1) சென்னை

ஊர்களை பற்றி படிப்பதற்குள் 5 வகை நிலப்பகுதிகள் மற்றும் அதை சார்ந்த இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன என்பதைப் பற்றி பார்ப்போம்.

மலையும் மலை சார்ந்த இடங்கள் குறிஞ்சி நிலங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த நிலப்பரப்பு உள்ள ஊர்களுக்கு "குறிச்சு" என்ற பொதுப்பெயரால் வழங்கப்பட்டது. 

காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த நிலப்பரப்பு கொண்ட ஊர்கள் பாடி & சேரி என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.

வயலும் வயல் சார்ந்த இடங்கள் மருதம் நிலங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த நிலப்பரப்பில் அமைந்த ஊர்கள் ஊர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

கடலும் கடலை சார்ந்த பகுதிகளும் நெய்தல் நிலங்கள் என்று அழைக்கபப்ட்டன. இந்த நிலப்பரப்பில் அமைந்த ஊர்கள் பட்டினம், பாக்கம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.

இந்த 4 வகை நிலங்களும் திரிந்து போவது தான் பாலை நிலங்கள். இந்தப் பாலை நிலப்பகுதி ஊர்கள் "பறந்தலை" என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

மக்கள் வாழுமிடங்களுக்கு ஏற்பட்ட பொதுவான பெயர் :

சோலைக்காடுகள் அமைந்த ஊர் - "சோலை" - மதிகெட்டான் சோலை

துறைமுகங்கள் அமைந்த ஊர் - "துறை" - காங்கேசன் துறை

வழிப்போக்கர்கள் தங்கும் இடம் கொண்ட ஊர் - "சாவடி"

வழிப்போக்கர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் சாவடி கொண்ட ஊர்கள் - "சத்திரம்"

அரசனுக்கு வரிவசூல் செய்து போரில் உதவி செய்ய பிற தலைவரால் குத்தகைக்கு மாதிரி விடப்பட்ட ஊர்கள் - "பாளையம்"

பார்ப்பனர்கள்/அந்தணர்கள் குடியிருப்பு அமைந்த ஊர்கள் - "மங்கலம்"- சதுர்வேதி மங்கலம்

மேட்டுபாங்கான இடத்தில் அமைந்த ஊர் - "மேடு"

இடம் விட்டு இடம் பெயர்ந்து குடியேற்ற பகுதிகளாக நிறுவப்பட்ட ஊர்கள் - "வலசை'

காட்டுப்பகுதியில் அமைந்த குடியிருப்பு ஊர்கள் - "வனம்"

தெலுங்கு,கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்ந்த ஊர்கள் - "வாடி"

மேய்ச்சல் நிலங்கள் கொண்ட ஊர்கள் - "பட்டி" "தொட்டி"

மன்னர்/தலைவர்/இறைவன் மற்றும் வணிகர் வாழுமிடங்கள் கொண்ட ஊர் - "புரம்/புரி"

புன் செய் நிலங்கள் அமைந்த இடங்கள் - புஞ்சை

மக்கள் வாழும் தூய்மையான பகுதி - "மங்கலம்"

குடியானவர்களாக வாழும் ஊர்கள் - "குடி"

மீனவர்கள் வாழ்ந்த ஊர்கள் - "குப்பம்"- அயோத்திகுப்பம்

மலை அடிவாரத்தில் அமைந்த ஊர்கள் - "கோம்பை"

சாலை/கல்விக்கூடம்/உணவு அளிக்கும் தரும சத்திரம் அமைந்த ஊர்கள் - "சாலை"

மக்கள் சேர்ந்து வாழும் இடங்கள் - "சேரி"

பேரூர்கள் - "நகரம்"

ஒரு ஊர் அழிந்து அந்த இடத்திலிருந்து மீண்டும் குடியேற்றம் நடைபெற்ற ஊர்கள் - "நத்தம்"

கல் குன்றுகள் அமைந்த ஊர்கள் - "கல்"

மக்கள் கூடி வாழும் சிற்றூர் - "கிராமம்"

இனி ஒவ்வொரு ஊர்களுக்கும் அந்த பகுதிகளுக்கும் பெயர் உண்டான விதத்தையும் பழைய/புது பெயர் காரணங்களையும் பார்ப்போம்

ஊர்களை பற்றி படிப்பதற்குள் 5 வகை நிலப்பகுதிகள் மற்றும் அதை சார்ந்த இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை பற்றி பார்ப்போம்.

மலையும் மலை சார்ந்த இடங்கள் குறிஞ்சி நிலங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த நிலப்பரப்பு உள்ள ஊர்கள் "குறிச்சு" என்ற  பொதுப்பெயரால் வழங்கப்பட்டது. 

காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த நிலப்பரப்பு கொண்ட ஊர்கள் பாடி & சேரி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது.

வயலும் வயல் சார்ந்த இடங்கள் மருதம் நிலங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த நிலப்பரப்பில் அமைந்த ஊர்கள்  ஊர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

கடலும் கடலை சார்ந்த பகுதிகளும் நெய்தல் நிலங்கள் என்று அழைக்கபப்ட்டன. இந்த நிலப்பரப்பில் அமைந்த ஊர்கள் பட்டினம், பாக்கம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது.

இந்த 4 வகை நிலங்களும் திரிந்து போவது தான் பாலை நிலங்கள். இந்த பாலை நிலப்பகுதி ஊர்கள் "பறந்தலை" என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

மக்கள் வாழுமிடங்களுக்கு ஏற்பட்ட பொதுவான பெயர் :

சோலைக்காடுகள் அமைந்த ஊர் - "சோலை" - மதிகெட்டான் சோலை

துறைமுகங்கள் அமைந்த ஊர் - "துறை" - காங்கேசன் துறை

வழிப்போக்கர்கள் தங்கும் இடம் கொண்ட ஊர் - "சாவடி"

வழிப்போக்கர்களுக்கு உணவும் தயாரித்து வழங்கும் சாவடி கொண்ட ஊர்கள் - "சத்திரம்"

அரசனுக்கு வரிவசூல் செய்து போரில் உதவி செய்ய பிற தலைவரால் குத்தகைக்கு மாதிரி விடப்பட்ட ஊர்கள் - "பாளையம்"

பார்ப்பனர்கள்/அந்தணர்கள் குடியிருப்பு அமைந்த ஊர்கள் - "மங்கலம்"- சதுர்வேதி மங்கலம்

மேட்டுபாங்கான இடத்தில் அமைந்த ஊர் - "மேடு"

இடம் விட்டு இடம் பெயர்ந்து குடியேற்ற பகுதிகளாக  நிறுவப்பட்ட ஊர்கள் - "வலசை'

காட்டுப்பகுதியில் அமைந்த குடியிருப்பு ஊர்கள் - "வனம்"

தெலுங்கு,கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்ந்த ஊர்கள் - "வாடி"

மேய்ச்சல் நிலங்கள் கொண்ட ஊர்கள் - "பட்டி" "தொட்டி"

மன்னர்/தலைவர்/இறைவன் மற்றும் வணிகர் வாழுமிடங்கள் கொண்ட ஊர் - "புரம்/புரி"

புன் செய் நிலங்கள் அமைந்த இடங்கள் - புஞ்சை

மக்கள் வாழும் தூய்மையான பகுதி - "மங்கலம்"

குடியானவர்களாக வாழும் ஊர்கள் - "குடி"

மீனவர்கள் வாழ்ந்த ஊர்கள் - "குப்பம்"- அயோத்திகுப்பம்

மலை அடிவாரத்தில் அமைந்த ஊர்கள் - "கோம்பை"

சாலை/கல்விக்கூடம்/உணவு அளிக்கும் தரும சத்திரம் அமைந்த ஊர்கள் - "சாலை"

மக்கள் சேர்ந்து வாழும் இடங்கள் - "சேரி"

பேரூர்கள் - "நகரம்"

ஒரு ஊர் அழிந்து அந்த இடத்திலிருந்து மீண்டும் குடியேற்றம் நடைபெற்ற ஊர்கள் - "நத்தம்"

கல் குன்றுகள் அமைந்த ஊர்கள் - "கல்"

மக்கள் கூடி வாழும் சிற்றூர் - "கிராமம்"

இனி ஒவ்வொரு ஊர்களுக்கும் அதன் பகுதிகளுக்கும் பெயர் உண்டான விதத்தையும் பழைய/புது பெயர் காரணங்களையும் பற்றி பார்க்கலாம்.

சென்னை:

இன்றைய சென்னை சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்று பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் கி.பி.1639ல் தாமல் சென்னபசவ நாயக்கரிடம் 10000/- ரூபாய்க்கு கடற்கரையை ஒட்டிய 3 மைல்கள் இடத்தை வாங்கி சென்னப்பட்டினம் என்ன பெயருடன் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள்.

கடலோரத்தில் வாழ்ந்த மீனவ தலைவனின் பெயரான "மதராசன்" என்பதிலிருந்து மதராசபட்டினம் அல்லது மதராஸ் என்றும் அழைக்கப்பட்டதாக கூறுவர். 

போர்த்துகீசிய வணிகனின் பெயரான மெட்ரா (Madra) என்ற பெயரிலிருந்து மெட்ராஸ் என்றும் அழைக்கப்பட்டது என்றும் கூறுவர்.

மேடு என்பதிலிருந்து மேடுராசபட்டினம் என்று அழைக்கப்பட்டு மதராசபட்டினம்என்று மருவியது என்றும் கூறுவர்.

முகமதியர் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியவாறு இருந்ததால் மதராஸே என்று அழைக்கப்பட்டு பின்னர் மதராஸ் என்றானது என்றும் கூறுவர்.


அம்பத்தூர்:   108 சக்தி ஸ்தலங்களில் ஐம்பதாவது ஊர் என்று அழைக்கப்பட்டு அதிலிருந்து மருவி பிற்காலத்தில் அம்பத்தூர் என்று பெயர் மாற்றம் பெற்றது.

குரோம்பேட்டை:   Chrome Leather Factory இந்த பகுதிகளில் அதிக அளவில் முன்பு இயங்கி கொண்டிருந்தது. அதனால் குரோம்பேட் என்று அழைக்கப்பட்டு இன்று குரோம்பேட்டை என்றாகியது.

ஆவடி:   இந்த பகுதியில் கனரக தொழிற்சாலையான "Armoured Vehicles And Depot of India" அமைந்திருந்த காரணத்தால் அதன் பெயர் சுருக்கமாக (AVADI) ஆவடி என்றாகியது

தேனாம்பேட்டை:   தென்னை மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் தென்னம்பேட்டை என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி தேனாம்பேட்டை என்று பெயர் மாற்றம் பெற்றது.

 தெய்வநாயகம் முதலியார் வசித்த ஊராக தெய்வநாயகம் பேட்டை என்று இருந்த மருவி தென்னம்பேட்டை என்றாகி தேனாம்பேட்டை என்றாகியது என்றும் சொல்லுவர்.

சைதாப்பேட்டை:   குதிரை வியாபாரியான சையிது அகமது கான் அடையாறு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டியதால் சையது ஷா பேட்டை என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பின்னர் மருவி சைதாப்பேட்டை என்ற மாற்றம் பெற்றது என்றும் கூறுவர்.

108 சிவாலயங்களை எழுப்பிய சதயு மன்னன் கட்டிய 108வது சிவாலயம் தான் இந்த இடத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் பேச்சுவழக்கில் சைதாப்பேட்டையாக மாறிவிட்டது என்றும் கூறுவர்.

சரபோஜி மன்னரின் தாயான சைதாம்பாளுக்கு சொந்தமான பெரும் நிலப்பகுதி இருந்ததால் சைதாப்பேட்டை என்று மாறியதாகவும் கூறுவர்.

சேப்பாக்கம்:   இந்த பகுதியில் ஆறு தோட்டங்கள் இருந்ததால் சே பாக் (Six gardens) என்ற உருது வார்த்தையினால் அழைக்கப்பட்டு மருவி சேப்பாக் என்றாகி சேப்பாக்கம் என்ற பெயர் உருவானது.  

பாண்டி பஜார்:   செளந்திர பாண்டியன் பஜார் என்ற பெயரில் பஜாராக இருந்த பெயர் சுருக்கமாக பாண்டி பஜார் என்றாகி அதுவே அந்த பகுதியின் பெயராக நிலைத்துவிட்டது.

கே.கே.நகர்:   கலைஞர் கருணாநிதி நகர் என்ற பெயரை தான் ஆங்கில எழுத்தில் KK Nagar என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

மாம்பலம்:  சிவபெருமானுக்கு பிரசாதமாக படைக்கப்படும் வில்வ மரங்கள் நிறைந்த பகுதியாக முன்பு இருந்த காரணத்தால் மகாவில்வம் என்று அழைக்கபப்ட்டது இந்த பகுதி. பின்னர் காலப்போக்கில் மருவி மாம்பலம் என்ற பெயரால் நிலைத்துவிட்டது.

மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் தங்கியிருந்த இடம் என்பதாலும் மாம்பலம் என்றானது என்றும் கூறுவர்.

பல்லாவரம்:  பசுக்களை வளர்க்கும் இடையர்கள் இருந்த பகுதி ஆதலால் பல் ஆ புரம் என்றும் பல்லவர்களின் ஆட்சியில் இருந்த காரணத்தால் பல்லவபுரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த பகுதி பிற்காலத்தில் பல்லாவரம் என்று மருவியது.

கோடம்பாக்கம்:   17ம் நூற்றாண்டுகளில் முஸ்ஸீம் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்த இடத்தில் நந்தவனமாக சோலை இருந்ததால் குதிரைகள் அதன் பசியை போக்க இங்கேயே நிறுத்தப்பட்டு "Garden of Horses" என்ற பொருள்பட Ghoda Bagh என்று உருது மொழியில் அழைக்கப்பட்டு பின்னர் மருவி கோடம்பாக் என்றாகி தமிழில் கோடம்பாக்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

பனகல் பார்க்:   மதராஸ் மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவை போற்றும் விதமாக பனகல் பார்க் என்று அழைக்கப்பட்டது.

தியாகராஜ நகர்:   நீதிக்கட்சி தலைவராக இருந்த சர்.பி.டி.தியாகராஜரின் நினைவாக தியாகராஜர் என்று பெயரிடப்பட்டது.

புரசைவாக்கம்:   புரசை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் புரசைவாக்கம் என்று பெயர் பெற்றது.

கொத்தவால்சாவடி:   கொத்தவால் என்னும் வரிவசூல் மையம் இருந்ததால் இந்த பெயர் வழங்கிற்று.

பிராட்வே:   சென்னையில் வசிக்க வேண்டுமென்றால் வரி கட்டவேண்டும் என்று முன்மொழிந்த ஆங்கிலேயர் பேப்பமன்ஸ் பிராட்வே நினைவாக அமைந்தது தான் பிராட்வே.

மாதவரம்:   மாதவன் ஈசனிடம் வரம் இடம் என்பதால் மாதவ வரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மாதவரம் என்று அழைக்கப்படுகிறது.

வளசரவாக்கம்:   முருகன் வள்ளியுடன் சேர்ந்த இடம் என்பதால் வள்ளி சேர் பாக்கம் என்ற அழைக்கப்பட்டது பின்னர் வளசரவாக்கம் என்று மருவியது.

முகலிவாக்கம்:  கோவூர் ஈசனின் மவுளி என்னும் கிரீடம் இருந்த இடம் என்பதால் மவுளிவாக்கம் என்று அழைக்கப்பட்டு தற்போது முகலிவாக்கம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

அயனாவரம்:   அயன் வரம் பெற்ற இடம் என்பதால் அயன் வரம் என்று அழைக்கப்பட்டது மருவி அயனாவரம் என்று அழைக்கப்படுகிறது.

மண்ணடி:   பள்ளமாக இருந்த இடத்தை நரிமேட்டில் இருந்து மண்ணடித்து சமமாக்கிய இடம் என்பதால் மண்ணடி என்று பெயராகியது.

குன்றத்தூர்:  குன்றுகள் நிறைந்த இடம் என்பதால் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

நந்தனம்:   மாம்பலத்தில் இருந்த சிவன் கோயிலுக்குச் நந்தவனம் இருந்த இடம் என்பதால் நந்தவனம் மருவி நந்தனம் என்றாகியது.

யானைகவுனி:   திருக்குடை வைபவத்தில் பெருமாள் யானை போல் ஓடி தாண்டிய இடம் என்பதால் யானை கவுனி என்று பெயராகியது.

சேத்துப்பட்டு:   குயவர்கள் மண்ணை குழைத்து சேறாக்கி மாட்டு வண்டியில் ஏற்றிய இடம் என்பதால் சேற்றுப்பட்டு என்று அழைக்கப்பட்டு தற்போது சேத்துப்பட்டு என்று மருவியது.

சிந்தாரிப்பேட்டை:   பிரிட்டிஷ் ஆட்சியில நெசவாளர்கள் சின்னதறிகளை போட்டு நெசவு செய்த இடம் என்பதால் சின்னதறிப்பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் சிந்தாரிப்பேட்டை என்றும் பெயராகியது.

திரிசூலம்:   திரிசூல நாதர் கோவில் அமைந்த ஊர் என்பதால் திரிசூலம் என்று அழைக்கப்பட்டது.

பாரி முனை:   தாமஸ் பாரி என்ற ஆங்கிலேய வணிகர் வாணிகம் செய்த ஊர் என்பதால் பாரி முனை என்ற பெயரால் அழைக்கப்பட்டது

கிண்டி:   விகடக்கூத்து ஆடும் தேவதாசி பெண்களான கோட்டாள கொண்டி பெண்கள் வாழ்ந்த பகுதி என்பதால் கொண்டி என்று அழைக்கப்பட்டு பின்னர் தற்போது கிண்டி என மருவியுள்ளது.

ப்ருங்கி முனிவர் தனது தவ காலத்தில் பூஜைக்கான கிண்டியை பொருத்திய இடம் என்பதால் கிண்டி என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

ராயபுரம்:   பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு (அமைச்சர்கள்) தானமாக வழங்கப்பட்ட பகுதி என்பதால் ராயர் புரம் என்று அழைக்கப்பட்டு இன்று ராயபுரம் என்றாகியுள்ளது.

எழும்பூர்:   மேட்டு பகுதியாக இருந்ததால் சூரியன் முதலில் உதிக்கும் (எழும்) பகுதியாக இருந்ததால் எழும் ஊர் என்றும் எழுமீஸ்வரர் கோயில் உள்ள பகுதி என்பதாலும் எழும் ஊர் என்பது எழும்பூர் என அழைக்கப்படுகிறது.

பெரம்பூர்:  பிரம்பும் மூங்கிலும் அடர்ந்த ஊராக இருந்ததால் பிரம்பூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் பெரம்பூர் என்று அழைக்கப்படுகிறது.

மந்தைவெளி:   ஆடு மாடுகள் மேய்ந்த மைதான பகுதி என்பதால் மந்தைவெளி என்று அழைக்கப்பட்டது.

போரூர்:   முருகன் போர் நடத்தி திருமணம் செய்த ஊர் என்பதாலும் போரூர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

மயிலாப்பூர்:   மயிலை என்னும் பூக்கள் நிறைந்த பகுதி என்பதாலும் மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் என்ற பெயரில் மயிலாப்பூர் என்ற பெயராகியது.

தண்டையார் பேட்டை:   ராமநாதபுரம் தொண்டியில் இருந்து வந்த முஸ்ஸீம் துறவியான குணங்குடி மஸ்தான் சாகிப் வாழ்ந்த பகுதி என்பதால் தொண்டையார் பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் தண்டையார் பேட்டை என்று மருவி அழைக்கப்படுகிறது.

பூந்தமல்லி :   மல்லிகைப்பூக்கள் நிறைந்த தோட்டம் கொண்ட பகுதி. இங்கிருந்து திருக்கச்சி நம்பி ஆழ்வார் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு தினமும் பூ எடுத்து செல்வார். அதனால் இந்த பகுதிக்கு புஷ்பகவல்லி என்று பெயர். தமிழில் பூவிருந்தவல்லி என்று அழைக்கப்பட்டு பூந்தமல்லி என்று மருவி அழைக்கப்படுகிறது.

முகப்பேர்:   கூவம் ஆற்றின் பழைய பெயர் நுளம்பியாறு. அதன் கரையில் அமைந்த திருவேங்கட பெருமுடையார் கோவில் சந்தான சீனிவாச பெருமாள் என்று அழைக்கப்பட்டு சந்தனம் என்பதற்கு மகப்பேறு என்று பொருளில் முகப்பேர் என்று மருவியது.

ஈக்காட்டுதங்கல்:   வருடத்தில் ஒரு நாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே இரவு தங்கலுக்கு வருவாராம். எங்கு பார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டுக்குள் நடுவே இருந்த சோலையில் தங்குவார். ஈர காடு தங்கல் என்று அழைக்கப்பட்டு மருவி ஈக்காட்டுதங்கல் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

ராமாபுரம்:   ராம பிரான் தங்கிய பூஞ்சோலை என்பதால் ராமாபுரம் என்று அழைக்கப்படுகிறது.

அமிஞ்சிகரை:   ராமபிரான் லவ,குசாவிடம் போரிட்டு தோற்று அமர்ந்த இடம் என்பதால் அமர்ந்தகரை என்று அழைக்கப்பட்டு அமைந்தகரை என்று மருவி தற்போது அமிஞ்சிகரை என்று அழைக்கப்படுகிறது.

பரங்கிமலை:   பரங்கியர் என்பது ஆங்கிலேயர் மற்றும் போர்த்துகீசியர்களுக்கு வைத்த பெயர். அவர்கள் St.Thomas Mountல் தங்கியதால் அந்த மலைக்கு பரங்கிமலை என்று பெயர் வந்தது.

ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவன் கோவில் அமைந்த இடம் என்பதாலும் ப்ருங்கி மலை என்று பெயராலும் முன்பு அழைக்கப்பட்டதாக கூறுவர்.

பெருங்களத்தூர்:   பெரிய விவசாய நிலப்பரப்பான இடங்களை கொண்ட இந்த இடம் தன்னகத்தே பெரிய பெரிய நீர் நிரம்பிய குளங்களை கொண்டிருந்த காரணத்தால் பெரிய குளத்தூர் என்று அழைக்கப்பட்டு இன்று மருவி பெருங்களத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

திருவான்மியூர்:   புற்றுகள் நிறைந்த இடமாக இருந்ததால் வான்மீகம் என்பதற்கு புற்று என்று பொருளில் திருவான்மியூர் என்று அழைக்கப்படுகிறது.

மெரீனா கடற்கரை: ‌ சென்னை ஆளுநராக இருந்த சர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டன் கிராண்ட்டப் என்பவரால் மெரீனா என்று பெயரிடப்பட்டது. மெரீனா என்ற சொல் இத்தாலிய மொழியில் இருந்து வந்தது. அதற்கு "கடலை ஒட்டிய நடை பயிலும் உல்லாசச் சாலை" என்பது பொருள்.

கத்திபாரா:  பாரா என்றால் காவல் என்று பொருள். பிரிட்டிஷ் ஆட்சியில் காவலர்கள் கையில் தடியை வைத்துக்கொண்டு பாரா உஷார் என்று அருகிலுள்ள காவலர்களுக்கு சிக்னல் கொடுப்பார்கள். அந்த கால பரங்கிமலை கண்டோன்மெண்ட் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததால் இராணுவ வீரர்கள் தடிக்கு பதில் கத்தியை வைத்து காவல் காத்ததால் அந்த பகுதிக்கு கத்திபாரா என்ற பெயர் நிலைத்தது.

திருவல்லிக்கேணி:   அல்லி பூக்கள் நிறைந்த குளம் பார்த்தசாரதி கோயிலுக்கு எதிர்ப்புறம் இருந்ததால் கேணி என்பதற்கு குளம் என்ற பொருளில் திருவல்லிக்கேணி என்று பெயர் வழங்கலாயிற்று.

வேளச்சேரி:   முற்காலத்தில் வேதஸ்ரேணி என்ற பெயரில் அழைக்கப்பட்டு தற்போது மருவி வேளச்சேரி என்ற அழைக்கப்படுகிறது.

செங்கல்பட்டு:   செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை கொண்ட பகுதி என்பதால் செங்கழுநீர் பட்டு என்று அழைக்கப்பட்டது மருவி செங்கல்பட்டு என்றாகியது.

ஶ்ரீபெரும்புதூர்:   அசுர பூதகணங்களால் அமைக்கப்பட்ட சிவாலயம் அமைந்த ஊரான சிவபுரி தற்போது ஶ்ரீபெரும்புதூர் என்று அழைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் :   காஞ்சி மவர்கள் அதிகமாக இருந்த காரணத்தால் காஞ்சி என்று அழைக்கப்பட்டது. பின்னர் பல்லவர்கள் காலத்தில் காஞ்சிவரம் என்று அழைக்கப்பட்டு காஞ்சிபுரம் என்றானது என்று கூறுகின்றனர்.

காஞ்சியில் நெசவு தொழிலாளர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களுக்கு நூல்நூற்பு தான் தொழில். அதனால் கை கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தால் தொழில் நடக்கும். அதனால் உணவுக்கு கஞ்சி வரும் என்ற பொருளில் கஞ்சி வரும் என்பது கஞ்சிவரம் என்றாகி மருவி காஞ்சி வரமாகி கடைசியில் காஞ்சிபுரமாக ஆனதாகவும் கூறுகின்றனர்.

மதுராந்தகம்:   இராஜராஜ சோழனுக்கு முன்பு ஆட்சியில் இருந்த அவரது சித்தப்பாவான மதுராந்தக உத்தம சோழரின் ஆட்சியில் அவரது பெயரால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று பெயர் ஏற்பட்டது. பின்னர் இது மருவி மதுராந்தகம் என்றானது.

மாமல்லபுரம் :   வாதாபியை எரித்து இரண்டாம் புலிகேசியை வென்ற மன்னனான நரசிம்ம பல்லவனுக்கு "மாமல்லன்" என்ற பெயர் உண்டு. மல்யுத்த விளையாட்டில் மல்யுத்த வீரர்களை வென்றதால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அவரால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் மாமல்லை என்றும் மாமல்லபுரம் என்றும் இந்த ஊருக்கு பெயர் ஏற்பட்டது. மகாபலிபுரம் என்ற பெயர் தவறானது என்றும் கூறுவர்.

புதுச்சேரி :   புதுச்சேரி என்ற பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி. இங்குள்ள இறைவன் வேதபுரீஸ்வரர் கோயிலின் பெயரால் வந்த பெயர். 18ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் ஆளுநர் தூப்ளே அவரது மனைவியான ழான் தூண்டுதலால் வேதபுரீஸ்வரர் கோயிலை இடித்து தரைமட்டமாக்கினார். இது பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததால் தவறுதலான உச்சரிப்பால் பாண்டிச்சேரி என்றும் புதுச்சேரி என்ற பெயராலும் அழைக்கப்பட்டது

காரைக்கால் :   கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் காரை செடிகள் காடு போல் வளர்ந்திருந்த காரணத்தால் காரைக்காடு, காரைவனம் என்று அழைக்கபப்ட்டு மருவி காரைக்கால் என்று வந்திருக்கலாம் என்று கூறுவர்.

கடலூர் :   இந்த மாவட்டத்தின் வழியே பாயும் பெரிய நதிகளான பெண்ணையாறு, கெடிலம் மற்றும் பரவனாறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடலாக கூடி கடலில் கலக்கும் இடம் என்பதால் கூடலூர் என்று அழைக்கப்பட்டது மருவி கடலூர் என்றானது என்று கூறுவர்.

ஆறுகள் கடலில் கலக்கும் இடம் என்பதால் கடல்+ஊர் என்பது கடலூர் என்றானது என்றும் கூறுவர்.

விழுப்புரம் :   எப்போதும் விழித்துக்கொண்டு இருக்கும் ஊர், அறியாமையில் இருந்து விழிப்பை தரக்கூடிய ஊர் என்பதால் விழுப்புரம் என்று பெயர் வந்தது என்று கூறுவர்.

விழுமியபுரம் மருவி விழுப்புரம் என்றானது என்றும் கூறுவர்.

ராமன் வில்லை பிடித்து பொன்மானை நோக்கி அம்பெய்த இடம் என்பதால் இந்த இடத்திற்கு வில்லுப்புரம் என்று பெயர் வந்து மருவி விழுப்புரம் என்றானது என்றும் கூறுவர்.

விழுப்பரையன் என்ற சிற்றரசர் ஆண்ட காரணத்தால் இது விழுப்புரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். இராஜராஜ சோழனுக்கு ஜனநாதன் என்று பெயர் உண்டு. அவர் பெயரிலேயே இது ஜனநாத மங்கலம் என்றும் முன்னர் அழைக்கப்பட்டது.

வேடந்தாங்கல் :   ஆங்கிலேயர் காலத்தில் இங்கு வரும் பறவைகளை வேட்டையாட இங்கு வேடர்கள் தங்கினர். அதனால் வேடர்கள் தங்கல் என்ற பொருளில் இந்த ஊருக்கு வேடந்தாங்கல் என்ற பெயர் ஏற்பட்டது


Comments

Popular posts from this blog

35) அந்தமான் & நிகோபார் தீவுகள்

34) லட்சத்தீவுகள்

31) நாகாலாந்து