீர் (பாரசீக மொழியில் நீர் என்று பொருள்படும்) என்று பெயரிடவே மருவி பீட் என்று கூறுகின்றனர்.
உஸ்மானாபாத் (தாராஷிவ்) :
ஹைதராபாத்தின் கடைசி நிஜாமான மீர் உஸ்மான் அலிகான் பெயரால் உஸ்மானாபாத் என்று அழைக்கப்பட்டது. தற்போது அதன் பெயரான தாராஷிவ் என்ற பெயர் தாராஷிவ் குகைகளில் இருந்து வந்தது.

Comments
Post a Comment